தேவநாதனுக்கு எதிராக குவியும் புகார்களை பெற காவல்துறை சிறப்பு முகாம். மைலாப்பூர் நிதி நிறுவனம் மூலம் ரூ. 500 கோடி சுருட்டிய வழக்கில் தேவநாதனுக்கு எதிராக புகார் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மூலம் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் வளாகத்தில் இன்று காலை நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாமில், மனு அளிக்க திரண்டு வந்த கூட்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடியை போன்று குற்றவாளி தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 4 பேரும் தப்பிவிடக் கூடாது என்பதற்காக இந்த நிதி நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு வெல்ஃபேர் அசோசியேஷனை உருவாக்கி, அதன்மூலம் காவல்துறை உதவியோடு இந்த சிறப்பு முகாமை நடத்தி வருகின்றனர்.
இதுவரை தேவநாதனுக்கு எதிராக 4000 பேர் புகார் அளித்துள்ளனர், இந்த நிறுவனத்தில் ரூ, 256 கோடி முதலீட்டு பணம், ரூ, 300 கோடி பெறுமான தங்கம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் பாஜகவில் வேட்பாளராக களமிறங்கிய தேவநாதன், இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அவரது சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை பாதிக்கப்பட்ட மயிலாப்பூர் நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் வரவேற்றுள்ளனர்.
14:09:24 மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது! பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களுடன் புகார் அளிக்க தி மயிலாப்பூரில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் 24 கோடி மோசடி என புகார்!
நிதியின் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக தேவநாதன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு! தேவநாதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு.
கைது செய்யப்பட்ட தேவநாதன் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டவர்.நிதி நிறுவனம் நடத்தி 300 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக புகார்கள் குவிந்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு தந்த ஏராளமான காசோலைகளும் வங்கியில் பணம் இன்றி திருப்பி வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார். மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவர 3,814 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்!