chennireporters.com

#fake journalist arrested; சப் ரிஜிஸ்டரை மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணம் கேட்ட டுபாக்கூர் ரிப்போட்டர் கைது.

சென்னையில் பத்திரபதிவு அதிகாரியை ஐம்பது லட்சம் பணம் கேட்டு மிரட்டிய டூபாக்கூர் ரிப்போட்டர் வராகி என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் வீட்டிற்குள் நுழைந்து ரூபாய் 50 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் போலி பத்திரிகையாளர் வராகி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வராகி மீது ஏற்கனவே ஏராளமான புகார்கள் குவிந்து வருவதால் அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

வராகி என்கிற கிருஷ்ணகுமார்.

சென்னை மயிலாப்பூர் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் இவர் கூடுவாஞ்சேரி சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். வைத்தியலிங்கம் கடந்த 11ம் தேதி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வராகி என்கிற கிருஷ்ணகுமார் இவர் தன்னை சீனியர் பத்திரிகையாளர் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டு பல்வேறு சமூக வலைதளங்களில் ஆதாரம் இல்லாமல் மிரட்டும் தொணியில் பலரைப் பற்றி தவறான தகவல்களை பேசி வருகிறார்.Sub Registrar Office in Guduvanchery,Chengalpattu - Best Stamp Duty And Registrar Office near me in Chengalpattu - Justdial

இந்நிலையில் வராகி சார்பதிவாளர் வைத்தியலிங்கத்தை தொடர்பு கொண்டு நீங்கள் கூடுவாஞ்சேரி பகுதியில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளீர்கள். இது தொடர்பாக செய்தி வெளியிட உள்ளேன் என மிரட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரில் சென்று வைத்தியலிங்கத்தை சந்தித்து மிரட்டும் துணியில் பேசியுள்ளார். அதற்கு வைத்தியலிங்கம் நான் எந்த தவறும் செய்யாத நிலையில் எதற்கு உங்களுக்கு பயப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார் வைத்தியலிங்கம் தன்னுடைய வழிக்கு வரவில்லை என்று தெரிந்து கொண்ட வராகி வழக்கம் போல் அவரது youtube சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வைத்தியலிங்கம் பற்றி அவதூறாக பல விஷயங்களை பேசியுள்ளார். அதற்குப் பிறகும் வைத்திலிங்கம் உடன்படாததால் மயிலாப்பூரில் உள்ள வைத்தியலிங்கம் வீட்டிற்கு வராகி தனது கூட்டாளியர்களுடன் நேரடியாக சென்று ரூபாய் 50 லட்சம் பணம் கெட்டு மிரட்டியுள்ளார். நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் அனைத்து பத்திரிகைகளும் செய்தி வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

அப்போதும் வைத்திலிங்கம் அசைந்து கொடுக்காமல் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். என்ன செய்தாலும் வைத்தியலிங்கம் தன்னுடைய வழிக்கு வரவில்லை என்று தெரிந்து கொண்ட வராகி இறுதியாக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார். அடிக்கடி whatsapp மூலம் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

எனக்கு பெரிய இடத்தில் எல்லாம் தொடர்பு உள்ளது. உயர் காவல்துறை அதிகாரி  ஒருவரும் எனக்கு தெரிந்தவர் தான் நான் நினைத்தால் எல்லா பத்திரிகையிலும் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் செய்தி போட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என்றெல்லாம் மிரட்டியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சார்பதிவாளர் வைத்தியலிங்கம் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் வராகி மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இதை தொடர்ந்து சார் பதிவாளர் அளித்த புகாரியின் அடிப்படையில் மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் வராகியை  கைது செய்து விசாரணை நடத்தினர்.

Protest to hand over Mylapore temple to devotees - 75 people including BJP councilor booked | மயிலாப்பூர் கோவிலை பக்தர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கக் கோரி போராட்டம் - பாஜக ...

