தீபாவளி திருநாளில் போலீசார் யாரும் சன்மானமோ அல்லது பரிசு பொருட்களையோ வாங்க கூடாது. அப்படி வாங்கினால் அர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்திருந்தார்.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க். ஐ.பி.எஸ்.
இந்த நிலையில் அவரது உத்தரவை மதிக்காத திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய நான்கு சப் -இன்ஸ்பெக்டர்கள் கடலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டனர்.
புல்லரம்பாக்கம் காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டு விக்னேஸ்வரன்.
இந்த நிலையில் திருவள்ளூர் அருகே உள்ள பி-8 புல்லரம்பாக்கம் காவல் நிலையம் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் தனி பிரிவு ஏட்டு விக்கேன்ஸ்வரன் ரைட்டர் குமார் ஆகிய மூன்று பேர் கொண்ட இந்தக் குழு புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசு கடை வைத்தவர்களிடம் மிரட்டி பட்டாசு மற்றும் பணமும் லஞ்சமாக பெற்றுள்ளனர்.
அதேபோல புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உள்ளடக்கிய பஞ்சாயத்து தலைவர்களை நேரில் சந்தித்து அதாவது ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி, கல்யானகுப்பம், எறையூர், புன்னபாக்கம், இராமதண்டலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களை சந்தித்து தீபாவளி வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். ஐஜி போட்ட உத்திரவை இவர்கள் மதிக்காமல் வசூல் வேட்டையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல புல்லரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட டாஸ்மாக் மது கடைகளிலும் பார்களிலும் லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
புல்லரம்பாக்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம்.
சுமார் மூன்று லட்சம் ரூபாய் வரை கல்லா கட்டியதாக கூறப்படுகிறது. ஐஜியின் உத்தரவை மதிக்காமல் நடந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த எஸ்பி சீனிவாச பெருமாளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு வசூல் வேட்டை நடத்தியது தனிப்பிரிவு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் நடக்கும் தவறுகளை தனிப்பிரிவு ஏட்டு விக்னேஸ்வரன் தனிப்பிரிவுக்கு Special branch inspector. (S.B) தகவல் அளிக்க வேண்டும் ஆனால் அவர் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் நடக்கும் தவறுகளை கூட எஸ்.பி ஆபிசுக்கு தகவல் தெரிவிக்காமல் கட்டிங் வாங்கிக்கொண்டு மறைத்து விடுவாராம். கட்டிங், செட்டிங் போடுவதில் தனிப்பிரிவு ஏட்டு விக்னேஸ்வரனுக்கு டாக்டர் பட்டமே தரலாம் என்கின்றனர் சில சீனியர் போலீஸ்காரர்கள்.
இந்தப் பகுதியில் உள்ள பல தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய விஐபிகள் இடமும் தீபாவளி வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது. தலித் சமூகத்தை சார்ந்த பஞ்சாயத்து தலைவர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம் உங்கள் சமூகத்தை சார்ந்தவர் தான் என்று தனிப்பிரிவு ஏட்டு விக்னேஸ்வரன் சொல்லி வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் விக்னேஸ்வரன் ரைட்டர் குமார் ஆகிய மூன்று பேருக்கு எதிராக எந்த செய்திகள் வந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் நேரடியாக சென்று இதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று எழுதிக் கொடுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் வீடியோ பேசி அனுப்புங்கள் என்று கெஞ்சாத குறையாக பேசி அவர்களிடம் கடிதமும் வீடியோவும் வாங்கி வந்து உயர் அதிகாரிகளிடம் காட்டி இவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் என்கின்றனர்.
ஐ.ஜியின் உத்தரவை மதிக்காமல் அதிகார திமிரில் ஆட்டம் போட்டவர்களை தண்ணியில்லாத காட்டுக்கு தூக்கி அடிக்கப்போகிறார்கள் என்கின்றனர் சில அதிகாரிகள்.
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சிபிசக்கரவர்த்தி எஸ்.பி யாக இருந்த பொழுது தனிப்பிரிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சிபாஸ் கல்யாண் எஸ்.பி யாக வந்த பிறகு அதிரடியாக பல மாற்றங்களை ஏற்படுத்தினார். அதன் பிறகு தனி பிரிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
திருவள்ளூர் மாவட்ட தனிப்பிரிவில் சாதி ஆதிக்கம் உச்சத்தில் இருக்கிறது. எனவே வடக்கு மண்டல ஐஜி அசராக் அவர்கள் சிறந்த நேர்மையான ஒரு அதிகாரியை நியமித்து அது குறித்து விசாரித்து திருவள்ளூர் மாவட்ட தனிப்பிரிவில் உள்ளவர்களை களையெடுக்க வேண்டும் என்கின்றனர் மூத்த சப் இன்ஸ்பெக்டர் சிலர்.