புழல் பி டி ஓ அலுவலகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பது குறித்து நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது தவிர மாவட்ட ஆட்சியருக்கும் பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஊழலில் திளைத்து லஞ்சத்தில் குளித்து பிராடுத்தனம் செய்து வாரிசுருட்டும் ஃபிராடு பிடிஓ சித்ரா பெர்னாண்டோவுக்கு மீண்டும் பிடிஓ பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக முதல்வருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து நமது அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த மார்ச் 2023 முதல் பிப்ரவரி /2024 வரை ஆணையாளராக பணி புரிந்தவர் சித்ரா பெர்னான்டோ மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. அதில் குறிப்பாக விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுங்காவூர் கிராமத்தில் சுமார் 7 ஏக்கர் கொண்ட தரிசு நிலத்தில் 143 மனைகள் மற்றும் விளாங்காடுபாக்கம் பகுதியில் 62 மனைகள் அமைக்க 24/04/2023 அன்று CMDA மூலம் மனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காமல் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் 19/12/2023 அன்று நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் போடப்படாத LAYOUT ற்கு தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய திமுக சேர்மன் தங்கமணி இணைந்து அனுமதியும் வழங்கி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்
இதில் பல லட்சம் ரூபாய் திமுக சேர்மன் தங்கமணிக்கும் பிடிஒ சித்ராவுக்கும் கை மாறியதாக கூறப்படுகிறது. போடாத மனைப்பிரிவிற்கு அனுமதி கொடுத்து சித்ரா பெர்ணாண்டோ மீது நடவடிக்கை மேற்கோள் வேண்டி அப்பகுதியின் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா மீரான் கடந்த 26/12/2023 மற்றும் 15/02/2024 அன்று CMDA, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ( ஊராட்சிகள் ) திருவளளூர் மாவட்டம் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சித்ரா பெர்ணாண்டோ மற்றும் சேர்மன் தங்கமணி திருமால்
மேற்படி சித்ரா பெர்ணாண்டோ மற்றும் சேர்மன் தங்கமணி திருமால் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகாவூர் கிராமத்தில் S R V என்ற தொழிற்சாலை எந்த ஒரு அனுமதியும் பெறாமல் முறைகேடாக இயங்கி வந்தன. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் அனுமதி பெறாமல் இயங்கிய வந்த அந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி புகார் மனு அளித்துள்ளார். புகார் மனு பல மாத காலமாக நிலுவையில் இருந்து வந்தன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் S R V தொழிற்சாலைக்கு சித்ரா பெர்ணாண்டோ முறைகேடாக அனுமதி கொடுத்தது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கவுன்சிலர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தற்போது இவ்வளவு குற்றச்சாட்டுகள் சித்ரா பெர்ணான்டோ மீது இருப்பினும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக மீண்டும் பணி அமர்த்தியுள்ளனர். மீண்டும் புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக சித்ரா பெர்னாண்டோ அவர்களே நியமிக்க திமுக மாதாவரம் திமுக எம்எல்ஏ சுதர்சனம் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் சொல்லி மணிசேகரை மாற்றி விட்டு மீண்டும் சித்ராவுக்கு பதவி வழங்கவேண்டும் என்று பரிந்துறை செய்ததாக கூறப்படுகிறது.
எஸ்.சுதர்சனம்
அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கெட்ட பெயரை ஏற்படுத்து நோக்கில் பணியாற்றி வரும் பி டி ஓ சித்ரா மீது நடவடிக்கை எடுக்காமல் ஊழல்களுக்கு துணை நின்று பொதுமக்களுக்கு கடமை உணர்வுடன் செயலாற்ற வேண்டிய உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்கு எதிராக செயல்படுவதால் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியாளர்களுக்கும் திமுக அரசுக்கும் பொதுமக்களிடையே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
நிர்வாகத் திறனற்ற மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை மாற்ற வேண்டும் என்று அனைத்து கட்சி சார்பில் கலெக்டருக்கு எதிராக இரண்டு தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாதவரம் திமுக எம்எல்ஏ சுதர்சனத்தின் பெயரை திமுக சேர்மன் தங்கமணியின் கணவர் திருமால் தவறாக பயன்படுத்தி வருவதாக அங்குள்ள உடன்பிறப்புகள் சிலர் கூறி வருகின்றனர்.
அது தவிர இங்கே பெறப்படும் ஊழல் பணத்தில் எம்எல்ஏவுக்கும் பங்கு தரப்படுகிறது என்று சேர்மன் தரப்பினர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். ஆனால் தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நிர்வாகிகள் மீது எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான சுதர்சனம் எம்எல்ஏ ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
எனவே இந்த செய்தி குறித்து திமுக எம்எல்ஏ சுதர்சனம் அவர்கள் அவரது தரப்பு விளக்கத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.