#Exclusive special story.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர் அருண் IPS இவர் மீது பல்வேறு விமர்சனங்களை அரசியல் கட்சிகளும் சவுக்கு சங்கர் போன்ற youtuber களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
அருண் IPS அவர்கள்.
இந்த நிலையில் தன்னை யாரும் அசைக்க முடியாது என்கிற எண்ணத்தில் காக்கி சட்டை போட்ட கர்வத்தில் தான்தோன்றித்தனமாக ஆட்டம் போட்டார் என்று சக அதிகாரிகளே கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் பல போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றும் எங்கள் கட்சிக்கு நடத்தும் பிரச்சாரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று புகார் அளித்திருந்தார். அதன் பிறகு கூட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலையில் தேர்தல் ஆணையம் திடீரென கமிஷனர் அருணை கமிஷனர் பதவியில் இருந்து மாற்றி காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டது.
தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்கள்.
காத்திருப்போர் பட்டியல் வைப்பதற்கு முன்னதாக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவு விட்டு சென்றார். அது குறித்து பல போலீஸ் அதிகாரிகள் அருண் செய்த விஷயத்தை கிண்டலாக கமாண்ட் அடித்து வருகின்றனர். சவுக்கு சங்கருக்கு இவருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் பல இருந்த போதும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கரை மீண்டும் குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு. சட்ட ரீதியாக எதிர்கொள்வது தான் ஒரு நல்ல ஐபிஎஸ் அதிகாரிக்கு அழகு என்கின்றனர்.
சவுக்கு சங்கர்
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பொழுது திரைப்பட நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கமிஷனரின் தனிப்படையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் அருள்மணி என்பவர் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் நடிகர்களை மிரட்டி பணம் சம்பாதித்து விட்டதாக வருமான வரித்துறையினர் அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்கள்.
தற்போது அவர் வருமான வரித்துறை வளையத்தில் விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி போலீஸ் கமிஷனர் அருணுக்கும் தெரியும் இருப்பினும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போனதால் சவுக்கு சங்கர் தான் இந்த செய்தியை வருமானவரித்துறையினருக்கு புகாராக அனுப்பினார் என கூறப்படுகிறது.இதனால் தான் சவுக்குசங்கர் மீது அருணுக்கு கடும் கோபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
இதே போல ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு வழங்கப்பட்டு இருந்த ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பை அருண் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட போது சென்னை போலீசில் காவலர்கள் பற்றாக்குறை என்று திரும்பப் பெற்றார். ஆனால் அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி துறை ரீதியாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு புகார் அனுப்பிய பிறகு ஒரு காவலர் வழங்கப்பட்டார்.
இதுபோல பல்வேறு செய்திகள் அருண் கமிஷனராக இருந்த பொழுது நடந்துள்ளது. அவர் செய்யும் தவறை சுட்டிக்காட்டினால் அதை மனதில் வைத்துக் கொண்டு பொய்யான ஒரு குற்றச்சாட்டை பயன்படுத்தி தன் மீது குறை சொன்னவர்களை சிறையில் அடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்கின்றனர் சில போலீஸ் அதிகாரிகள்.
உளவுத்துறையில் பணியாற்றும் சில போலீஸ் அதிகாரிகள் அருணை பற்றியும் அருணுக்கு ஆதரவாக உள்ள பத்திரிகையாளர்கள் போலீஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகள் பற்றியும் பல தகவல்களை பல பத்திரிகையாளர்களுக்கு பல ஹோட்டல்களில் சந்தித்து செய்தியாக கொடுத்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இன்னும் மர்மம் விலகாத நிலையில் ஒருவரை எந்த காரணமும் இன்றி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்த என் கவுண்டர் யாரைக் காப்பாற்ற என்ன காரணத்திற்காக நடந்தது என்பதை இதுவரை காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை. தற்போதைய தலைவராக இருக்கும் ஆனந்தும் திருமதி ஆம்ஸ்ட்ராங் இடம் அண்ணன் வழக்கை சிபிஐ விசாரிக்க சொல்லி கேட்கிறேன் என்று சொல்லி பதவி வாங்கியவர் இதுவரை அது சம்பந்தமாக எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆம்ஸ்ட்ராங் மனைவி பல நேர்காணலில் புகாராக சொல்லியுள்ளார்.
போலீஸ் தரப்பில் நியாயம் இருக்கிறது என்பதை கமிஷனர் மற்றும் தமிழக அரசு சொல்லுமே ஆனால் தமிழக அரசின் சார்பாக சிபிஐ விசாரணை கேட்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள்.
தமிழக காவல்துறை வரலாற்றில் ஒரு சில அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களாக காட்டிக் கொள்வார்கள் ஆனால் வெளிப்படையாக நடந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் கமிஷனர் அருண் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்றும் என்னை யாரும் ஒன்றும் அசைத்து விட முடியாது என்று சவால் விட்டுக்கொண்டு கம்பீரமாய் நிற்பது கண்டு சக காவல்துறை அதிகாரிகள் பொறாமை பட்டு வந்தனர்.
தங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ள காப்பாற்றிக்கொள்ள இப்படி வெளிப்படையாக ஜால்ரா தட்டுவது காக்கிக்கு ஒரு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இருக்கிறது என்கின்றனர்.போதை பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வடக்கில் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டரிடம் கமிஷனர் அருண் உங்களிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொள்ள சொன்னார் என்று இன்ஸ்பெக்டர் அதாவது கமிஷனரின் சிறப்பு பிரிவில் ஸ்பெஷல் டீமில் பணியாற்றும் அருள் மணி மிரட்டி வாங்கி இருக்கிறார்.
அவரும் பணம் கமிஷ்னர் சொன்னப்பிறகு கேள்வி எதுவும் கேட்காமல் கொடுத்திருக்கிறார். இப்படி பல இடங்களில் கமிஷனரின் ஸ்பெஷல் டீமில் பணியாற்றியவர்கள் பல பேரிடம் பணம் பெற்றுள்ளனர். குறிப்பாக சென்னையில் இயங்கும் தனியார் விடுதிகள் பார்கள் மற்றும் சூதாட்ட கிளம்புகளில் பல லட்சம் ரூபாய் பணம் லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள். இதை எல்லாம் கமிஷனர் அருண் பெயர் சொல்லியே லஞ்சமாக பெறப்பட்டுள்ளது.
யார்? யார்? எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை வேண்டுமானால் சிபிஐயிடம் விசாரிக்க சொல்லி தமிழக அரசு அல்லது தன் பெயரை தவறாக பயன்படுத்திய எனக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அருண் வேண்டுகோள் வைத்தால் சிபி விசாரித்த பிறகு உண்மை நிலை தெரியவரும். என்கின்றனர் சில உளவுத்துறை அதிகாரிகள்.
இந்த செய்தி குறித்து ஐபிஎஸ் அதிகாரி அருண் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் அதை நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
