கடந்த 3 மாதமாக பூட்டிக்கிடந்த வீட்டில் தந்தை-மகள் ஆகியோரின் இருவர் சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அடுத்த ஆவடி அருகே உள்ளது திருமுல்லைவாயல் . V.G.N. அடுக்கு மாடி குடியிறுப்பு பகுதியில் தந்தை – மகளின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

இன்ஸ்ட்டா நட்பு சண்டை:
இதனால் தந்தையை அவ்வப்போது சென்னைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து சென்றுள்ளார். சென்னை வந்து செல்ல சிரமமாக இருந்த காரணத்தால், அதனை நண்பரான சாமுவேல் எபினேசரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, எபினேசர் தந்தை – மகளுக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது கள்ளகாதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனிடையே இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சாமுவேல் உடல் நலக்குறைவால் உயிரிழக்கவே, தந்தையின் உடலை சொந்த ஊர் எடுத்துச்செல்ல முடிவெடுத்த எழில் சிந்தியாவுக்கும் – மருத்துவர் சாமுவேலுக்கும் இடையே தகராறு உண்டாகியுள்ளது.
கணவரை பிரிந்த பெண் கொலை:
இந்த தகராறில் ஆத்திரமடைந்த எபனேசர், சிந்தியாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சிந்தியா உயிரிழந்துவிடவே, இரண்டு சடலத்தையும் வீட்டிற்குள்ளேயே வைத்து டாக்டர், ஏசியை ஆன் செய்துவிட்டு, சில வேதிப்பொருட்களை தூவி சென்றுள்ளார். செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை என 4 மாதங்களாக வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன. இந்த விஷயம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தற்போது தகவல் தெரிவித்தனர். மேலும், சாமுவேல், எழில் சிந்தியா ஆகிய தந்தை – மகள் மாயமானதாகவும் உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறை விசாரணை:
புகாரை ஏற்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சாமுவேலின் அதிர்ச்சி செயல் அம்பலமானது. வீட்டின் பூட்டை உடைத்து சடலம் மீட்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்திற்கு தப்பிச் சென்ற மருத்துவர் எபனேசர் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்பட்ட நட்பு தகாத உறவாக மாறியதால் நேர்ந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிடாக்டர் சாமுவேல் எபினேசர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாமுவேல் எபினேசரை போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினால்தான் கொலை எப்படி நடந்தது எதற்காக கொலை செய்யப்பட்டார் எப்படி அந்த கொலை நடந்தது அவர்கள் வைத்திருந்த பணம் நகைகள் எங்கே போயின என்பது போன்ற பல தகவல்கள் தெரியவரும் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.
அண்மைக்காலமாக instagram ஃபேஸ்புக் மூலம் ஏற்படுகின்ற நட்பு கொலை சம்பவமாக மாறி வருவது அதிர்ச்சி அளிக்கிறது என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.