chennireporters.com

குரங்கம்மை நோய்; அவசர நிலை அறிவிப்பு

குரங்கு அம்மை என்பது வைரஸால் உண்டாகும் ஒரு தொற்று நோய்.

இந்நோய் மனிதர்களையும் சில விலங்குகளையும் தாக்குகின்றன.

இதற்கான நோய் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடலில் தசை வலி, நெறிகட்டுதல், உணர்தல் போன்றவையாகும் இதனைத் தொடர்ந்து தடிப்புகள் கொப்புளங்கள் போன்றவை தோன்றலாம்.

உலக நாடுகளில் குரங்கம்மை பரவும் நாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை நோயை அவசர நிலையாக அறிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், குரங்கம்மை பரவும் வேகம் கவலை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு இந்த தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

அதனால் துரித நடவடிக்கை எடுக்க உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க.!