chennireporters.com

#Police destroyed ganja; 4கோடி 50லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை அழித்த போலீசார்.

ரூ. 4.5 கோடி மதிப்­புள்ள கஞ்­சா, ஹசிஸ் தீயி­லிட்டு அழிப்பு: ­போ­தைப்­பொருள் தடுப்பு நுண்­ண­றிவுப்பிரிவு போலீஸ் நட­வ­­டிக்­கை.”போதையில்லா தமிழ்நாடு” முயற்சியின் ஒரு பகுதியாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப்பொருட்களை அழிக்கும் பணி, தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு சிஐடி பிரிவு மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று 24.01.2025 ஆம் தேதி 66 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள 1400 கி.கி உலர் கஞ்சா மற்றும் 74.150 கி.கி ஹசிஷ் ஆகியவை அனைத்து சட்டமுறைகளையும் பின்பற்றி செங்கல்பட்டு மாவட்டம் தென் மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் எரிக்கப்பட்டது.சென்னை போதைப்­பொருள் தடுப்பு நுண்­­ண­றிவுப் பிரிவு எஸ்பி மயில்­வா­கனன் மற்றும் தமி­ழ­க தடயஅறிவியல் ஆய்வகம் உதவி இயக்­குநர் போதை மருந்துகள் மற்றும் செயல்முறையை மேற்பார்வையிட்டனர்.Police destroy ganja worth Rs 18 croreமனமயக்கப் பொருட்களை போதைப்பொருட்கள் அழிக்கும் மற்றும் மனமயக்கப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்: 10581 மூலம் மற்றும் வாட்ஸ்அப் எண்: 949810581 அல்லது மின்னஞ்சல் முகவரி [email protected] மூலம் பகிறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க.!