திருத்தணி முருகன் கோயில் ஊழியரை சாதி பெயர் சொல்லி திட்டிய மூன்று பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தி தொடர்பாக திருத்தணி கோயில் நிர்வாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். கடந்த 16 ஆண்டுகளாக திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்ரமணி சாமி திருக்கோயிலில் கடை நிலை ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர் ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்தவர் என்ற காரணத்திற்காக எந்த ஒரு பதவி உயர்வும் கொடுக்கப்படவில்லை. அவருடன் வேலைக்கு சேர்ந்த வேறு சாதியை சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஜே.சி ரமணி.
அவருக்கு இடைநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும் ஆனால் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் பதவி உயர்வு தராமல் அவருடைய மேல் அதிகாரிகள் கார்த்திகேயன் ஜோதி ஷர்மிளா, அருணாசலம் ஆகிய மூவரும் பெருமாளை சாதியின் பெயர் சொல்லி அதாவது பறையன் என்று சாதிப் பெயர் சொல்லி அசிங்கமாக திட்டினார்கள் என்று பெருமாள் கொடுத்த புகாரில் கூறியுள்ளார்.த.அருணாச்சலம். உதவியாளர்
சகப் பணியாளர்கள் ஏழாவது ஊதிய உயர்வு கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள் எல்லோரும் அதில் கலந்து கொண்டனர். அதில் நான் மட்டும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நான் ஆதிதிராவிடர் என்ற காரணத்தால் திட்டமிட்டு வருகை பதிவேட்டில் கார்த்திகேயன் என்பவர் எனக்கு ஆப்சென்ட் போட்டார்.கார்த்தி.
அதனை எனது தலைமை அலுவலர் கண்காணிப்பாளர் திருத்தம் செய்து பணி செய்ய சொன்னார். எனக்கு வரவேண்டிய அரியஸ் பணத்தை நான் பலமுறை கடிதம் கொடுத்து கேட்டும் அவர்கள் தரவில்லை. நிர்வாகம் கொடுக்க சொல்லியும் மேற்கண்ட மூன்று நபர்கள் என்னுடைய அரியர்ஸ் பணத்தை கொடுக்க முடியாது உன்னால் முடிந்ததை பார் என்று இந்த மூன்று நபர்களும் என்னை கடுமையான வார்த்தைகள் மூலம் சாதியின் பெயர் சொல்லி பறை நாயே நீ அலுவலகத்தை விட்டு வெளியே போ என்று மிரட்டினார்கள் .
நான் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்த பிறகு என்னுடைய வங்கி கணக்கில் அரியர்ஸ் பணம் வரவு வைக்கப்பட்டது. அதையும் அந்த மூன்று நபர்களும் தடுக்க முயற்சி செய்தார்கள்.. பலமுறை பறையன் என்று என் சாதி பெயரை சொல்லியும் திட்டியும் அசிங்கமாக பேசியும் என்னை இழிவு படுத்தினார்கள். அதனால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிப்படைந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
நான் உடல் நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு இருந்த போது அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் உப கோயிலான மத்தூர் கோயிலில் என்னை திட்டமிட்டு இரவு பணி செய்ய சொன்னார்கள். ஆனால் இரவு பணி செய்வதற்கு ஆட்கள் இருந்தும் திட்டமிட்டு என்னை பழி வாங்கினார்கள். நீ கட்டாயம் வேலை செய்துதான் ஆக வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினார்கள். இதனால் நான உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன்.
மேலும் திருத்தணி இன்ஸ்பெக்டர் அவர்கள் எஸ்சிஎஸ்டி ஆணையம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தினார். மாவட்ட கண்காணிப்பாளர் எஃப் ஐ ஆர் போட அறிவுறுத்தியும் வழக்கு போடாமல் சிஎஸ்ஆர் மட்டும் பதிவு செய்தனர். நான் பலமுறை சென்று கேட்டபோது என்னை திருத்தணி காவல் நிலையத்தில் விசாரணை செய்வதாக கூறி பல மாதங்கள் இழுத்தடித்து என்னை காயப்படுத்தினார்கள்.ஜோதி ஷர்மிளா.
எனவே ஐஜி அஸரா கார்க் அவர்களடம் புகார் கொடுத்த பிறகு தான் மேற்படி கார்த்திகேயன், ஜோதி ஷர்மிளா, அருணாசலம் ஆகிய மூன்று நபர்களும் என்னை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பறையன் என்று சாதி பெயரை சொல்லி என்னை இழிவு படுத்தியதற்கு சாதி வன்கொடுமை சட்டம் 1989 பிரிவு (1) (r) லவ் மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து எனக்கு நியாயம் செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் புகார் அளித்துள்ளார்.
மேற்படி ஆவணங்கள் மீண்டும் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு திருத்தணி டிஎஸ்பி விசாரணை செய்து மேற்படி நபர்கள் மீது பிப்ரவரி 21ஆம் தேதி அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. Cr.no.104/2025 u/s 3( i) (r ) (s) sc/st act பாதிக்கப்பட்ட பெருமாளின் புகார் உடன் இணைத்து திருத்தணி குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பி மற்ற நகல்களை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர்.இதன் பின்னர் சம்பந்தப்பட்ட திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் ரமணி என்பவர் வன்கொடுமை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு வக்காலத்து வாங்கி அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகார் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து அவர்களுக்கு விடுமுறை அளித்து அதாவது ஈட்டிய விடுப்பு சம்பளத்துடன் வழங்க கூடிய விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும் சம்பளத்தை நிறுத்தி வைக்காமல் சம்பளத்தையும் வழங்கி உள்ளார். ஒரு அரசு ஊழியர் ஈட்டிய விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பு தங்களுடைய உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்று தான் விடுப்பு எடுக்க முடியும்.
மேற்படி கார்த்தி ஜோதி ஷர்மிளா அருணாசலம் ஆகியோர் மீது எஸ்சி(SC) எஸ்டி(ST) சட்டத்தின் படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர்களுக்கு கடிதத்தின் மூலம் தகவல் கிடைத்தும் மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அவர்கள் கடந்த 30.12. 2024 அன்று இணை ஆணையர் ரமணி அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில் பணியாளர் மீது சாதியின் அடிப்படையில் சம்பள நிலுவைத்தொகை மற்றும் பதவி உயர்வு வழங்காமல் இருந்தது.
குற்றம் சாட்டப்பட்ட பணியாளர்களை வழக்கு முடியும் வரை பணி இடை நீக்கம் அல்லது நிரந்தர பணி நீக்கம் செய்ய கூறியது தொடர்பாக பார்வையில் காணும் மனு நகல் உரிய நடவடிக்கைக்காக திருத்தணி அருள்மிகு சுப்ரமணியே சுவாமி திருக்கோயில் இணையானையர் செயல் அலுவலருக்கு அனுப்பப்படுகிறது.
அம்மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினை மனுதாரருக்கும் இவ்வலுவலகத்திற்கும் தெரிவிக்குமாறு மேற்படி திருக்கோயில் இணையானையர் அலுவலக கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் அந்த உத்தரவின் மீது இதுவரை முருகன் கோயில் இணை ஆணையர் ரமணி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு ஜால்ரா தட்டி வருகிறார் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.