#Charles Martin’s harsh criticism of Arjuna; மொள்ளமாரி,முடிச்சவிக்கி, பொம்பள பொறுக்கி ஆதவ் அர்ஜுனா குறித்து சார்லஸ் மார்ட்டின் கடும் விமர்சனம்.

April 22, 2026

By இரா. தேவேந்திரன்.

#special story

ஆதவ் அர்ஜுனா குறித்து  ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடும்  விமர்சனம் செய்துள்ளார்.  மேலும்  அர்ஜுனாவிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு  கார்களை  பரிசாக அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த செய்தியால் அர்ஜுனாவின் இமேஜ்  பாதிக்கப்பட்டுள்ளதாக தவெக வினர் கூறிவருகின்றனர்.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது மைத்துனர் ஆதவ் அர்ஜுனா குறித்து பல  கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.  திருமணம் கடந்த உறவில் சில பெண்களுடன் உறவு வைத்துள்ளார் என்றும் நிறைய பெண்களுடன் தொடர்பு உண்டு என்றும் அவர்களுஉக்கு கார்களை பரிசளித்துள்ளார் என்று குற்றம் சாட்டிய அவர் குடும்பத்தை ஒழுங்காக நடத்த துப்பு இல்லாதவர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேசுகையில், ” உங்களுக்கு தெரிந்த எதிர் கட்சி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் நான் எங்கள் குடும்பம் செய்த தவறை யாரும் செய்துவிடக்கூடாது என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன்.

ஐயோ!!! கிறுக்குத்தனமான செயலால் என் குடும்பத்திற்கு தான் அவ பெயர்...!!! -  ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் - Seithipunal

அண்ணண் எஸ்.ஆர்.விஜயகுமாருக்காக திருச்சியில் இருந்து வந்து வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். அந்த மாதிரி ஒரு மொள்ளமாரியை, அம்மாவாசையை யாருமே பார்க்க முடியாது. அமைதிப்படை  திரைப்படம் வரும் போது எனக்கு சிறுவயது. நான் ரசித்துள்ளேன். சத்யராஜ் அவர்கள் நடிக்கும் போது இப்படி ஒரு கேரக்டர் இருக்க முடியுமா என்று யோசித்தேன்.

அமைதிப்படை சத்யராஜ் ஆக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா.

ஆனால் இன்றைக்கு உண்மையான அமைதிப்படை சத்யராஜ் ஆக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா தான்.  அமைதிப்படையில் நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ தான் ஆதவ் அர்ஜுனா. அவர் வாயை திறந்தால் பொய், சொந்த தாய் உள்பட அனைத்திலுமே அரசியல் பண்ணக்கூடிய தீயசக்தி அவர். தவெகவை அழிக்க வந்த திமுகவின் பிடீம்” என்று கூறினார்.

என் தங்கையை திருமணம் செய்ததால் பணக்காரர் அதேபோல் மேலும் த.வெ.க.,வின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா பற்றி கூறும் போது, ஆதவ் கஷ்டப்பட்டெல்லாம் வசதிபடைத்த நிலைக்கு வரவில்லை. என் தங்கையை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் தான் அவர் பணக்காரர் ஆனார்.

Highway tender scam | Supreme Court dismisses Tamil Nadu DVAC plea on fresh  inquiry into allegations against Edappadi Palaniswami - The Hindu

இதிலிருந்தே, அவர் எப்படி பணக்காரர் ஆனார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் பரம்பரை பணக்காரர் போல பேசி வருகிறார். குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்ட தாய், சாதி பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டது போன்ற, ஒரு பொய்யை கிளப்பி வருகிறார். அதை வைத்து அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா திமுகவின் ஆள்.. என் குடும்பத்தையே பிரித்தவர்.. லாட்டரி மார்டின்  மகன் சார்லஸ் ஆதங்கம்! | Aadhav Arjuna Controversy: Aadhav Arjuna is a  person who sent by DMK ...

