chennireporters.com

#park in avadi dmk councilor ward; ஆவடி, கவரப்பாளையம் திமுக பெண் கவுன்சிலர் வார்டில் சிதிலமடைந்த பூங்கா, கஞ்சா குடிகாரர்களின் புகலிடமான அவலம்.

ஆவடி மாநகராட்சி கவரப்பாளையம் 22-வது திமுக பெண் கவுன்சிலர் ஜோதி லட்சுமி வார்டில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் பூங்காவை பொதுமக்கள் உடனடியாக  சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆவடி மாநகராட்சி பகுதியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பெரும்பாலான பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக அதிமுக ஆட்சி காலத்தில் பெரும்பாலான பூங்காக்கள் கட்டப்பட்டன. குறிப்பாக ஆவடி 22 வது வார்டு கவரப்பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் திறந்த வெளி உடற் பயிற்சி திடல் மற்றும் பூங்கா ஒன்று  அமைக்கப்பட்டது . அப்போதைய அமைச்சர் பாண்டியராஜன் ஆவடி சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார். அவர் கால கட்டத்தில் தான் இந்த பூங்கா புணரமைக்கப்பட்டது.

அதன் பிறகு அந்தப் பூங்கா மறு சீரமைப்பும் செய்யப்பட்டது. அதற்கும் ஒரு பெரிய தொகை செலவு செய்யப்பட்டு தரமான பணிகள் நடைபெறாமல் ஊழல் தான் நடந்தது. 60 லட்சம் ரூபாய் மதிப்பு செலவு செய்ததற்கான எந்த ஆதாரமும் அந்த பூங்காவில் இல்லை. தற்போது அந்த பூங்காவின் நிலை புதர் மண்டி கிடக்கிறது. 5 அடி உயரத்திற்கு பொருட்களும் செடி, கொடிகளும் வளர்ந்துள்ளன.

இரவு நேரங்களில் கஞ்சா குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளது. ஏற்கனவே குடிதண்ணீர் கழிவறை வசதி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அவையெல்லாம் சேதமடைந்து சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த பூங்காவின் தற்போதைய நிலை சேதம் அடைந்து மிக மோசமான நிலையில் அமைந்துள்ளது.

பூங்காவில் உள்ள உபகரணங்கள் பொருட்கள் எல்லாம் சேதமடைந்து உடைந்து காணப்படுகிறது. பூங்காவின் ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள சில்வர் பேரிகாடுகள் உடைந்து காணப்படுகிறது. குடிதண்ணீர் வசதி இல்லை கழிவறை வசதியும் இல்லை.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த  அமைச்சர் மீது இந்தப் பூங்கா தொடர்பாக செலவு செய்யப்பட்ட 60 லட்சம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும். ஆட்சியாளர்களுக்கு உதவியாக இருந்து ஜால்ரா தட்டி கொள்ளையடித்த அதிகாரிகளை அப்போதைய அதிகாரிகள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கின்றனர் பொது மக்கள்.

தற்போது பூங்கா புனரமைக்க செலவாகும் பணத்தை ஏற்கனவே பணியிலிருந்த அதிகாரிகளிடத்திலும் தற்போது உள்ள அதிகாரிகளிடத்திலும்  அவர்களுடைய சம்பளப் பணத்தில் இருந்து வசூலித்து பூங்காவை சீர்படுத்த வேண்டும். புதிதாக பூங்காவை சீர்படுத்த புதிய நிதியை ஆவடி நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள கூடாது என்கின்றனர் பொதுமக்கள்.

பூங்காவை பூட்டி திறக்கும் ஊழியருக்கு மாதம் 20 ஆயிரம் சம்பளம் தருவதாக சம்பந்தப்பட்ட ஊழியர் சிவா என்பவர் நம்மிடம் தெரிவித்தார். எந்த விதமான தூய்மைப் பணிகளையும் செய்யாதவருக்கு 20,000 சம்பளம் என்பது மக்கள் வரிப்பணம் விரயம் செய்யப்படுகிறது என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்.

சம்பந்தப்பட்ட பூங்காவில் நிர்வாக சீர்கேடுக்கு காரணமான அன்றைய அதிமுக காலகட்டத்தில் இருந்த அமைச்சர்  பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் அவர்கள் மீது எல்லாம் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது தவிர்த்து மக்கள் வரிப்பணத்தில் கொள்ளையடித்து சுகபோகமாக வாழ்ந்து வரும்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரையும் அழைத்து வந்து  அந்தப் பூங்காவிலேயே பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து நிர்வாணமாக்கி ரத்தம் சொட்ட சொட்ட சாட்டையால் அடித்தால் மட்டும் தான் இது போன்ற ஊழலுக்கு அதிகாரிகள் உறு துணையாக இருக்க மாட்டார்கள்.

ஊழல் செய்யவும் தயங்க மாட்டார்கள். எனவே இந்த நிலை கொண்டு வந்தால் மட்டும் தான் தமிழகம் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேறும் அதே சமயத்தில் அதிகாரிகளின் ஊழலும் குறையும் என்கின்றனர் தினசரி அங்கு நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள்.

அது ஒப்பந்த ஊழியருக்கு தரும் 20 ஆயிரம் சம்பளத்தை தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக ஒதுக்கினால் தினமும் பூங்காவை பராமரிக்கும் வேலையும் செய்வார்கள் பூங்காவும் தூய்மையாக வைத்துக் கொள்வார்கள்.

 

அது தவிர காலையில் பூங்கா திறக்கும் நேரம் மூடும் நேரம் என்கிற தகவல் பலகை கூட அதில் இல்லை என்பது வருத்தம் அடையக்கூடிய செய்தி. இரண்டு தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ராணுவ ஊழியர் ஒருவரும் அரசு ஊழியர் ஒருவரும் சம்பந்தப்பட்ட சிவா வீட்டுக்குச் சென்று ஏழு முப்பது மணி ஆகியும் பூங்கா ஏன் திறக்கவில்லை என்று கேட்டு சாவி வாங்கி வந்து திறந்து நடை பயிற்சி மேற்கொண்டார்கள்.

இதையும் படிங்க.!