chennireporters.com

கூகுள் பே பயன்படுத்தும் மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி.

சமீபத்தில் எஸ்.பி.ஐ. வங்கி பல வகையான யு .பி. ஐ .பேமென்ட் ஆப்களை பயன்படுத்துபவர்களுக்கான ஒரு பொதுவான எச்சரிக்கை வெளியிட்டது.

அதில் கூகுள் பே , பே.டி.எம் போன்றவைகளும் அடங்கும். அதன் வழியாக மக்களின் அறியாமையை  பயன் படுத்தி சில திருட்டு கும்பல்கள் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை விளக்குகிறது இந்த செய்தி. 

மேலோட்டமான புரிதலால் மக்கள் எப்படி பலிகடா ஆக்கப்படுகிறார்கள் என்பது குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு இருந்தன. எஸ்.பி.ஐ. வெளியிட்ட வார்னிங்கை  போலவே தற்போது மீண்டும் ஒரு சேப்டி அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது .

ஆனால் இது sbi வழியாகவும் வரவில்லை .மேலும் இது அனைத்து யு.பி.யை பேமெண்ட் ஆப்களை பயன்படுத்தும் பயனாளர்களுக்கான பொதுவான எச்சரிக்கையும் அல்ல இது முழுக்க முழுக்க கூகுள் பே பயனாளர்களுக்கு மட்டும்.

சமீப காலமாகவே டீக்கடையாக இருந்தாலும் சரி ஷாப்பிங் மால் ஹோட்டல் சினிமா தியேட்டர் என எந்த இடத்திலேயும் பணத்தை எடுக்காமலேயே ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்து  வருகின்றனர் .

ஆன்லைன் வழியிலான பணப்பரிவத்தினை அதிகரிக்கும் மறுகையில் ஆன்லைன் பேமெண்ட் தொடர்பான மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக கூகுள் பே ஆப்பில் யுபிஐ டொமைனின் கீழ் கூகுள் ப்ளேவில் ஒரு முக்கியமான சேவை வழங்குனராக இருப்பதால் கூகுள் நிறுவனம் அதை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்ய பல சேஃப்டி மற்றும் செக்யூரிட்டி டூல்களை இன் பில்ட் ஆகவே வைத்துள்ளது.

ஆனால் எல்லா நேரமும் கூகுளின் பாதுகாப்பு வலையத்தால் மட்டுமே உங்களையும் உங்கள் பணத்தையும் காப்பாற்றி விட முடியாது .  உங்கள் பங்கிற்கு சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும் . கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று நீங்கள் எந்த வகையான ஆப்புகளை டவுன்லோட் செய்தாலும் அது நம்பகமான செயலியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பின்னரே இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஏனெனில் ஸ்கிரீன் ஷேரிங் போன்ற சில மால்வேர் ஆப்களானது உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் நீங்கள் டைப் செய்யும் எதையுமே திருட வாய்ப்புள்ளது .

 

அது உங்களின் யு.பி.ஐ. பின்னை அணுகலாம் . அல்லது உங்களின் பேங்க் அக்கவுண்ட் விவரங்களை கூட பதிவு செய்யலாம்.  உங்கள் ஸ்மார்ட் போனில் பல வகையான ஆப்கள் இருக்கலாம் எனவே நீங்கள் பொத்தாம் பொதுவாக அனைத்து வகையான நோட்டிபிகேஷன்களையும் ஆப் செய்து வைத்திருக்கலாம்.

அந்தப் பட்டியலில் கூகுள் பேஆப் இருந்தால் உடனே அதற்கான நோட்டிபிகேஷன் ஆன் செய்யவும். ஏனெனில் நோட்டிபிகேஷன் மற்றும் எஸ்எம்எஸ் அலாட் வழியாக உங்கள் கூகுள் பேயின் வரவு மற்றும் செலவு கணக்குகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

அவைகளை நீங்கள்  முடக்கும் பட்சத்தில் நீங்கள் ஏதேனும் ஒரு பேமெண்ட் தொடர்பான மோசடியில் சிக்கி இருந்தால் கூட அது உங்கள் கவனத்திற்கு வராது. கூகுள் பே ஆப்பில் ஏதேனும் சிக்கல் என்றால் பணப்பரிமாற்றத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் புத்திசாலித்தனமாக ஏதாவது செய்யலாம் என்கிற பெயரில் கூகுள் சர்ச்சில் அணுகினால் பதில் கிடைக்கும்.

ஹெல்ப்லைன் நம்பர்கள் அல்லது வெப்சைட்டுகளை முயற்சி செய்ய வேண்டாம். எப்போதும் கூகுள் மேப்பில் உள்ள ஹெல்த் சப்போர்ட் செஷனை மட்டுமே அணுகவும். இன்டர்நெட்டில் கிடைக்கும் நம்பகமற்ற எண்களுக்கு தெரியாமல் கூட டயல் செய்து விட வேண்டாம் .

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவும்  யுபிஐ பின் பணம் அனுப்பவும் பேலன்ஸை செக் செய்ய மட்டுமே தேவைப்படும்.  யாரேனும் பணத்தை அனுப்புவதற்காக உங்கள் யுபிஐ  பின்னை உள்ளிடுமாறு கேட்டால் உஷாராக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படி செய்தால் உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து பணம் அனுப்புவதற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள் என்று அர்த்தம்.  google pay-வைப் பொறுத்தவரை சிறியது பெரியது என்று எதுவும் இல்லை . சிலருக்கு 10,000 தான் பெரிய அமௌண்டாக இருக்கும் சிலருக்கு நூறு ரூபாய் கூட பெரிய அமௌண்டாக இருக்கும் .  எனவே டென்சனாக இருக்கும் போது அல்லது போன் பேசிக்கொண்டு எந்த ஒரு பணப்பரிவினைகளையும் செய்யாதீர்கள்.

கவனக்குறைவாக நீங்கள் தவறான நபருக்கு பணம் அனுப்ப நேரிடலாம்.  உங்கள் கூகுள் பே அக்கவுண்டில் லாகின் செய்ய வழிவகுக்கும் otp யை ஒருபோதும் யாருடனும் பகிர வேண்டாம் . முக்கியமாக நீங்கள் பணப்பரிவர்த்தனை செய்யும் போது ஸ்கிரீன் ஷேரிங் ஆப்புகளை மறந்தும் பயன்படுத்த வேண்டாம்

இதையும் படிங்க.!