கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அரசு அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிலையில் மேலும் அந்த விஷசாராய சாவுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து நீ தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த பி.ஜே.பி நிர்வாகி ரவி, கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் அதிமுக நிர்வாகி கன்னுகுட்டி ஆகியோர் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் பொதுமக்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் அவரது கட்சியினர் சமூக வலைதளங்களில் இந்த செய்தியை வைரல் ஆக்கி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. மேலும் தாய்,தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு அரசு சார்பில் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை செலுத்தி அவர்களின் எதிர்காலத்தை காக்கும் என்ற அறிவித்திருக்கிறார்.
மேலும் வழங்கப்படும் நிதியை 5 லட்சம் ரூபாய் முதலில் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அரசு உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்று உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழகம் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலையில் 115 கிராமங்கள் உள்ளன. ஏறக்குறைய 90 சதவீத கிராமப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களில் போலீசார் 500க்கும் மேற்பட்ட சாராய பேரல் ஊரல்களை அழித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார்
கள்ளக்குறிச்சி ஏழாவது வார்டு கர்ணாபுரம் பகுதியில் எஸ் சாராயம் குடித்தவர்கள் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம்,சேலம்,கள்ளக்குறிச்சி ஜிப்மர் போன்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமேசிங் மீனா பணிநீக்கம்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மட்டும் 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். பிரபல சாராய வியாபாரி அதிமுகவை சேர்ந்த கண்ணு குட்டி என்னும் கோவிந்தராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக நிர்வாகி ரவி தலைமறைவாக உள்ளார். இந்த விபச்சாராய மரணத்தில் தற்போதைய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமாருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
புதிய எஸ்பியாக ரஜித் சதுர்வேதி
இந்த நிலையில் தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமேசிங் மீனா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்பியாக ரஜித் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.