chennireporters.com

#youth massacre; ஆணவத்தின் உச்சம், விருது நகரில் இளைஞன் படுகொலை.

விருதுநகரில் இளைஞர் ஒருவர் நிர்வாணப்படுத்தி ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடரும் இந்த ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. சாதி ஆணவத்தை தடுக்க தமிழக அரசு எடுக்கபோகும் நடவடிக்கை தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கவேண்டும் என்கின்றனர் சாதிய எதிர்ப்பாளர்கள்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் அம்மன் நகரை சேர்ந்த மாரிமுத்து, மாரியம்மாள், தம்பதியினரின் மகன் அழகேந்திரன்  21 வயதான இளைஞர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து
வந்துள்ளார், இந்த விவகாரம் அந்த பெண்ணின் தாய் மாமா பிரபாகரனுக்கு தெரியவந்த்து பலமுறை இந்த இளைஞரை அவர் கண்டித்துள்ளார்.

சம்பவத்தன்று கடந்த ஜூன் 24 ம் தேதி இரவு அழகேந்திரன் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி சென்றுள்ளார். ஆனால் நெடு நேரமாகியும் அழகேந்திரன் வீடு திரும்பாததால் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் செல்போன் ஆப் செய்யப்பட்டதால், சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் கள்ளிக்குடியில் இருக்கும் உறவினர்களிடம் தொலைபேசியில் தகவலை கேட்டுள்ளனர்.

அழகேந்திரனை, பிரபாகரன் தொலைபேசியில் அழைத்து அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு வருமாறு கூறி பிரபாகரனின் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இருவருக்கும் பிரச்சனை இருப்பதால் தன் மகனை ஏதாவது செய்திருக்க கூடுமோ என்ற அச்சத்தில், ஜூன் 25 ம் தேதி அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், புகாரை வாங்க மறுத்து சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Madurai Crime: மதுரையில் இளைஞர் தலை துண்டித்து கொடூர கொலை; மாற்று சமூக பெண்ணை காதலித்ததால் வெறிச்செயல்?

உடனடியாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் ஜூன் 26 அதிகாலை 1 மணி அளவில் புகார் அளிக்க சென்றுள்ளனர், அவர்களை காலையில் வந்து புகார் அளிக்குமாறு காவல்துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர். பின்னர் போலிசார் இளைஞரின் பெற்றோருக்கு தொலைபேசியில் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.

கள்ளிக்குடி அருகே உள்ள கண்மாயில் நிர்வாணமான  நிலையில் இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். அது தங்களது மகன் அழகேந்திரன் என்பது உறுதி செய்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு  போலிசார் அனுப்பி வைத்தனர், இதனை அடுத்து இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எனது மகனை ஆணவ படுகொலை செய்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

என்னுடைய மகன் காதலித்த பெண் தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் நாங்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஏற்கனவே பெண்ணின் உறவினர்கள் என்னுடைய மகனை சாதிய பாகுபாடு காரணமாக  பல முறை கண்டித்துள்ளனர்.

சாதி எதிர்ப்பாளர் ரமணி

இதை மனதில் வைத்து தான் என்னுடைய மகனை அவர்கள் ஆணவ படுகொலை செய்துள்ளார்கள் எனவே சிபிசிஐடி விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விடுதலைப் புலிகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் உறவினரான பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட இளைஞனும் என்னுடைய முறைப் பெண்ணும் காதலிப்பதை தெரிந்து பலமுறை இருவரையும் அழைத்து கண்டித்து உள்ளேன்.

ஆனால் அவர்கள் அதைக் கேட்காமல் மீண்டும் காதலித்து வந்ததால் ஆத்திரமடைந்த நான் அழகேந்திரன் என்னுடைய சொந்த ஊரான கள்ளிக்குடி பகுதியில் இருப்பதை அறிந்து அவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய உறவினர் பெண்ணை காதலிப்பது தொடர்பாக சுமூகமாக பேசி முடிவெடுக்கலாம் வா என கூறி எனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று  கள்ளிக்குடி அருகே உள்ள கண்மாயில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம்.

சாதி வெறி பிடித்த மயிராண்டி பிரபாகரன்

அப்போது உறவினர் பெண்ணை காதலிப்பது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கோபத்தில் மது போதையில் அவனை நிர்வாணமாக்கி நான் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியால் அவனது தலை கை கால்களை துண்டு துண்டாக வெட்டி   வீசி கொலை செய்ததாக பகிர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மேலும் கொலை செய்த பிரபாகரன் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்ததும் குண்டர் சட்டத் திட்டத்தின் கீழ் சிறை சென்றவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது, இருப்பினும் இந்த கொலை தொடர்பாக வேறு யாரும் ஈடுபட்டு உள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆணவ படுகொலை செய்யப்பட்ட அழகேந்திரன் அம்மா

தமிழகத்தில் தொடர்ந்து ஆணவ படுகொலைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வந்து சாதிய ஆணவத்தை இரும்பு கரம் கொண்டு கொடுக்க வேண்டும் இந்த அரசு கொண்டுவரும் சட்டம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைய வேண்டும் என்கின்றனர் சாதிய எதிர்ப்பாளர்கள்.

இதையும் படிங்க.!