chennireporters.com

#drink beer in police escort car; போலீஸ் எஸ்கார்ட் வண்டியில் பீர் குடித்த எஸ்.எஸ்.ஐ.

#BREAKING Exclusive Story.

போலீஸ் எஸ்கார்டு வண்டியில்  போலீசார் முன்னிலையில் பீர் குடித்த ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியுள்ளன. அது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் ஆயுதப்படை காவலர்கள்.

Puzhal prison Superintendent Transfer | கைதிகள் சொகுசு வாழ்க்கை விவகாரம்: புழல் சிறை சூப்பிரண்டு இடமாற்றம்சக பணியாளரை கொன்றவருக்கு ஆயுள்: செங்கை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு | Life for Killer of Co-Worker: Chengalpattu District Court Verdict - hindutamil.in

சென்னை புழல் சிறையிலிருந்து கைதி ஒருவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஆயுதப்படைக்கு வரும் வழியில் சப்-இன்ஸ்பெக்டர் லிங்கேஸ்வரன் சீருடை அணியாமல் போலீஸ் வாகனத்திலேயே இரண்டு பீர்களை ஒன்றன் பின் ஒன்றாக குடித்து விட்டு பாட்டில்களை ஒரு பாலிதீன் பையில் போடும் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் ஒருவர் மூலம் பீர் வாங்கி எடுத்து வந்து பாதுகாப்பு வாகனத்திலேயே ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் பீர் குடிக்க ஏதுவாக  வாங்கி தந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

பச்சை சட்டை அணிந்து கொண்டு இருப்பவர்தான் #சப் இன்ஸ்பெக்டர் லிங்கேஸ்வரன்

காக்கி சட்டை அணிந்து கொண்டு பல கருப்பு ஆடுகள் எல்லாவித செயல்களையும் செய்வது தமிழக காவல்துறையை அவமானப்படுத்தும் வகையில் இந்த செயல் அமைந்துள்ளது. எனவே உயர் அதிகாரிகள் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை ஆயுதப்படை 2 சென்னை மௌண்ட் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி செய்து கொண்டிருக்கும் லிங்கேஸ்வரன் என்பவர் காவல்துறைக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் விதமாக  காவல் வாகனத்தில்  மிகக் கேவலமாக நடந்து கொள்ளும் ஒழுக்கம் கெட்ட உதவி ஆய்வாளர் பற்றி தான் இந்த செய்தி.

பச்சை சட்டை அணிந்து கொண்டு இருப்பவர்தான் #சப் இன்ஸ்பெக்டர் லிங்கேஸ்வரன்

மேற்கண்ட லிங்கேஸ்வரன் கைதி வழி காவல் செல்லும் பொழுது சீருடை அணியாமலும், குற்றவாளிக்கு தொலைபேசியை கொடுத்தும் அதற்கு பலனாக பல ஆயிரக்கணக்காக பணத்தை குற்றவாளிகளிடம் பெற்று கொண்டு சென்னையிலிருந்து குற்றவாளிகளை கோர்ட்டுக்கு எடுத்துச் செல்லும் போது சீருடை அணியாமல் லுங்கியில் அமர்ந்தும் சக காவலர்களை சீருடை அணிய வைத்தும், மிரட்டியும், குற்றவாளிகளிடமிருந்து வாங்கிய பணத்தை தான் மட்டுமே எடுத்துக்கொண்டு செல்வது என வேலைகளையும் அதாவது சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வது தான் இவருடைய வழக்கமான வேலையாக இருந்து வருகிறது.  கைதியை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்லும்போது எப்போதும் போதையிலும் இருப்பது இவருடைய அன்றாட வாழ்க்கை.

ஒவ்வொரு கைதிவழி காவலிலும் செய்யக்கூடிய செயல். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட லாசர் என்ற காவலரை அனைத்து கைதிவழி காவலிலும் அரசாங்க வாகனத்திலேயே குற்றவாளிகளுடன் இவர் அழைத்துக்கொண்டு சென்று குற்றவாளிகளிடம் பணத்தைப் பெற்று இரவு தங்கும் விடுதிகள் எடுத்து மது அருந்துவதும் மேலும் பலான குற்றங்களை செய்வதும் இவர் தொடர்ச்சியாக செய்யக்கூடிய குற்ற செயல்கள் ஆகும்.

பச்சை சட்டை அணிந்து கொண்டு இருப்பவர்தான் #சப் இன்ஸ்பெக்டர் லிங்கேஸ்வரன்

லிங்கேஸ்வரன் கைதி வழி காவல் செல்லும் காவலர்களை மிரட்டி வைத்துக் கொள்வதுடன் குற்றவாளிகளிடம் பேசக்கூடாது என்று சொல்லி தான் மட்டும் தொலைபேசியை குற்றவாளிக்கு கொடுத்து பேச வைத்து பணம் பெற்றுக் கொள்வதும் மேலும் குற்றவாளிகளின் உறவினர்கள் அல்லது வக்கீல்கள் இடத்தில் பொருட்கள் பெற்றுக் கொள்வதும் அந்த பொருட்களை செங்கல்பட்டில் வரும்போது தன்னுடைய மகனை வரவழைத்து கொடுப்பதும் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்.

பச்சை சட்டை அணிந்து கொண்டு இருப்பவர்தான் #சப் இன்ஸ்பெக்டர் லிங்கேஸ்வரன்

இவர் கைதி வழி காவலுக்கு செல்லும் பொழுது இருந்த சக காவலர்களை அழைத்து விசாரணை செய்தால் இவர் செய்த மொத்த குற்ற செயல்களும் காவல்துறை தலைமைக்கு தெரியவரும். லிங்கேஷ்  கைதி வழி காவல் சென்ற காவலர்களை அழைத்து விசாரணை செய்தால் மேலும் திடுக்கிடும் பல தகவல்கள் காவல் துறைக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கைதி வழி காவல் செல்லும் பொழுது லிங்கேஸ்வரன் மது அருந்துவதையும் குற்றவாளிகளின் உறவினர்கள் இடத்திலிருந்து பெறக்கூடிய மதுபானங்கள் அரிசி மூட்டைகள் துணிமணிகள் அனைத்தையும் செங்கல்பட்டில் உள்ள தன் மகனை வரவழைத்து கொடுத்து வருகிறார். அதற்கு உண்டான காணொளியும் படமும் இத்துடன் இணைத்துள்ளோம். காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் இந்த நபரை நன்கு விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம். உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்களா? லிங்கேஸ்வரன் இப்படி சேர்த்த சொத்துக்கள் பல லட்சங்களை தாண்டுமாம்.

இதையும் படிங்க.!