கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளராக இருப்பவர் ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் அதனால் கட்சி தலைமை அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்கின்றனர் அறிவாலய வட்டாராம். அவரிடம் உள்ள மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படும் என்கின்றனர்ம சில முக்கிய நிர்வாகிகள்.
கள்ளக்குறிச்சியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் எத்தனநாள் எனப்படும் ஒரு வேதிப்பொருள் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்த சாராய வியாபாரத்தில் அவருக்கு பங்கு இருக்க கூடும் என்று உளவுத்துறை அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன்
மேலும் அவர் பல கட்டப்பஞ்சாயத்து வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலினுக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உடனடியாக கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்கின்றனர் உடன்பிறப்புகள். அவரிடம் உள்ள மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படும் என்றும் சொல்லுகின்றனர். அறிவாலயத்தில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
அதுமட்டுமில்லாமல் வசந்தம் கார்த்திகேயன் மீது பல்வேறு புகார்கள் மாவட்ட காவல் துறையில் தனி புகார்களாக வைக்கப்பட்டு அரசுக்கும் உளவுத்துறை உயரதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்கின்றனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த முக்கிய உளவுத்துறை அதிகாரி ஒருவர். கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதுவரை 7 மாவட்ட எஸ்பிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தின் முதல் எஸ் பி யாக ஜெயச்சந்திரன், இரண்டாவது எஸ் பி யாக ஜியாஉல்க் ,மூன்றாவது எஸ்பியாக செல்வக்குமார், நான்காவது எஸ்.பி யாக பகலவன், ஐந்தாவது எஸ் பி யாக மோகன்ராஜ், ஆறாவது எஸ்பி ஆக மணி, ஏழாவது எஸ்பியாக சமயங் மீனா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இந்த விஷச்சாராயம் சம்பவத்திற்கு பிறகு புதிதாக ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாவட்டத்தில் மொத்தம் 21 காவல் நிலையங்கள் உள்ளன. மூன்று சப் டிவிஷன்கள் டிஎஸ்பிகள் செயல்பட்டு வருகிறர்கள்.
இந்த மாவட்டத்தை ஒட்டி பாண்டிச்சேரி, சேலம் ஆகிய மாவட்டத்தின் எல்லை பகுதிகள் உள்ளதால் வெளி மாநிலத்திற்கும் சாராயம் கடத்தப்படுகிறது. பாண்டிச்சேரியில் இருந்தும் மது பாட்டில்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.பாண்டிச்சேரிக்கும் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை விழுப்புரம் போன்ற பகுதியிலிருந்து சாராயம் விற்பனை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.
அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சில அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்கிற தகவலையும் சொல்கிறார்கள். அந்த பகுதி திமுகவினர். மக்களும் தங்களுடைய உண்மை நிலையை உணர்ந்து இது போன்ற கள்ளச்சாராயம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிந்து கொண்டு கள்ளத்தனமாக சாராயம் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.