செந்தில்குமார் என்பதே ஆதவ் அர்ஜுனாவின் இயற்பெயர். ஆனால், அதை ஆதவ் அர்ஜுனாவாக மாற்றி, பெயரிலும் கூட இரட்டை வேடம் போடுகிறார். இதுவும் ஒரு மோசடிதான்.  திமுகவின் பி டீம் என்றைக்கு எங்கள் குடும்பத்துக்குள் அவர் வந்தாரோ, அன்றிலிருந்தே எங்களுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. இப்போது, வில்லிவாக்கத்துக்கு வந்திருக்கிறார். அவரெல்லாம் எம்.எல்.ஏ., ஆனால், இங்கிருக்கும் மக்களே ஒன்றுபட்டு வாழ இயலாது .

தன்னுடைய இயல்பான குணத்தின்படி, மக்களை துண்டு துண்டாக்குவார். தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுக்களை சிதற வைக்க வேண்டும் என்ற திட்டத்தோடு ‘ஸ்லீப்பர் செல்’லாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் போன்ற தீய சக்தியை உங்கள் தொகுதியில் அனுமதித்தால், கூறு போட்டு விற்றுவிடுவார்.

சொந்த மாமியாரை தோற்கடிக்க சதி வேலை செய்கிறார் ஆதவ் அர்ஜுனா".. ஜோஸ் சார்லஸ்  மார்ட்டின் குற்றச்சாட்டு | Jose Charles Martin Accuses TVK Leader Aadhav  Arjuna of ...

 500 கோடி ரூபாய் வாங்கி திமுக விற்கு நிதியாக தந்தார்.

எங்கள் பணம் 500 கோடி ரூபாயை வாங்கி, தி.மு.க.,வுக்கு நிதியாக கொடுத்தவர் தான் ஆதவ் அர்ஜுனா. அந்த பணத்துக்கு இன்று வரை, முதல்வர் ஸ்டாலினிடம் கணக்கு கேட்டு வருகிறோம். ஆனால், அது குறித்து அவரோ, மகன் உதயநிதியோ, மருமகன் சபரீசனோ எவ்வித பதிலும் சொல்லவது கிடையாது. இன்றைக்கு எங்களை லாட்டரி வாயிலாக சம்பாதித்தோர் என, அவர்கள் விமர்சிக்கின்றனர். எங்களிடம் இருந்து பணம் பெறும்போது, அதெல்லாம் தெரியாதா?  நாங்கள் லாட்டரி வாயிலாக நேர்மையாக சம்பாதித்து தான் பணம் சேர்த்துள்ளோம். வரி கட்டிதான் எல்லாமே வந்துள்ளது

பல பெண்களுடன் தொடர்பு.

அந்தத் தொகையைத்தான், தி.மு.க.,வினர் பெற்றுள்ளனர்” இவ்வாறு சார்லஸ் மார்ட்டின் கூறினார்.  அதேபோல் சார்லஸ் மார்ட்டின், ஆதவ் குறித்து சில கடுமையான தனிநபர் விமர்சனங்களையும் முன்  வைத்தார். திருமணம் கடந்த உறவில் சில பெண்களுடன் ஆதவ் இருந்துள்ளார் என்றும் நிறைய பெண்களுடன் தொடர்பு உண்டு என்றும் அவர்களுக்கு கார்களையும் பரிசளித்துள்ளார் என்றும் சார்லஸ் விமர்சித்தார்.

அண்ணாமலைக்கு எதிரான கருத்து: ஆதவ் அர்ஜூனாவுக்கு மார்ட்டினின் மகன் சரமாரி  குற்றச்சாட்டு.!

மேலும் குடும்பத்தை ஒழுங்காக நடத்த துப்பு இல்லாதவர் என்றும் கடுமையாக விமர்சித்தார். முன்னதாக லால்குடியில் பேசும் போது, என்னுடைய மச்சான் ஆதவ் அர்ஜுனா மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எங்களுடைய அம்மாவை, அவரது சொந்த மாமியாரை தோற்கடிப்பதற்கான சதி வேலை செய்து வருகிறார் ஆதவ் அர்ஜுனா. அவர் தோற்கப் போகிறார். ” என்று சார்லஸ் மார்ட்டின் கூறியிருந்தார்.

லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஷ் சார்லஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா குறித்து பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நிற்கும் ஆதவ் அர்ஜுனாவிற்கு அது வெற்றி வாய்ப்பை பெரிதும் பாதிக்கும் என்கின்றனர் அதிமுகவினர்.

Share:

இரா. தேவேந்திரன்.

April 22, 2026

Leave a Comment