#dmk candidate announced ; திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு க ஸ்டாலின்.

March 28, 2026

By இரா. தேவேந்திரன்.

#TN assembly election 2026#

https://share.chennai Reporters/web.com

தமிழக சட்டமன்ற தேர்தல் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி வேட்பாளர்களையும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகளையும் அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில் திமுக தங்களது வேட்பாளர் பட்டியலையும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் தொகுதிகளையும் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. Tamil Nadu CM Stalin sought-after in Kerala too, CPI invites him for centenary celebrations

https://share.chennai reporters/web.com

இந்த நிலையில் இன்று மாலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளையும் வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தார்.

திமுக வேட்பாளர் பட்டியல் :

https://share.chennai Reporters/web.com

முன்னாள் அமைச்சர் பொன்முடி முன்னாள் அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகிய மூன்று அமைச்சர்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

ராணிப்பேட்டை காந்தி.

அதற்கு பதிலாக பொன்முடியின் மகன் மற்றும் ராணிப்பேட்டை காந்தியின் மகன் ஆகியோருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

பொன்முடி.

திருத்தணி முன்னாள் எம்எல்ஏ சந்திரனுக்கு மீண்டும் தேர்தல் நிற்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. எழும்பூர் தொகுதி எம்எல்ஏ பரந்தாமனுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த தொகுதி கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மனோ தங்கராஜ்.

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை ஆவடி நாசர், மதுரவாயில் காரம்பாக்கம் கணபதி, பூந்தமல்லி கிருஷ்ணசாமி, திருவள்ளூர் வீ ஜி  ராஜேந்திரன் ஆகியோருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறந்த முறையில் பணியாற்றிய அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேலுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

https://share.chennai reporters/web.com

திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதிலும் தங்களுடைய கட்சி தலைவர்களுக்கு தொகுதிகளை முடிவு செய்து வெளியிடுவதற்கும் காலதாமதமானது தமிழக அரசியலில் ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Share:

இரா. தேவேந்திரன்.

March 28, 2026

Leave a Comment