எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள். சாம்சங் தொழிலாளர்களை வீடுபுகுந்து கைது செய்யும் விடியாத அரசு என்ற தலைப்பில் தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.எஸ்.மணிஅவர்கள்ஒருஅறிக்கைவெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது.கெட்டிகாரன் புளுகு எட்டு நாளில் வெளிப்படும் என்பது போல்
திமுக 2021 தேர்தலில் பொய்வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது,
விடியல் அரசு தருவோம் என்று வேடம் போட்ட குள்ளநரியின் சாயம் வெளுத்துபோய்விட்டது,
விடியாத அரசு, விளங்காத அரசு என்பதை தமிழ்நாடு மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர் ,கே.ஆர்.எஸ்.மணி. தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் திமுக அமைச்சர்கள் நடத்திய நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செயல்பட்டுவரும் தென் கொரிய நாட்டைச் சார்ந்த சாம்சங் மின்னணு வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது,
அந்த தொழிற்சாலையில் 1800 நிரந்தர தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள்
11 மணிநேரத்திற்கு மேலாக வேலை வாங்கப்பட்டனர்,
ஓய்வு என்பதே கிடையாது. அவசரத்திற்கு கழிவறை போகக்கூட அனுமதிப்பதில்லையாம். கார்ப்பரேட் அடிமைகளாக தொழிலாளர்கள் நடத்தப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் தனியாக போய் நிர்வாகத்திடம் நியாயம் கேட்டால் அவர்களை இருட்டறை ரூமில் வைத்து மிரட்டியுள்ளனர்,
இந்நிலையில் தான் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தில் சேர்ந்து சிஐடியு இந்தியா சாம்சங் தொழிலாளர் சங்கம் என்கிற பெயரில் சங்கம் தொடங்கினர் ,
நிரந்தரப் பணி, முறையான ஊதியம் உரிய பணிநேரம், பணிப்பாதுகாப்பு,
அரசியல் அமைப்புச் சட்டம் 19( 1c) அனுமதித்துள்ளபடி சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை உள்ளிட்ட 19அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு, சாம்சங் நிறுவனத்திடம் மனுவை அளித்தனர், எந்த பதிலும் இல்லை,
பிறகு சட்டப்படி வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாக நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமாக தகவல் (நோட்டிஸ் )தந்தனர்,
அப்போதும் பதில் இல்லை,
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9ம்தேதி யிலிருந்து, சாம்சங் இந்திய நிறுவனத்திலிருந்து 2கி.மீ தூரத்தில் உள்ள எச்சூர் கிராமத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்,
காத்திருப்பு போராட்டம் நடக்கும் இடம் வழக்கறிஞர் ஒருவரின் தனியார் இடம், ஏறத்தாழ முப்பது நாட்களை கடந்த போதும் போராட்டம் சூடுபிடித்து நடந்து வருகிறது,1445 தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்,இடையில் செப்டம்பர் -16 ம்தேதி சாம்சங் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஷோகாஸ் நோட்டிஸ் கொடுக்கிறது அதில் 4நாட்களில் வேலைக்கு திரும்பவேண்டும், 7 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,
தொடர்ந்து தொழிலாளர்கள் அமைதி வழியில் பல கட்ட போராட்டங்களை
நடத்தினர், அக்டோபர் 2 ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற900 தொழிலாளர்களை விடியாத அரசு கைது செய்தது, இப்படி கோரிக்கை நிறைவேறாததால் போராட்டம் தொடர்ந்தது, இதற்கிடையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக்மாண்டவியா தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் தலையிட்டு உரிய தீர்வை தாமதமின்றி காணவேண்டும் என்று கடிதம் எழுதினார்,கே.ஆர்.எஸ்.மணி.ஒருங்கிணைப்பாளர் தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்.
