chennireporters.com

சமூக போராளிக்கு உயிர் காக்க உதவுங்கள்.

அனைவருக்கும் வணக்கம்.

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினரும்,தஞ்சை மாவட்டச் செயலாளருமாகிய தோழர் அருண்சோரி அவர்கள் ஒரு பொறியியல் பட்டதாரி எனவே ஐ.டி. துறையில் நல்ல ஊதியத்தில் அவர் சென்னையில் பணியாற்றி வந்தார்.

இருப்பினும், மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற மனித நேய வேட்கையால், உயர் ஊதியம் பெற்று வந்த தனது பதவியை விட்டு விலகி, முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில்நேரடியாக மக்கள் சேவையில் முழுநேரமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ஈழப்போராட்டம் தொடங்கி ஐட்ரோகார்பன், மீதேன் எதிர்ப்புப் போராட்டங்கள் உட்படப் பல்வேறு போராட்டங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு முன்னணிப் போராளியாகக் களமாடியவர் தோழர் அருண் சோரி,

தனது வாழ்நிலை, உடல்நிலை பற்றிக் கவலைப்படாமல் மக்கள் பணியே மகத்தான பணி எனச் சமரசமின்றிப் போராடி வந்தவர்தான் நமது தோழர்.

இப்படிப் பம்பரமாக ஓடியாடி மக்களுக்கு ஊழியம் செய்துவந்த தோழருக்குக் கடந்த 2021 செப்டம்பரில் இருந்து கடுமையான வயிற்றுவலிப் பிரச்சனை உருவாகி, அவரை வாட்டியெடுத்தது. வயிற்று வலியோடு சேர்ந்து, இரத்தம் உறைதல் பிரச்சனையும் அவரை அலைக்கழித்தது.

2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒருமுறை அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டது.தஞ்சை அரசு மருத்துவமனையிலும், பின்னர் சேலம் அரசு மருத்துவமனையிலும், அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் அவர் தனது நோய்களுக்குச் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆயினும் வயிற்று வலி குறையாத நிலையில் மென்மேலும் உடல் நலிவடைந்து, எடை குறைந்து, பசியின்றி இரத்த அழுத்தமும் குறைந்து, மிக நெருக்கடியான நிலையை அவரது உடல் எட்டியது. கண்ணும் மஞ்சளாக மாறிக் கொண்டிருந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துமனையான SIMS — இல் கடந்த 2022 மே 23 ஆம் நாளன்று சேர்க்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுவரை அரசு மருத்துவமனைகளைச் சார்ந்து தோழர்கள், ஆதரவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் இருந்து அவரின் மருத்துவச் செலவுகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

இப்பொழுது உடனடி, அவசர மற்றும் உயிர்காக்கும் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் இந்தத் தனியார் மருத்துவமனையை நோக்கிச் செல்ல நேர்ந்துள்ளது.

இப்போதைய மருத்துவ ஆய்வின்படி குடல் வீக்கம் இருப்பதால், அறுவை சிகிச்சை செய்து, அப்பகுதியை நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆயினும் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலையில் தோழர் அருண்சோரியின் உடல்நிலை இல்லாத காரணத்தால், மூன்று வாரங்கள் கழித்து, உடல்நிலை தேறிய பின்னரே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.

இன்னும் ஓரிரு நாள்களில் மருத்துவமனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, பின்னர் வாரம் ஒருமுறை மருத்துவமனை சென்று முன்னேற்றத்தை மதிப்பிட வேண்டும்.

ஓரளவு உடல் தேறியவுடன் அடுத்து அறுவை சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் அறுவைசிகிச்சைக்கான செலவு மட்டும் தனியே 2.5 இலட்ச ரூபாயில் இருந்து 2.75 இலட்சம் ரூபாய் வரை ஆகும் என மருத்துவமனையில் குறிப்பிடுகின்றனர்.

இரத்தம் உறைதல் பிரச்சனை, புரதச்சத்துக் குறைவு, மாரடைப்பின் தாக்கம் போன்ற பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், மொத்த மருத்துவமனைச் செலவு 6 இலட்சம் ரூபாய் வரை ஆகும் எனவும் மருத்துவர்கள்கூறிவிட்டனர்.

தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள் பேராதரவு இருந்தால் மட்டுமே இவ்வளவு பெரிய பொருட்செலவை எதிர்கொள்ள இயலும்.அவரது உயிர்காக்கும் இந்த முயற்சிக்குத் துணைநில்லுங்கள் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்..

தோழருக்கான மருத்துவச் செலவுகளுக்கு ஒவ்வொருவரும் கணிசமான தொகையை அனுப்பிட வேண்டுமென்றும் கனிவுடன் வேண்டுகிறோம்.

அதற்கான வங்கிக் கணக்கு விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள் முன்னணி
Google pay: 93846 40622.

ARAVINTHA KUMAR. T.
IDBI BANK, S/B A/C No:
0005 10 4000 63 23 93.
BRANCH: GREAMS ROAD, CHENNAI.
IFSC: IBKL 000 0005
தொடர்புக்கு: 95000 56554.

தோழமையுடன்,
மருத்துவ உதவி நிதிக் குழுவுக்காக —
வழ. பானுமதி
கண. குறிஞ்சி
வழ. பாவேந்தன்
பேரா. கோச்சடை.

தொடர்புக்கு:
95000 56554.

இதையும் படிங்க.!