லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும் அரசும் இது வரை எந்த நடவடிக்கையிம் எடுக்காமல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மௌனமாக இருந்து வருகின்றனர்.
அதேபோன்று கடந்த நான்கு ஆண்டுகளாக மனைப்பிரிவிற்கு அனுமதி வழங்கியது குறித்த ஆவணங்களையும் மற்றும் வீடு, தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், குடோன்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது குறித்தும் பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஏறக்குறைய 50 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகவும் அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எடுத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிடிஒ சித்ரா.
கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 40 க்கும் மேற்பட்ட ”லே” அவுட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிளாட் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது. ஒரு மனைப்பிரிவிற்கு 50 முதல் 300 பிளாட்டுகள் வரை அப்ரூவல் கேட்டு மனு அளிக்கப்படுகிறது. அந்த மனுக்களுக்கு அதாவது ஒரு பிளாட்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் என மேற்கூறிய ஈஸ்வரி மற்றும் யுவாதிகா ஆகியோர் மூலம் பெற்று சதவீத அடிப்படையில் அதிகாரிகளும் புழல் ஊராட்சி ஒன்றிய சேர்மன் அவர்களும் லஞ்சமாக பெற்றுள்ளனர். புழல் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தங்கமணி அவரது கணவர் திருமால் அவர்கள் பில்டிங் கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக அதிகாரிகள் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை 150 பில்டிங் கட்டப்பட்டுள்ளது. இதில் மட்டும் ஏறக்குறைய 6 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.வீடு கட்டுவதற்கு ஒரு பைலுக்கு 14,000 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக வாங்குகின்றனர். அதன் அடிப்படையில் பத்தாயிரம் வீடுகள் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். வீடுகள் கட்ட அனுமதி வழங்கியதில் மட்டும் 14 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சித்ரா பெர்னான்டோ புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருந்த பொழுது மட்டும் ஏறக்குறைய 7 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதில் மட்டும் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
குறிப்பாக புழல் ஊராட்சி ஒன்றிய திமுக ஒன்றிய சேர்மன் தங்கமணி அவரது கணவர் திருமால் அனைத்து நிர்வாக விஷயத்திலும் தலையிட்டு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெற்றுள்ளதாக தெரிய வந்ததுள்ளது. இது குறித்து அந்த அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
முக்கிய கோப்புகள், ஆவணங்கள், லேப்டாப் , கம்ப்யூட்டர் , ஹார்ட் டிஸ்க் போன்ற முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடத்தில் ஊழல் தொடர்பாக சித்ரா பல உண்மை சம்பவங்களை ஒப்புதல் வாக்கு மூலமாக அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சம்பத் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் மூன்று பெண் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே விளாங்காடு பாக்கம் கிராமத்தில் New Star City land promoters ஜாப்பர் என்பவர் ஏழு ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்திற்கு சி.எம்.டி.ஏ வில் அனுமதி பெற்று, உள்ளாட்சி அமைப்புகளில் இறுதி அனுமதி பெறுவதற்கு முன்னதாகவே நிலத்தின் உரிமையாளர் ஜாபர் என்பவர் தனது நிலத்தை பிளாட்டுகளாக பிரித்து விற்பனை செய்து விட்டார்.
போடாத layoutற்கு அனுமதி கொடுத்துள்ளனர். புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் குறிப்பாக சித்ரா பெர்னான்டோ அவர்கள் அனுமதி அளித்துள்ளார். இதே நிறுவனம் சிறுங்காவூர் என்ற கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தில் லேஅவுட் போட்டுள்ளனர். அந்த இடத்திலும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. என்கிற பிரச்சனை தற்போது வரை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
புழல் பி டி ஓ அலுவலகத்தில் புரோக்கர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேர்மன் தங்கமணி கணவர் திருமாலின் பினாமியாக வும் பி.ஏ,வாகவும் பணியாற்றி வருபவர் வீரா இந்த புரோக்கர் வீரா பற்றி நாம் நமது இணையதளத்தில் ஏற்கனவே செய்திகள் வெளியிட்டு இருக்கிறோம். இவரிடம் பிடிஒ ஆபிசின் அரசு கோப்புகள் வைத்துள்ளார். தனி நபராக இருக்கும் வீரா ஏன் தினமும் புழல் பிடிஒ ஆபிணுக்கு வருகிறார்.? ஏன் பிடிஒ சித்ராவை சந்தித்து பேசுகிறார்.? மணிக்கணக்கில் அவரின் அறையில் இருக்கிறார். இந்த கேள்விக்கு வீரா மற்றும் பிடிஒ சித்ரா பதில் அளிப்பார்களா? இந்த நிலையில் ஃபிராடுத்தனங்களை செய்து சட்டத்தை மீறி லஞ்சம் வாங்குவதற்காகவே தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்து சேர்த்த பி டி ஓ சித்ரா மற்றும் திமுக சேர்மன் தங்கமணியின் கணவர் திருமால் ஆகியோர் நம் மீது வழக்கு தொடுக்க இருப்பதாகவும் வழக்கறிஞர் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
அதை நாங்கள் சட்டரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று பதில் அனுப்பி இருந்தோம். இந்த நிலையில் அந்த வழக்கின் நிலை என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அது தவிர சம்பந்தப்பட்ட தங்கமணியின் கணவர் புரோக்கர் வீரா அந்தப் பகுதியில் உள்ள திமுக பிரமுகர்கள் இடமும் பிடிஓ ஆபிஸ் அதிகாரிகளிடமும் சென்னை ரிப்போர்ட்டர் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தான் தவறாக செய்தி வெளியிட்டதாகவும் ஒப்புக்கொண்டு விட்டதாக பொய்யான ஒரு தகவலை பரப்பி வருகிறார்.
இவர்கள் செய்துள்ள தவறை சுட்டிக்காட்டி நாம் செய்தி வெளியிட்டுள்ளோம் அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட புரோக்கர் வீரா திமுக சேர்மன் தங்கமணி அவரது கணவர் திருமால் பி டி ஓ சித்ரா ஆகியோர் கண்டிப்பாக சிறை செல்ல நேரிடும் என்பதை மறந்துவிட்டு தன்னை காப்பாற்றிக்கொள்ள தற்பெருமைக்காக பொய்யான ஒரு தகவலை பரப்பி வருகின்றனர். எதையும் சென்னை ரிப்போர்ட்டர்ஸ் டாட் காம் இணையதளம் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளது என்பதை இந்த செய்தியின் மூலம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
ஊழல் செய்த அதிகாரிகள் மீது இதுவரை மாவட்ட நிர்வாகமோ அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளோ, எந்தவித மேல் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருவது பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது.