chennireporters.com

கே.சி. வீரமணி வீட்டில் ரெய்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..

வேலூர் மாவட்டத்தில் உள்ள முன்னால் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுமார் 5 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2016 முதல் 2021 வரை வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி.

ஏலகிரியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ்

பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 28.78 கோடிக்கு சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்தது.

தற்போது இவருக்கு சொந்தமான சென்னையில் 4 இடங்களிலும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஓசூர் உள்ளிட்ட 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஓசூரில் உள்ள சொகுசு விடுதியில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2016 முதல் 21வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 28.78 கோடிக்கு அளவிற்கு சொத்துக்களை சேர்த்ததாக கே.சி வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏலகிரியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ்

அதாவது வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீத அளவுக்கு சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள வீரமணி வீட்டில் காலை முதலே சோதனைகள் நடை பெற்று வருகின்றது.

வீரமணியின் வீடு

அங்கு கே.சி. வீரமணிக்கு சொந்தமான கல்லூரியில் முதல் கட்டமாக சோதனை நடைபெற்ற பிறகு தற்போது ஆய்வக அறையில் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் கே.சி. வீரமணி நெருக்கமானவர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது லஞ்ச ஒழிப்புத் துறை அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த 2016 ஆண்டு அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் ஒன்றை அளித்து இருந்தது அதில் 76 கோடி ரூபாய் அளவிற்கு கே.சி.வீரமணிசொத்து குவித்து இருக்கிறார்.
என்று ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓசூரில் உள்ள நட்சத்திர விடுதியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் ஒரே நேரத்தில் 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஓசூரில் உள்ள நட்சத்திர ஓட்டல்

அமைச்சர் வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் அந்த இடத்தில் அதிமுகவினர் ஒன்றுகூடி போலீசுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!