அதற்கு பிறகு திமுக பெரிய நாடகத்தை அரங்கேற்றியது,
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகிய மூன்று அமைச்சர்களை இந்த பிரச்சினையில்
தலையிட்டு தீர்த்து வைக்க முதல்வர் ஸ்டாலின் நியமித்தார் என்று அறிவித்தனர்,
மூன்று சூறாப்புலிகளும் சிஐடியு தலைவர்களை அழைத்து பேசினார்கள் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை கூறினார்கள், முடிவு எதுவும் எட்டப்படவில்லை, சிஐடியு சங்கத்தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதுப்போல் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்,
முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடரும் என்று சொல்லிவிட்டு மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர், உண்மை இவ்வாறு இருக்க, நிர்வாகத்திற்கு சாதகமான ஒரு பத்து பேர் கொண்ட குழுவிடம்
பேச்சுவார்த்தை நடத்தி, 15 கோரிக்கையில் 14 கோரிக்கைகளை
நிர்வாகம் ஏற்றுக்கொண்டது, ஒரு கோரிக்கை சிஐடியு சங்கத்தை அங்கீகரிக்க மாட்டோம் என்பதுதான் சங்க அங்கிகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. எனவே பேச்சுவார்த்தை சுமூகமாக
முடிந்தது, தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புங்கள் என்று புளு கினி அமைச்சர்கள் பத்திரிக்கையில் பேட்டியளித்தனர்,
90 விழுக்காடு தொழிலாளர்கள் பந்தலில் குழுமி காத்திருப்பு போராட்டம்
நடத்திக்கொண்டிருக்கும் போது
யாரிடம் பேசினார்கள், யார் ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட்டது,
தொழிலாளர் விரோத திமுக அரசு அதன் புத்தியை காட்டிவிட்டது, நாங்கள் போராட்டத்தை தொடர்கிறோம் என்று சிஐடியு சங்கம் அறிவித்தது,அக்டோபர் 8ம் தேதி காவல் துறையையும் , வருவாய் துறையினரையும்தொழிலாளர்களுக்கு எதிராக விடியாத அரசு ஏவியது
போராட்டப்பந்தலை வருவாய் துறையினர் பிரித்து எரிந்தனர், தட்டிக்கேட்டவர்களை காவல்துறை கைதுசெய்தது,
நீதி கேட்டு கலெக்டரிடம் மனுக்கொடுக்க சென்ற 119 பேரை காவல்துறை கைதுசெய்தது, காவல்துறை தொழிலாளர்களை வீடுதேடிச்சென்று பயங்கரவாதிகளை கைதுசெய்வதுப்போல் துப்பாக்கி முனையில் கைதுசெய்து, வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியது. பேருந்துகளில் பயணம் செய்தவர்களை வழிமறித்து சோதனைசெய்து சாம் சங் தொழிலாளர் என்று தெரிந்தாலே விரட்டி, விரட்டி கைது செய்தது,
போராட்டக்களத்திற்கு தொழிலாளர்களை செல்லவிடாமல் காவல்துறை வேட்டையாடியது, எனவே தொழிலாளர்கள் தனியாக வேன் பிடித்து போராட்ட களத்திற்கு விரைந்தபோது வேன் கவிழ்ந்து தொழிலாளர்கள் காயமடைந்தனர், காயமடைந்த தொழிலாளர்களை பிற தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை காவல்துறை தடுத்துள்ளது, அப்போது நடந்த வாக்குவாதத்தை ஜோடித்து சப் இன்ஸ்பெக்டரை தாக்கியதாக களத்திலேயே இல்லாத தொழிற்சங்கத் தலைவர் முத்துக்குமார், எலன் உள்ளிட்ட 12பேர் மீது பொய் வழக்கு ஜோடிக்கப்பட்டது,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சிஐடியு சங்கத்தின் தலைவருமான சௌந்தரராஜன் பத்திரிக்கையாளர்களிடையே கூறும்போது,
வெள்ளைக்காரன் காலத்தில் நடந்த அடக்குமுறையை விஞ்சும் அளவிற்கு
அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று கூறினார்,சௌந்தரராஜன். சிஐடியு.
