chennireporters.com

கொல்லிமலையில் அதிக விளைச்சல் தந்த அன்னாசிப்பழம்.

சேலம்: கொல்லிமலையில் இருந்து சேலத்திற்கு அன்னாசி பழம் வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப் படுகிறது.

தமிழகத்தில் ஓசூர், கொல்லிமலை, கர்நாடக மாநிலம் பெங்களூர், கேரளா ஆகிய இடங்களில் அன்னாசி பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்த மழையால் அன்னாசி பழம் நல்ல விளைச்சலை தந்துள்ளது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வியாபாரிகள் அன்னாசி பழத்தை விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

அதன்படி, கொல்லிமலையில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரித் துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளது.

கொல்லிமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட அன்னாசி பழங்கள், சேலம் கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ அன்னாசி பழம் ₹15க்கு விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்….

இதையும் படிங்க.!