கோவை பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் உட்பட அவரது நண்பர்கள் போதையில் சென்று பிரபல ஹோட்டலில் டிஸ்கோத் டான்ஸ் ஆட அனுமதி கேட்ட விவகாரத்தில் அடிதடி ஏற்பட்டு பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ரேஸ்கோர்ஸில் அமைந்துள்ள ஒரு பிரபல ஓட்டலில் சிறப்பு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு ஜோடியாக வரும் தம்பதிகளுக்காக நடத்தப்படும் டிஸ்கோத்தேவில் கலந்து கொள்ள ஜோடி இல்லாமல் வந்த நான்கு பேர் நடன நிகழ்ச்சி நடந்த அரங்குக்குள் செல்ல முயற்சித்தனர்.
அவர்களிடம் இந்த டிஸ்கோத்தின்த்தின் விதிமுறையை விளக்கமாக விரிவாக அந்த ஓட்டல் ஊழியர்கள் சொன்னார்கள். ஜோடியாக வந்தால் மட்டுமே தான் இங்கு அனுமதி’ என்றனர்.
பெண் ஜோடிகள் இல்லாமல் தனியாக வந்த அந்த நபர்கள் கடுப்பாகி போனார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார்கள். நாங்கள் ‘டிக்கெட் வாங்கிக்கொள்கிறோம் கூடுதலாகவும் பணம் செலுத்தவும் தயாராக இருக்கிறோம். உள்ளே அனுமதித்தால் மட்டும் போதும்’ என்றனர்.
அந்த டிஸ்கோத்தின்த்தில் கலந்து கொள்ள பரிதவித்த அவர்களின் கோரிக்கையை ஓட்டல் ஊழியர்கள் ஏற்கவில்லை. இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வெறி பிடித்த அந்த நபர்களை ஓட்டல் ஊழியர்கள் சுற்றிவலைத்து கும்மாங்குத்து குத்தி.. கீழே தள்ளி புரட்டி புரட்டி ஃபுட்பால் ஆடினார்கள். அந்த காட்சி மிகவும் பரபரப்பாக இருந்தது…
ஜோடிகளின் தண்ணீ பார்ட்டி நிகழ்ச்சி பார்க்க வந்த இந்த குடிகார கோமாளிகளை ஹோட்டல் ஊழியர்கள் அடித்து நொறுக்கிய காட்சியை பார்ப்பதற்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாய் கூடியது.
இந்த அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளை அறிந்த அந்தப் பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு ஓடோடி வந்தனர். கூத்துப் பார்க்க வந்தவர்களை கும்மாங்குத்து குத்தியது போதாது என்று அந்த ஜோடிகளின் டிஸ்கோத்தின்த்தே நடைபெற்ற ஓட்டல் கணக்குப்பிள்ளை போலீஸாரிடம் புகார் அளித்தார்..
இந்த சூப்பர் ஃபைட் தொடர்பாக, லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெரீஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஹோட்டலில் இருக்கும் சிசிடிவி கேமராவில் அவர்கள் அடி வாங்கிய கும்மாங்குத்து ஃபைட் காட்சி பதிவாகி உள்ளது.
ஹோட்டல் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அனல் பறக்கும் சண்டை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக அடி உதை வாங்கிய நால்வரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த குத்துச்சண்டை வழக்கில்… சிக்கியுள்ளவர்கள் யார் யார் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஜான்சன், பிஜேபி…யின் சிறுபான்மையினர் பிரிவின் கோவை மாவட்ட தலைவர்.. என்பது குறிப்பிடத்தக்கது. பிஜேபியினர் அடிவாங்கிய சம்பவத்தை எதிரி கட்சிகள் கிண்டல் அடித்து சொல்கிறார்கள். இந்த சம்பவம் கோவை மாவட்ட பிஜேபிக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.