சென்னை, தி.நகர், வடபழனி, கோயம்பேடு, வில்லிவாக்கம், அண்ணாநகர், ஆவடி, அம்பத்தூர்,காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் இயங்கும் பார்களில் சில்லி சிக்கன், பெப்பர் சிக்கன் ஆகியவற்றில் குடிமகன்களை ஏமாற்றும் வகையில் சில்லி சிக்கனில் { போன்லெஸ்} அதாவது எலும்பில்லாத கறியில் மாட்டிறைச்சியையும் சேர்த்து கலப்படம் செய்து கொடுத்து 180 கட்டணமாக வசூலித்து வருகின்றனர். என்ற அதிர்ச்சி தரும் செய்தி நமது அலுவலகத்திற்கு சொன்னார் நமது வாசகர் ஒருவர். என்ன எங்கே என்று நாம் விசாரிக்க தொடங்கினோம்.
இதுகுறித்து நேற்று ஆவடி அருகே உள்ள கவரப்பாளையம் அருகில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சேஷாத்திரி என்கிற ஐயர் ஒரு பியர் வாங்கி குடித்துவிட்டு ஒரு சில்லி சிக்கன் ஆர்டர் செய்திருக்கிறார். சார் போன்ல செல்லாமல் இருக்கிறது வேண்டுமா 180 ரூபாய் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சேஷாத்திரி அய்யரும் சரி என்று சம்மதம் தெரிவித்து காரம் குறைவாகவும், அஜினோமோட்டோ போடாமல் கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். சரி என்று ஒத்துக் கொண்ட சர்வர் ஐந்து நிமிடம் கழித்து சில்லி சிக்கன் எடுத்து வந்து கொடுத்திருக்கிறார்.
அதை எடுத்து சாப்பிட்ட போது அதில் மாட்டிறைச்சி கலந்திருப்பது தெரியவந்தது. சிக்கன் கறி மெதுவாகத்தானே இருக்கும். அதாவது சாப்ட் ஆக தானே இருக்கும். இது என்ன கறி கடினமாக இருக்கிறது என்று கேட்டால் இல்லை சார் ரொம்ப நேரமாக அது ஃப்ரீஷரில் வைத்து எடுத்துப் போட்டதனால் விரைத்திருக்கும். ஆனால் அது சிக்கன் கறி தான் என்று சொல்லியிருக்கிறார். சிக்கன் கறியில் நரம்பு போன்ற கரிகள் எதுவும் இல்லை என்பது தெரிந்த பிறகு அவர் கேட்டதற்கு எதுவும் பதில் சொல்லாமல் மழப்பலாக பதில் சொல்லி இருக்கிறார்.

ஒரு கிலோ சிக்கன் விலை 180 ரூபாய் தான் ஆனால் நீங்கள் 100 கிராம் சிக்கன் சில்லி சிக்கனை நூற்றி என்பது ரூபாய்க்கு (180) விற்பது எந்த வகையில் நிஞாயம் அதிலும் மாட்டிறைச்சி கலந்து கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் போய்விட்டார் பாரில் வேலை செய்யும் ஊழியர். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை உங்களையெல்லாம் கடவுளும் மன்னிக்க மாட்டார் முதலமைச்சர் விஜய் மன்னிக்க மாட்டார் என்று சாபம் விட்டு வந்திருக்கிறார் ஷேஷாத்ரி ஐயர்.
