வருமானத்துக்கு அதிகமாக;1,188 சதவீதம் சொத்து சேர்த்ததாக சேலம் அரசு ஊழியர் மீது வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை. சேலம், நவ.29-வருமானத்துக்கு அதிகமாக 1,188 சதவீதம் சொத்து சேர்த்ததாக சேலத்தை சேர்ந்த அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக; சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நாவல்பட்டியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 36). இவர் ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பூபாலன் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பி ரண்டு கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் பூபாலன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அவர் மொத்தமாக கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரை ரூ.1 கோடியே 9 லட்சத்து 56 ஆயிரத்து 619 சேர்த்துள்ளார். இது அவரது வருமானத்தை விட 1,188 சதவீதம் அதிகமாகும். இதையடுத்து அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் பூபாலன் சேலம் மாவட்டத்தில் சில இடங் களில் சொத்துகள் வாங்கி உள்ளார். குறிப்பாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரை அவரது சொத்து மதிப்பு ரூ.7 லட்சத்து 54 ஆயிரத்து 668 ஆக இருந்தது. பின்னர் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரை அவ ரது வீடு, வீட்டு மனை, நகைகள், வாகனங்கள், வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளின் மதிப்பை கணக்கீடு செய்தபோது அது ரூ.94 லட்சத்து 9 ஆயி ரத்து 943 ஆக உயர்ந்திருந்தது.இவ்வாறு பல்வேறு வகைகளில் கணக்கீடு செய்ததன் அடிப்படையில் பூபாலன் வருமானத்துக்கு அதிகமாக 1,188 சதவீதம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மேலும் மேட்டூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினோம். இதில் எந்த பொருட்களும், ஆவணங்களும் சிக்கவில்லை. மேலும் இவ்வளவு சொத்து அவர் எப்படி சேர்த்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.தந்தையை தொடர்ந்து மகன் மீதும் வழக்கு. லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பூபாலனின் மாத வருமானம் ரூ.30 ஆயி ரம் என்று கூறப்படுகிறது. அவர் வேலைக்குச் சேர்ந்த 1.6.2017 முதல் 30.6.2022 வரை அவரது மாத வருமானம் மொத்தம் ரூ.9 லட்சத்து 22 ஆயிரத்து 659 என்று லஞ்சஒழிப்பு துறையினரின் விசா ரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் அவர் வருமானத்தை விட 1,188 சதவீதம் சொத்துகள் அதிகமாக சேர்த் துள்ளது (ரூ.1 கோடியே 9 லட்சத்து 56 ஆயி ரத்து. 619) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு சொத்துகள் எப்படி சேர்த்தார்? என்பது குறித்து போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இதனிடையே பூபாலனின் தந்தை சென்னகிருஷ்ணன் அண்ணா போக்குவரத்து தோழிலாளர் சங்கத்தில் செயலாளராக பதவி வகித்தது. தார். அவர் மீதும் கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்பு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.