#christian decorations vandalized in Raipur ; சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கிறிஸ்துவ அலங்காரங்கள் சிதைப்பு. இந்து தீவிரவாதிகள் அட்டகாசம்.

December 25, 2025

By ச. ஜெனித்

அன்பையும் கருணையும் போதித்த இயேசு பெருமான் பிறந்த இந்த நன்னாளில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்து செய்தியை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.  இந்த நிலையில் சென்னை சாந்தோம் ஆலயம், பெசன்ட் நகர் ஆலயம் அதேபோல மதுரை, நெல்லை, கோவை, போன்ற பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் என்னும் மாவட்டத்தில் உள்ள மாலில் புகுந்த இந்து மத தீவிரவாதிகள் அங்கு உள்ள கிறிஸ்மஸ் தாத்தா படங்கள், பொம்மைகள், அலங்காரங்களை அடித்து உதைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.

இதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்திலையும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்காக கூடியிருந்த கூட்டத்தை இந்துத்துவவாதிகள் இங்கு கிறிஸ்துமஸ் விழா நடத்தக் கூடாது என்று அந்த இடத்திலிருந்து ஆபாசமான வார்த்தைகளால் பேசி அடித்து துரத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் முழுவதும் கடும் கண்டனம் எழுந்து உள்ளது.

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் விஷ்னு டியோ சாய்.

எனவே தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த சம்பவத்திற்கு கடும் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அதை வன்மையாக கண்டிக்கும் வகையில் பார்லிமென்டில் பெரும் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர் கிறிஸ்தவ மக்கள்.

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் சேதம்:

ராய்ப்பூரில் உள்ள magneto mall லில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை மர்மக் கும்பல் சேதப்படுத்தியதோடு, அங்கு பதற்றமும் ஏற்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை கண்டித்து, ராய்ப்பூர் சம்பவத்தையும் குறிப்பிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.மேலும் சத்தீஸ்கர் முழுவதும் மாநில அளவிலான வேலைநிறுத்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

ச. ஜெனித்

December 25, 2025

Leave a Comment