chennireporters.com

#panchayat president corrupted several lakhs; பணி செய்யாமல் பல லட்சம் ஊழல் செய்த பஞ்சாயத்து தலைவர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது ராமாபுரம் பஞ்சாயத்து.  ராமாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்கள் ரங்காபுரம், ராமலிங்கபுரம். ராமாபுரம் என மூன்று கிராமங்கள் உள்ளன. இதில் ராமாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட  ரங்காபுரம் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைத்து இருப்பதாக கூறி நிதி மோசடி செய்திருக்கிறார். ஊராட்சி மன்ற தலைவர் அமுல் அவர்களின் கணவர் சரவணன்.

அதேபோன்று ரங்காபுரம் ஏரி கால்வாயை விரிவு படுத்தும் வகையில் பல லட்ச ரூபாய் செலவில்  தடுப்பு அணை கட்டியதாக கூறி பொய் பில் கொடுத்து மாவட்ட நிர்வாகத்தை ஏமாற்றி பல லட்சம் சுருட்டி இருக்கிறார் டாஸ்மார்க்கில் பணியாற்றும் பஞ்சாயத்து தலைவர் அமுலின் கணவர் சரவணன்.

ஊராட்சி மன்ற தலைவர் அமுல்.

கலைஞர் கணவு இல்ல திட்டத்தின் மூலம் கிராமத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏழைகளிடம் பணம் பறித்திருக்கிறார். பணம் பறித்ததும் இல்லாமல் அவர்களுக்கு வீடு இல்லை என்று சொல்லி சரவணனுடைய உறவினருக்கு வீடு அலர்ட் செய்து வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்.

ஊராட்சி மன்ற தலைவர் அமுல் அவர்களின் கணவர் சரவணன்.

ஏழைகளை தவிர்த்து விட்டு லஞ்சம் வாங்கிக் கொண்டு பணக்காரர்களுக்கு மட்டுமே மேலும் வசதி செய்யும் சரவணன் இரண்டு மூன்று வீடு வைத்துக் கொண்டு வசதியாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இலவச வீடு வழங்கி இருக்கிறார். இது போன்று ராமாபுரம் பஞ்சாயத்தில் நான்கு வீடுகளை வசதியானவர்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறார் மற்றும் 6 ஏழை குடும்பத்திற்கு  இது வரை வீடு கட்டித்தரவில்லை. ஆர்டர் காபி வைத்திருந்தாலும் உங்கள் வீடுகளை கட்டிக் கொடுக்க முடியாது அடுத்த ஐந்தாண்டில் உங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறேன்.

கோவிந்தராஜ்

மீண்டும்  என்னை தலைவராக நியமன செய்யுங்கள் எனக்கு ஓட்டு போடவில்லை என்றால் உங்களைப் பல விதத்தில் தொல்லை கொடுப்பேன் என்றும் நான் டாஸ்மார்க் பல லட்சங்களை சம்பாதித்து வைத்திருக்கிறேன் என் மனைவி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார் என்னால் எதையும் செய்ய முடியும் எனக்கு எதிராக யாரும் போட்டியிடக்கூடாது. என்று இப்போதே மக்களை அச்சுறுத்தி வருகிறார்.

மோசடிக்கெல்லாம் ரங்காபுரம் வார்டில் உள்ள வார்டு உறுப்பினர் லட்சுமி அவர்களின் கணவர் கோவிந்தராஜ் என்பவரே முக்கிய காரணமாக விளங்குகிறார்.  

ரங்காபுரத்தில் உள்ள ஏரி வரவு கால்வாய் திட்டத்தில் தடுப்பு அணை கட்டியிருப்பதாக  5லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த பணி செய்யப்படாமலேயே பில் போடப்பட்டு அனைத்து பணத்தையும் அதிகாரிகள் துணையுடன் கொள்ளையடித்திருக்கிறார் பஞ்சாயத்து தலைவர். இது போன்ற பல பணிகள் செய்யப்படாமலேயே பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது . இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனி அலுவலரை நியமித்து ஊழலுக்கு துனை போன திருவலாங்காடு பி.டி.ஒ. மற்றும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும் அந்த பணிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் அந்த பகுதி கிராம பொதுமக்கள். இந்த புகார் குறித்து சம்பந்தபட்டவர்கள் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் அதை நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். 

இதையும் படிங்க.!