chennireporters.com

கஞ்சா, சரக்கு, கொலை. பழிக்கு பழி. மேலும் சில தலைகள் உருளும் அபாயம்..

திருவள்ளூர் அருகே கஞ்சா குடித்த போதையால் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட  சம்பவர் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிக்கலை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் வேலு(30). வேலு வெல்டர் வேலை செய்து வருகிறார். வேலு வெல்டர் கடந்த  இரண்டு தினங்களுக்கு முன்பு தனது நண்பர்கள் செல்வா (26), கோகுல், ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேரும் கஞ்சா குடித்து விட்டு  சிறுகடல் என்ற கிராமத்தில் உள்ள  மதுபான கடையில்  மது குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது தின்பண்டம் வாங்குவதில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குடிபோதையில் வேலுவின் நண்பனான செல்வா என்பவன் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவின் கழுத்து வயிறு, கை, கால் என சரமாரியாக வெட்டியுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே வேலு பலியானார்.

 

வேலு

இதுகுறித்து செவ்வாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் மகேஷ் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் செவ்வாப்பேட்டை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை மடக்கி  விசாரணை மேற்கொண்டதில் சிறுகடல் அருகே வேலுவை  வெட்டிக் கொலை செய்த செல்வா மற்றும் ஸ்டாலின் என்பது தெரியவந்தது.

இதையடுத்து செல்வா மற்றும் ஸ்டாலினை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த கோகுலை(21) செவ்வாப்பேட்டை போலீசார் தேடி வந்தனர்.

கோகுல்

கோகுல் தொட்டிக்கலை பொன்னியம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதை அறிந்த வேலுவின் நண்பர்கள் சிலர் கோகுலை பிடித்து சிமெண்ட் கல்லைக் கொண்டு தலையில் அடித்து கொலை செய்து தப்பி ஓடினர். தன் நண்பனை கொலை செய்ததற்கு பழிக்கு பழி தீர்த்தனர்.

இதனையடுத்து செவ்வாப்பேட்டை போலீசார் கோகுலை தேடி வந்துள்ளனர். செவ்வாப்பேட்டை அடுத்த தொட்டிகலை பொன்னி அம்மன் கோயில் கிருஷ்ணா கால்வாய் அருகில் உள்ள நிலத்தில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து செவ்வாப்பேட்டை போலீஸ்  இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் கோகுல் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோகுல் கொலை வழக்கில் வேலுவின் நண்பர்கள் அயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுனில், சதிஷ் ,வெங்கடேசன் ஆகிய  4 பேரை செவ்வாப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  இந்த இரட்டை கொலை கோஷ்டி தொடர்பாக இன்னிம் சில தலைகள் உருளும் என்கின்றனர் அந்த கிராமத்தினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கஞ்சாவின் போதைக்கு அடிமையாகி மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் அருகே உள்ள செவ்வாப்பேட்டை கிராமத்தில் கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறு  தொடர்பாக  இரண்டு கொலைகள் நடைபெற்றுள்ளது.

இது குறித்து ஆவடி மாநகர காவல் ஆணையாளர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.  வேப்பம்பட்டில் பிரபல கஞ்சா வியாபாரி மூலம் ஆந்திராவிலிருந்து மொத்தமாக வாங்கி வந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி, புளியமங்கலம்,  ராணிப்பேட்டை, தெங்கால்,  அவரக்கரை போன்ற பகுதிகளில் மாணவர்களுக்கு சில்லறை வியாபாரம் மூலம் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்பவரிடம் திருவள்ளூர் நகர போலீசார் மாத மாதம் கமிஷன் வாங்கி வருகின்றனர்.  அவரிடம் இருந்து சில்லறை வியாபாரம் செய்து வரும் திருவள்ளூர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறார்.  இந்த ஐயப்பனிடமிருந்து புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரில் வசிக்கும் சின்னா என்பவரின் மகன் கிஷோர் புல்லரம்பாக்கத்தை சேர்ந்த முருகன் அம்பேத்கார் நகர் பகுதி சேர்ந்த கொண்டையா மகன் பேதுரு என்கிற பீட்டர் ஆகியோர் கஞ்சாவை சில்லரை வியாபாரம் மூலம் அந்த பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர் .

இதேபோல் ஈக்காடு, ஒதிக்காடு, வெங்கல், புட்லூர், செவ்வாய் பேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவடி காவர் ஆணையகரத்திற்கு உட்பட்ட பகுதியான செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திற்குட்ட பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படும்  கஞ்சா வியபாரிகளிடம் மற்றும் கள்ள சந்தையில் சரக்கு விற்கும் நபர்களிடம் செவ்வாப்பேட்டை ஐ.எஸ் ஏட்டு கந்த வேலு மாதாமாதம்  வீட்டு செலவிற்கும் ஊயர் அதிகாரிகறின்  டீ செலவிற்கும்   பணம் வாங்கி வருகிறாராம்.

இது அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் டில்லி பாபுவுக்கும் தெரியுமாம். இன்ஸ்பெக்டர் மணல் மாபிஃயாக்களிடம் வாங்கும் கட்டிங்கை கந்த வேலு கண்டுபகொற்றக்கூடாது.  அதே போல கந்த வேலு வாங்கும் கட்டிங்குகளை டில்லிபாபு கண்டு கொள்ளக்கூடாது என்ற ஜென்ட்டில் மேன் அக்கிரிமெண்ட் தான் காரணமாம்.

ஐ.எஸ். ஏட்டு கந்தவேலுவின் மூன்று மாடி வீடு

இப்படி கந்த வேலு வாங்கிய கட்டிங் திருவள்ளூர் ஆஞ்சநேயர் கோயில் அருகில் மூன்று மாடி வீடுகளாக உயர்ந்து நிற்கிறதாம்.

இதெல்லாம் கமிஷ்னர் சஞ்சை ரத்தோருக்கு தெரியுமா என்ன?

இதையும் படிங்க.!