chennireporters.com

இளைஞரிடம் பணம் பறித்த பொறுக்கி போலீஸ் இருவர் கைது.

சென்னையில் இளைஞரிடம் நான்கு ஆயிரம் ரூபாய்  வழிப்பறி கொள்ளையடித்த இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியை பத்திரிகைகளுக்கு தராமல் போலீசார் மறைத்துள்ளனர்

கிருஷ்ணன் கூடுவாஞ்சேரி தர்கா நகர் துலுக்கானத்தம்மன் தெருவை சேர்ந்தவர் இவர் தனது மாமன் மகள் ஜெயஸ்ரீ உடன் தனது காரில் படப்பையில் உள்ள கே.ஐ.எம்.எல் என்கிற கம்பெனி அருகில் காரில் உட்கார்ந்து கொண்டிருந்த போது போலீஸ் உடையில் வந்த காவலர் அமிர்தராஜ் இருசமநல்லூர் மதுராந்தகத்தை சேர்ந்தவர் மற்றொரு காவலர் மணி பாரதி ராமானுஜபுரம் மதுரமங்கலம் திருப்பெரும்புதூர் பகுதியை சார்ந்தவர்.

வர் முதுநிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த இரண்டு காவலர்களும் குன்றத்தூர் காவல் நிலையத்தில் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.  இவர்கள் கிருஷ்ணனை மிரட்டி கூகுள் பேவில் 4000 ரூபாய் பணத்தை மிரட்டி வாங்கியுள்ளனர்.  இது தொடர்பாக கிருஷ்ணன் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்ற எண் 72/23 பிரிவு 384 ,506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் செல்லும் லாரி மற்றும் வேன், பைக், கார் உள்ளிட்டவர்களை வழிமறித்து போலீசார் பணம் பறித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாளாக இருந்து வருகிறது.

ஆனால் யாரும் நேரடியாக காவல் நிலையத்தில் புகார்  அளிப்பது இல்லை.  இதனால் அது அதிகரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழிப்பறி நடந்துள்ளது.  இளைஞரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு காவலர்களை கைது செய்த போலீசார் அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

உயர் போலிஸ் அதிகாரிகள் அந்த இரண்டு காவலர்களையும் நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் பொதுமக்கள் யாராவது தவறு செய்யும் பட்சத்தில் அதை வீடியோ எடுத்து பரப்பும் காவல்துறையினர் வழிப்பறி செய்து பணம் பறித்த இந்த திருட்டு காவலர்கள் முகத்தை காட்டாமல் இந்த செய்தியை வெளியே பரவ விடாமல் தடுத்தது கடும் கண்டனத்திற்குரியது என்கிறார் உயர்நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரவி.

இதையும் படிங்க.!