chennireporters.com

#Fraudulent woman கடன் வாங்கிவிட்டு தண்டல்காரர்களை மிரட்டும் ஃபிராடு பெண்.

மின்சார வாரியத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் குடும்ப செலவுக்காக பலரிடம் வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு தராமல் திருப்பி கேட்ட போது அவர்களையே மிரட்டி பொய்ப்பு புகார் கொடுக்கும் பெண் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பலரிடம் வட்டிக்கு பணம் வாங்கும் மனோரஞ்சிதம்.

ஆவடி காமராஜர் நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் மனோரஞ்சிதம் இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மனோரஞ்சிதத்திற்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டி என்னும் கிராமம் இவரது கணவர் பெஞ்சமின் ஜேக்கப் அவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். அவர் உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்து விட்டார் இந்த நிலையில் கணவரது வேலை மனோரஞ்சதுக்கே கிடைத்தது அதன் அடிப்படையில் மனோரஞ்சிதம் ரீடிங் பில் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

ஆவடியில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்த பகுதியில் வசித்து வருகிறார் மாத சம்பளம் வாங்கியும் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு குடும்ப செலவிற்காக தான் இருக்கும் வீட்டு உரிமையாளரிடமும் பக்கத்தில் இருக்கும் நண்பர்கள் இடமும் வட்டிக்கு பணம் வாங்குவது மனோரஞ்சிதத்தின் வழக்கம்.

அந்த அடிப்படையில் மனோரஞ்சிதத்தின் வீட்டு உரிமையாளர் காஞ்சனாவிடம் 40 ஆயிரத்திற்கு மேல் பணம் வாங்கியுள்ளார் 6 மாதத்திற்கு மேல் வீட்டு வாடகை தராமல் இருத்தடித்து வருகிறார் அதேபோல மீனாட்சி என்பவரிடமும் 40,000 பணம் வாங்கிவிட்டு இதுவரை தராமல் ஏமாற்றி வருகிறார். அதேபோல பூந்தமல்லியை சேர்ந்த தண்டல்காரர் கார்த்திகேயன் என்பவரிடம் 40,000 பணம் வாங்கிவிட்டு இதுவரை பணமும் தராமல் தண்டலும் கட்டாமல் இழுத்தடித்து வருகிறார்.

ஆவடி ஆற்றங்கரை அருகே உள்ள சாலமோன் என்பவரிடம் 20 ஆயிரம் பணம் வாங்கிவிட்டு பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். அவரது அலுவலகத்தில் பணியாற்றும் போர்மேன் வெள்ளைச்சாமி என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு பணம் வருகிறார். இதேபோல ஆவடி பத்தாவது தெருவை சேர்ந்த செல்வி என்பவரிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு ஏழு வருடம் ஆகியுள்ளது. ஆனால் இதுவரை அவரிடம் பணம் தராமல் அவரை திட்டியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசி பணம் தர முடியாது என்று மிரட்டி வருகிறாராம்.

 

இப்படி பணம் வாங்கும் நபர்களிடம் பணம் தர முடியாது என்று மிரட்டுவது மட்டுமில்லாமல் தான் ஒரு அரசு ஊழியர் என்னை மிரட்டினால் நீங்கள் ஜெயிலுக்குப் போய் விடுவீர்கள் என்று மிரட்டி வருகிறாராம் அது மட்டுமில்லாமல் பணம் கொடுத்தவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் அவர்கள் அல்லது பர்சனல் விஷயங்களை பேசி அசிங்கப்படுத்தி வருகிறாராம்.

 

தான் பணம் வாங்கும் எல்லாரிடத்திலும் அவர்கள் மீது போலீசில் பொய்யாகப் புகார் கொடுப்பதில் பலே கில்லாடியாம் இந்த பிராடு பேர் வழி மனோரஞ்சிதம். இவர் பார்க்கும் பாடி மின்வாரிய அலுவலகத்தில் இவர் வேலைக்கு போகாமல் தினக்கூலிக்கு ஒருவரை நியமித்து அவருக்கு பணம் கொடுத்து விட்டு இவர் வீட்டிலேயே இருந்து சம்பளம் வாங்குகிறாராம்.

வாங்கும் சம்பளப் பணம் பத்தாது என்று வட்டிக்கு வாங்கிவிட்டு சுகபோகமாய் வாழ்வதில் தனி சுகம் கண்டு வருகிறாராம் இந்த மனோரஞ்சிதம். பாதிக்கப்பட்டவர்கள் மனோரஞ்சிதத்தை சந்தித்து பணம் கேட்டால் நாளைக்கு தருகிறேன், விரைவில் கொடுத்து விடுகிறேன், லோன் வாங்கி இருக்கிறேன், விரைவில் உங்கள் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று பல வருடங்களாக இதையே சொல்லி வருகிறாராம்.

ஆனால் இதுவரை கடன் காரர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரவுமில்லை திருப்பி கேட்பவர்கள் மீது போலியாக போலீசில் பொய் புகார் கொடுத்து வருகிறாராம். கோயமுத்தூரை சேர்ந்த ஒரு பெண் போலிசிடம் பணம் வாங்கிவிட்டு பணத்தை திருப்பி தராமல் அந்த பெண் போலிஸ் மீதே ஒரு பொய்யான புகார் கொடுத்து விட்டாராம்.  மனோரஞ்சிதத்திடம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளனர் அது தவிர அவர் வேலை செய்யும் அலுவலக உயர் அதிகாரிகளிடமும் புகார் அளிக்க உள்ளனர்.

இதையும் படிங்க.!