குடும்ப ஆட்சியின் குல விளக்கு உதவாத நிதி , அரிய
ஆலோசனையை நூறாண்டு கண்ட கம்யூனிஸ்டுகளைப்பார்த்து
“சாம்சங் நிறுவனம் இன்டர் நேஷனல் கார்ப்பரேட் நிறுவனமாம் அவர்கள் சங்கம் வைக்க அனுமதிப்பதில்லை என்று கொள்கை வைத்துள்ளார்களாம்
அதனால் அடம்பிடிக்காமல் வேலைக்கு போங்கள் “என்று அறிவுரை கூறுகிறார்,
விடியாத அரசின் வாரிசு மற்றும் அமைச்சர்களின் முகமூடியை, சிஐடியு தலைவர் சௌந்தரராஜனும், சாம்சங் சிஐடியு தலைவர் முத்துக்குமாரும்
கிழி கிழின்னு கிழித்து தொங்கவிட்டு உள்ளார்கள் ,
அவர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்,
சங்க அங்கீகாரம் தான் பிரச்சினை என்று அமைச்சர்கள் பொய் பேசுகிறார்கள், அது பிரச்சினையே அல்ல, சாம்சங் நிறுவனம் எங்களுக்கு என்ன அங்கீகாரம் கொடுப்பது, எங்களுக்கான அங்கீகாரத்தை தொழிலாளர்கள் கொடுத்துவிட்டனர்*தொழிலாளர்கள் மீது அக்கறையுள்ளவர்களாக பாவலா செய்யும் அரசின் கீழ் இயங்கும் தொழிலாளர் நலத்துறை சட்டப்படி சங்கப் பதிவுக்கு தேவையான ஆவணங்கள் கொடுத்தப் பின்பும், பதிவை தாமதப்படுத்தி வருவது ஏன்,?
*போராட்ட களத்தில் பெரும் பகுதி தொழிலாளர்கள் இருந்து கொண்டிருக்கும் போது, யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்,?
*கோரிக்கை எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டதாக ஏன் பொய்சொல்கிறீர்கள்?
* பத்து மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஊடகங்களில் உளரும்
அமைச்சர்கள், யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்கள் எங்களுடனா, சாம்சங் நிர்வாகத்திடமா?* தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு இருப்பதாக கூறுபவர்கள், தனியார் நிலத்தில் இருந்த போராட்டப்பந்தலை பிரித்தது ஏன்?
* சாம்சங் நிறுவனம் சங்கம் வைக்க அனுமதிப்பதில்லை என்று கூறும் துணை முதல்வர் உதயநிதி , தென்கொரியா நாட்டில் சாம்சங் நிறுவனத்தில் நேஷனல் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர் சங்கம் இருப்பதை அறிவாரா?
*சாம்சங் நிறுவனம் சங்கம் வைக்க அனுமதிப்பதில்லை என்று கூறுவதை
ஏற்கப்போகிறீர்களா, இந்திய நாட்டின் சட்டத்தை அமுல்படுத்த போகிறீர்களா?TRP Raja.தமிழகத் தொழில் துறை அமைச்சர்.
இப்படி பல கேள்விகளை எழுப்பியுள்ளனர், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பது போல் இந்த கெட்டிக்கார புளுகர்களின் பொய்முகம் மூன்று வருடத்தில் வெளுத்து விட்டது,
விடியாத அரசு சாம்சங் போராட்டத்தில் மட்டுமல்ல, தொடர்ந்து தொழிலாளர் விரோத அரசாகவே இருக்கிறது,
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 3 வருடத்திற்கு ஒருமுறை நடந்து வந்த நிலையில் தற்போது ஐந்து வருடமாகியும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை,
நகராட்சி, மாநகராட்சி,ஊராட்சிகளில் தூய்மை பணியாளர் பணி உள்பட ஆனணயர், உதவியாளர் தவிர அனைத்து பணிகளும் அவுட்சோர்சிங் முறையில் தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது, அதாவது அத்துக்கூலி முறையாக்கப்பட்டுள்ளது,கே.ஆர்.எஸ்.மணி. தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்.
தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு என்பதே கிடையாது,
இனிமேலாவது காம்ரேட்டுகள் இந்த பட்டாடைகள் உடுத்தியிருக்கும்
பகல் வேஷகாரர்களை நம்பாமல் இருப்பது அவர்களுக்கு நலம். காம்ரேடுகள் வரும் காலத்தில் தங்கள் கூட்டணியை பற்றி விரிவாக தெளிவாக முடிவெடுக்கின்ற காலம் வந்துவிட்டது. நல்ல முடிவை சிந்தியுங்கள் மாற்றம் நிலையானது மாறாதது எதுவுமே இல்லை உங்கள் கோட்பாட்டின் தொழிலாளர்களின் தோழன் ஏர் உழவனின் ஏந்தல் தமிழ் பண்பாட்டு கலாச்சார விவசாயகுடிமகன் எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்துங்கள் எதிர்காலம் உங்களுக்கும் மக்களுக்குமானது என்று மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.எஸ்.மணி தமிழக தேசிய விவசாயிகள் சங்கம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.