chennireporters.com

#Ratan Tata passed away; மனிதப் புனிதரானார். எளிமையின் நாயகன் ரத்தன் டாடா.

வயது மூப்பின் காரணமாக தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் அவர் காலமான சிறிது நேரத்திற்குள் அவரைப் பற்றி பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது இந்த செய்தி சமூக வலைதளங்களை தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. உண்மையான காரணம் என்ன என்பதை அவரது நெருங்கிய நண்பர்களோ அல்லது அவரது உறவினர்களோ இதுகுறித்து பதில் தெரிவித்தால் தான் உண்மை என்னவென்று தெரியவரும்.

தனது தொண்டு பணிகளுக்காகவும், எளிமையான வாழ்க்கை முறைக்காகவும் போற்றப்படும் ரத்தன் டாடா, தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து ஒருமுறை பேசியிருந்தார். இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

Ratan Tata | பிரியாவிடை கொடுக்கும் மக்கள்... ரத்தன் டாடாவின் இறுதிச்சடங்கு... எங்கு, எப்போது? - இதோ விவரம்! – News18 தமிழ்

பிரபல இந்திய தொழிலதிபரும், இந்திய பெரும்பணக்காரர்களில் ஒருவருமான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் வளர்ச்சி முக்கிய பங்காற்றினார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!

அவரின் மறைவு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்கள், பெரும்பணக்காரர்களால் போற்றப்படும் நபராக இருக்கும் ரத்தன் டாடா தனது தொண்டு பணிகளுக்காக நன்கு அறியப்பட்டவர். ரத்தன் டாடா ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தால் அவர் தனது சொத்து, செல்வம், செல்வாக்கு என எதையும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.

தொழிலதிபர் ரத்தன் டாடா வயது முதிர்வால் காலமானார்!

தொழில் முனைவோமட்டுமின்றி சாதாரண பொதுமக்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் ரத்தன் டாடா. இளம் மிக இளம் வயதிலேயே டாடா குழும நிறுவனத்திற்கான பல்வேறு யோசனைகளை வழங்கினார். டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. ரத்தன் டாடா பற்றியும், அவரின் தொழில் வளர்ச்சி குறித்தும்யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டா ரீல்கள் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பல வீடியோக்கள் வலம் வருகின்றன.

மோடி முதல் ஸ்டாலின் வரை... ரத்தன் டாடா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

ரத்தன் டாடாவின் புதுமையான, ஆக்கப்பூர்வமான வணிக யோசனைகள் பல்வேறு தரப்பினருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதால் அவரை பலரும் தங்களின் ரோல்மாடலாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ரத்தன் டாடா ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தாலும் அவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து ரத்தன் டாடாவே ஒருமுறை பேசியிருந்தார். மேலும் தனது முதல் காதல் குறித்தும், தனக்கு நடைபெற இருந்த திருமணம் ஏன் நின்று போனது என்றும் பேசி உள்ளார். ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம்? ரத்தன் டாடா தனக்கு பல காதல் உறவுகள் இருந்ததாக வெளிப்படையாக பேசியிருந்தார், ஆனால் எந்த காதலும் திருமணத்தில் முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ நான் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்த போது ஒரு பெண்ணை காதலித்தேன். அந்த பெண்ணை தான் நான் திருமணம் செய்து கொள்ள நினைத்தேன்.

Ratan Tata - இந்தியாவிற்கே பேரிழப்பு! மறைந்த ரத்தன் டாடா ஆட்டோமொபைல் துறையில் சாதித்தது என்ன தெரியுமா? - Tamil DriveSpark

எனினும் எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்ததால் அவரை பார்க்க நான் இந்தியா வந்துவிட்டேன். அப்போது தான் எனக்கும் அந்த பெண்ணிற்கும் இந்தியாவில் திருமணம் நடைபெற இருந்தது. இருப்பினும், இந்தியா-சீனா போர் வெடித்த பிறகு, அப்பெண்ணின் பெற்றோர் அவரை இந்தியாவுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை, இதனால் நாங்கள் பிரிந்துவிட்டோம். எங்கள் திருமணமும் நடைபெறவில்லை.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரத்தன் டாடா, ஆனால் அதன் பிறகு தனக்கு வேறு காதல் உறவுகள் இருந்ததாகவும், எனது மனைவி இவர் தான் என்று நினைக்கும் அளவுக்கு நான் யாரையும் பார்க்கவில்லை. ஆனால் இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, நடந்த விஷயங்களுக்கான நான் ஒருபோதும் வருத்தப்பட்டது இல்லை” என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க.!