chennireporters.com

வலிசுமந்த பன்னிரண்டாம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள் இன்று

may 18 1

இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளன.

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது.

முப்பது வருட கால போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள திறந்தவெளி தரைப்பகுதியில் கூடாரங்களை கட்டி பொதுமக்கள் தங்கியிருந்தனர்.

குறிப்பாக வட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்த அதிக எண்ணி க்கையிலான வாகனங்கள் இறுதியில் முள்ளிவாய்க்காலில் கால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு கீழ் பதுங்கு குழிகளை அமைத்து தங்கள் உயிர்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்தனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பதுங்கு குழிகளை அமைப்பதற்கான மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

வன்னி நிலப்பரப்பில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே ஒன்று திரண்டு இருந்தனர்.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால், நந்திக் கடல், வட்டுவாகல் ஆகிய பகுதிகளில் வானைப் பிளக்க வைத்த சத்தங்கள் பூமி முழுவதும் ரத்தக்கரையாகி இருந்தன.

நந்திக்கடலில் உயிர் நீத்து இறந்து கிடந்த பலருடைய உடல்கள் மேலே உயிர் தப்ப முயற்சித்த ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகள் உறவினர்களுடன் பதைபதைப்புடன் ஓடும் காட்சிகளும் மரணங்களும் மறக்கமுடியாத காயமாக இன்றும் இருக்கிறது.

அதனை குறிப்பிடும் வகையில் இன்று பன்னிரண்டாம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வலி சுமந்த நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க.!