chennireporters.com

MHAAவை மீட்டெடுக்க புதிய மாற்றத்தை உருவாக்குங்கள்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேல்முருகன் தேர்தல் வாக்குறுதிகளாக பல்வேறு சிறப்பான வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

அதை அறிக்கையாக வெளியிட்டு அவரது நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் சமூக வலைதளத்தின் மூலம் அனுப்பி வருகிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை இங்கே பார்க்கலாம்.

* பெஞ்ச் மற்றும் பார் ரிலேஷன்ஷிப்பை மேம்படுத்துவதே சங்கத்தின் தலையாய கடமையாக கருதி அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் .

* வழக்கறிஞர்களின் தொழில் சார்ந்த உரிமைகள் மற்றும் நலனுக்காக சங்கம் 24 மணி நேரமும் செயல்படும்.

* இந்தியாவிலேயே மிகப்பெரிய நீதிமன்ற நூலகமான சென்னை உயர்நீதிமன்ற நூலகம் சரியான பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து இருக்கிறது. அதனை மாற்றி புதிய தொழில்நுட்பங்களை உபயோகித்து இ நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வழக்கறிஞர்களுக்கு அத்தியாவசியமானக கருதப்படும் மருத்துவ காப்பீடு சங்க உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தி தரப்படும்.  இளம் வழக்கறிஞர்களின் அடிப்படை தேவையான அலுவலகம் அமைக்கவும், அவர்களின் தொழில் திறன் மேம்படுத்தவும். அகடாமிக் கவுன்சில் அமைத்து தரப்படும்.

* வழக்கறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உச்ச நீதிமன்ற அமர்வை சென்னையில் கொண்டு வர வேண்டும் எனும் கோரிக்கையை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்படும்.

* உயர் நீதிமன்றத்தில் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று கார் பார்க்கிங் அதை சரி செய்யும் வகையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்படும். முதல் தலைமுறை இளம் வழக்கறிஞர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் அலுவலகம் அமைக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்தித் தர முயற்சி செய்யப்படும்.

 

* வழக்கறிஞர்களுக்கு  கோஆபரேட்டிவ் ஹவுசிங் சொசைட்டி அமைக்கப்பட்டு வீட்டுமனைகள் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  நமது சங்க விதிகளின்படி ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு வரவு செலவு கணக்குகள் குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்டு சங்கம் ஜனநாயக முறையில் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

* மற்ற மாநிலங்களில் உள்ளது போல நம் மண் சார்ந்த பிரச்சின யான தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். 

* விளையாட்டில் ஆர்வம் கொண்ட வழக்கறிஞர்களின் திறமைகளை ஊக்குவிக்க ஸ்போர்ட்ஸ் அகடாமி துவங்கப்படும்.  கல்வியில் சிறந்து விளங்கும் வழக்கறிஞர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

பெண் வழக்கறிஞர்களுக்கான நலத்திட்டங்கள் ;

* பெண் வழக்கறிஞர்கள் தங்கள் குழந்தைகளை பராமரிக்க ஏதுவாக உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் குழந்தைகள் பராமரிப்பு அறை அமைக்கப்படும்.  வெளி மாவட்டங்களில் இருந்து சட்டப் பணியாற்ற சென்னை வரும் இளம் பெண் வழக்கறிஞர்களுக்கு தங்கும் விடுதிகள் அரசு உதவியுடன் அமைத்து தரப்படும். பெண் வழக்கறிஞர்கள் தங்களுடைய வழக்கு சம்பந்தமாக கட்சிக்காரர்களிடம் ஆலோசிக்க இலவச ஆலோசனை மையம் அமைத்து தரப்படும்.

 

* பெண் வழக்கறிஞர்களின் நலனுக்காக மூத்த வழக்கறிஞர்கள் தலைமையில் ஒரு தனி குழு அமைக்கப்படும்.

இப்படி அமைப்பின் தேவைகள் மற்றும் வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறேன். வழக்கறிஞர் சங்கத்தின் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கவும் செயல்பாடு இன்றி இருக்கும் சங்கத்தை புத்தம் புதிய பொலிவுடன் செயல்படுத்தவும் உங்களின் ஒருவனான நான் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறேன்.

உங்கள் ஆதரவுக்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் சுயாட்சியுடன் பணியாற்ற விரும்பும் எனக்கு உங்கள் பேராதரவை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இந்த அறிக்கை தற்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் உள்ள பெண் மற்றும் வழக்கறிஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க.!