chennireporters.com

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனா தடுப்பு உதவி மையம் .

கொரோனா தொற்று 2 வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது தீவிர கட்டுப்பாடுகளுடன் இம்மாதம் இறுதிவரை ஊரடங்கு நீடிக்க பட்டுள்ளது.

தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு முன்னேர்பாடுகளை அரசு எடுத்து வருகிறது கோவை மாவட்டத்தில் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ள சூழலில், பொது மக்களுக்கு உதவும் விதத்தில் மாக்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்டக்குழு சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி மையத்தின் மூலம் அரசு சிகிச்சை மையங்கள் குறித்த தகவல்கள்,நோய் குறித்தவிழிப்புணர்வு,தடுப்பூசிமையங்கள்குறித்தவிபரம்,மருத்துவஆலோசனைகள்,பாதிக்கப்பட்டவர்களுக்கன தொலை தொடர்பு வழி ஆலோசனை, வாகன உதவி, மற்றும் ரத்த தானம் செய்வது குறித்த விவரங்கள், ஆகிய உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்துறை சார்ந்த நண்பர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள், மாற்று மருத்துவ நிபுணர்கள், உள்ளிட்டு கட்சியின் மாவட்ட அளவிலான பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளை தேர்வு செய்து இந்த உதவி மையம் Left Help center for Covid-19 என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மைய முகவரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

138, 2 வது வீதி விரிவாக்கம், காந்திபுரம், 100 அடி ரோடு,

கோவை-12.

தொடர்புக்கு : 94438 84053.  94887 08832. 86800 91826. 99941 58832. 81898 02073.

இதையும் படிங்க.!