chennireporters.com

#central govt Female ias officer; துணைமுதல்வர் துறையில் பணியாற்றிய பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியை மத்திய அரசு பணிக்கு மாற்றம்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையின் கீழ் பணியாற்றிய பெண் ஐஏஎஸ் அதிகாரி திவ்யதர்ஷினியை மத்திய அரசின் பணிக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று ஒன்றிய அரசு அதிரடி ஆக உத்தரவிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தன்னுடைய 24 ஆவது வயதில் வெற்றி பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தவர் தான் திவ்யதர்ஷினி ஐஏஎஸ். சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம்.. மத்திய அரசு பணிக்கு போகும் திவ்யதர்ஷினி ஐஏஎஸ் யார்? | Civil Services topper: Who is the Divyadarshini IAS who will go to ...

இவர் தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நிர்வாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

விரைவில் மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நிர்வாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் திவ்யதர்ஷினி ஐஏஏஸ் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம்.. மத்திய அரசு பணிக்கு போகும் திவ்யதர்ஷினி ஐஏஎஸ் யார்? | Civil Services topper: Who is the Divyadarshini IAS who will go to ...

மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 3 வாரங்களுக்குள் மத்திய அரசு பணியில் திவ்யதர்ஷினி சேர வேண்டும் என்று மத்திய அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

திவ்யதர்ஷினி ஐஏஎஸ் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். திவ்யதர்ஷினி ஐஏஎஸ்க்கு ஒரு அக்கா மற்றும் தம்பி ஆகியோர் உள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். அதன்பிறகு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். Dharmapuri Collector,ஊழலுக்கு துணை போகாததால் தருமபுரி ஆட்சியர் மாற்றம்? - வெளியான பகீர் தகவல்! - it has been alleged that the dmk was involved in the transfer of honest dharmapuri collector ...

2010ம் ஆண்டு தனது முயற்சியில் திவ்யதர்ஷினி ஐஏஏஸ் சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தார். நாட்டிலேயே ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்ததால் தமிழக கேடரை தேர்ந்தெடுத்து பணியில் சேர்ந்தார். தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக கடந்த 2011ம் ஆண்டு பணியில் சேர்ந்த அவர் 2012-13 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் உதவி ஆட்சியராக பணியாற்றினார்.

பின்னர் 2013-15 ஆம் ஆண்டுக் காலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் சார் ஆட்சியராகப் பணிபுரிந்தார். பின்னர் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் தமிழ்நாட்டின் துணை உள்துறை செயலாளராகவும், பொதுப்பணித்துறை செயலாளராகவும் திவ்யதர்ஷினி ஐஏஏஸ் பணியாற்றினார்.

புதிய மாவட்டத்துக்கான தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பொறுப்பேற்பு! | nakkheeran

இதேபோல் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராகவும் இவர் நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் தருமபுரி மாவட்டத்தின் ஆட்சியராகவும் திவ்யதர்ஷினி ஐஏஎஸ் பணியாற்றினார்.

திவ்யதர்ஷினி ஐஏஎஸ் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்க வரும் மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்து உடனடியாக தொடர்புடைய துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தி  பொது மக்களின் குறைகளை தீர்த்து வைப்பார். பொது மக்களின் வரவேற்பையும் நன் மதிப்பையும் பெற்றவர்.

இதேபோல் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஊக்கம் அளித்து வருகிறார். மிகவும் எளிமையானவரான திவ்யதர்ஷினி ஐஏஎஸ் நேர்மையான அணுகுமுறை ஆகியவற்றால் மிக குறுகிய காலத்தில் மக்களிடம் நற்பெயர் பெற்றார். IAS topper: Failure didn't dishearten me - Rediff.com

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்ட நிலையில், அவருடை விளையாட்டுத்துறையின் அங்கமாக உள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் மத்திய அரசு திவ்யதர்ஷினியை உடனடியாக மத்திய அரசு பணிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. திவ்யதர்ஷினியை மத்திய அரசுப் பணிக்கு மாற்றுவதாக தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தத்திற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கடிதம் அனுப்பி உள்ளது. TNCDW |தலைமையகம்

அந்தக் கடிதத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக உள்ள திவ்யதர்ஷினி, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் அந்தப் பதவியில் அவர்  5 ஆண்டுகள் வரை பணியாற்றுவார். எனவே அவரை தமிழக அரசு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். 3 வாரங்களுக்குள் மத்திய அரசு பணியில் திவ்யதர்ஷினி சேர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!