பல மணிநேரம் போதையை தரும் ஹைபிரிட் கஞ்சாவை சொகுசு காரில் கடத்தி சென்ற கேரளா நடிகையை போலீசார் அதிரடியாக கைது செய்து 2கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சாதாரண கஞ்சா கிராம் 300 ரூபாய் என்றால் ஹைபிரிட் கஞ்சா கிலோ பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது என்கிறார்கள் போலீசார்.

பரோஸ், நடிகை தஸ்லிமா சுல்தான்.
அவர்கள் பேக்கில் மூன்று பொட்டலங்களாக வைத்திருந்த மூன்று கிலோ ஹைபிரிட் கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், மலையாள நடிகர்கள் ஸ்ரீநாத்பாஸி, ஷைண்டோம் சாக்கோ உள்ளிட்ட நடிகர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்ததாக தெரியவந்துள்ளது. அவர்களுடன் பணபரிமாற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் தஸ்லிமாவின் மொபைல் போனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி போலீஸ் துணை கமிஷனர் வினோத்குமார் கூறுகையில், “இரு வகைகளைச் சேர்ந்த கஞ்சாக்களை ஒன்றாக சேர்த்து பயன்படுத்தி ஹைபிரிட் கஞ்சாவாக தயாரிக்கப்படுகிறது. இவை பல மணிநேரம் நீடித்த போதையை தரும். மார்கெட்டில் சாதாரண கஞ்சா விலை கிராம் 300 ரூபாய் என்றால் ஹைபிரிட் கஞ்சா விலை கிலோ பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இபோது பிடிக்கப்பட்ட கஞ்சா சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. ஆலப்புழாவில் சுற்றுலா பகுதிகளை மையமாகக்கொண்டு ஹைபிரிட் கஞ்சா விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவர்கள் பெங்களூரில் இருந்து வாங்கி வந்து கேரளாவில் மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.
தஸ்லிமா சுல்தான் இதற்கு முன்பு எர்ணாகுளத்தில் மசாஜ் பார்லர் நடத்தி வந்தார். அப்போது சிறுமி ஒருவருக்கு போதைபொருள் கொடுத்து தகாத முறையில் நடந்துகொண்டதாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறோஸ் கடந்த 3 ஆண்டுகளாக போதைப்பொருட்கள் கடத்தி வருவது தெரியவந்துள்ளது. இவர்களை பிடிப்பதற்காக மூன்று மாதங்களாக கண்காணித்து வந்தோம். அவர்களின் சொத்து விபரங்களை கணக்கெடுத்து விசாரணை நடத்த உள்ளோம்” என்றார்.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த தஸ்லிமா சுல்தான் தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், ஸ்கிரிப் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். அதன்மூலம் மலையாள சினிமாவிலும் தொடர்பு கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து கொச்சியில் வசித்த அவர் மூன்று மலையாள சினிமாக்களில் நடித்துள்ளார். திருக்காக்கரையில் மசாஜ் செண்டர் நடத்தி வந்தவர் போக்ஸோ வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து மீண்டும் தமிழ்நாட்டுக்கு வசிப்பிடத்தை மாற்றினார். கொச்சி, கோழிக்கோடு, மங்ளூரு நகரங்களில் போதைப்பொருள் கடத்துவதில் முக்கிய இடம் வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னைக்கு ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பெங்களூர் வழியாக ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுகிறது கடந்த ஆண்டு மட்டும் காட்பாடி ரயில் நிலையத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன வட மாநிலத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரக்கோணம் திருவள்ளூர் திருநின்றவூர் ஆவடி அம்பத்தூர் வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் கஞ்சா அதிக அளவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி அருகே இந்த கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. எனவே போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க தனியாக ஒரு போலீஸ் குழுவை அமைக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.