மேலும் சிசிடிவி ஆதாரங்கள் செல்போன் கால் லிஸ்ட் உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு கிருஷ்ணகுமார் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மிரட்டி பணம் பறித்தல் பல முயற்சி கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

வராகி என்கிற கிருஷ்ணகுமார்.

பின்னர் சைதாப்பேட்டை 18-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஐந்து நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.  போலி பத்திரிகையாளர் வராகியிடம் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக வந்து புகார் தெரிவிக்கலாம் பொதுமக்கள் தயக்கம் இன்றி தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம் அல்லது 23452324 2345 2325 என்ற தொலைபேசி எண்களிலும் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.Read all Latest Updates on and about Saidapet Metropolitan Magistrate court

வராகி புரோக்கர் வேலை செய்து பல லட்ச ரூபாய் சம்பாதித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; தாம்பரம், வண்டலூர் இடையே ஊரப்பாக்கத்தில் இரண்டு ஏக்கர் 43 சென்ட் மற்றும் ஒரு ஏக்கர் 57 சென்ட் என மொத்தம் 4 ஏக்கர் நிலம் உள்ளது.  இந்த நிலம் ராமசாமி மகன் முத்துலிங்கம் என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 300 கோடி ரூபாய் இந்த நிலத்தை மயிலாப்பூரை சேர்ந்த மங்கலம் என்பவர் மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சாரதி வீரராகவன் என்பவருக்கு செட்டில்மெண்ட் ஆவணமாக கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் 300 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை தனது தந்தை சுப்ரமணியாச்சாரி மூலம் கிடைத்தது என்றும் இதனால் தனது சொத்தினை தனது மகன் சாதி வீரராகவனுக்கு செட்டில்மெண்ட் எழுதி கொடுப்பதாகவும் பதிவு செய்துள்ளனர்.  இந்த நிலத்திற்கான ஆவணங்களை சார்பதிவாளர் வைத்தியலிங்கம் ஆய்வு செய்ததில் சொத்து உரிமை கோரிய மங்கலம் என்பவர் பெயரில் நிலம் இல்லை. அவரது பெயரில் நிலத்திற்கான  பட்டாவும் இல்லை என தெரிய வந்ததால் மங்களம் தாக்கல் செய்த செட்டில்மெண்ட் ஆவணத்தை பதிவு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளார்.

 

இதனால் மங்களம் என்பவரால் நிலத்தை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. உடனே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் வராகியின் உதவியை நாடியுள்ளனர். அப்போது 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திர பதிவு செய்து கொடுத்தால் 15 கோடி கொடுப்பதாக கூறியுள்ளனர் .

வராகி

அதற்கு வராகி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய உதவி செய்வதாக கூறி முன்பணமாக 5 கோடி பணம் பெற்றதாக கூறப்படுகிறது.  அதன் பிறகு வராகி தனது கூட்டாளிகளுடன் சார்பதிவாளர் வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து பலமுறை பத்திரப்பதிவு செய்து கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் வைத்தியலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார் ஒரு கட்டத்தில் 300 கோடி நிலத்தை முடித்துக் கொடுத்தால் முன்பனமாக பெற்ற 5 கோடியை சம்பந்தப்பட்ட நபர்கள் பணத்தைத் திரும்ப கேட்டுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்தவராகி சார்பதிவாளர் வைத்தியலிங்கத்திடம்  உன்னுடைய மோசடி குறித்து பல செய்திகள் ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக  அவரை மிரட்டியுள்ளார்.

மேலும் அந்த ஆவணங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதற்கும் சார்பதிவாளர் வைத்திலிங்கம் உடன்படாததால் அவரது வீட்டிற்கு நேரில் சென்று உன்னால் எனக்கு 15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறி கூட்டாளிகளை வைத்து 50 லட்சம் ரூபாய் பணம் கட்டி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைத்திலிங்கம் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்

இதையும் படிங்க.!