#wintv devanathan arrest: 50 கோடி சுருட்டிய வின் டிவி உரிமையாளர் தேவநாதன் கைது.

August 14, 2024

By இரா. தேவேந்திரன்.

பக்கா பிராடு தேவநாதன் யாதவ் கைது-பரபரப்பு பின்னணி தகவல்கள்…!!

நிதி மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், பாஜக ஆதரவாளரும் ஆன தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு உள்ளார். 50 கோடி வரை மோசடி நடைபெற்றதாக 140-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து உள்ளனர்.

வின் டிவி தொலைக்காட்சி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராகவும் உள்ள தேவநாதன் யாதவ், சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட்’ என நிதி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். 1872 ஆம் ஆண்டு முதல் இந்த நிதி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிக அளவில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளனர். இந்த நிறுவனத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து நிதியை பெற்று சுமார் 50 கோடி வரை நிதி மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது.

மேலும், 525 கோடி ரூபாய் வரையிலான வைப்பு தொகையை திரும்ப தர நிதி நிறுவனம் மறுப்பதாக முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். நிதி நிறுவனம் அளித்த 150 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்ப வந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

இது தொடர்பாக தேர்தல் நேரத்திலேயே தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அந்த நிறுவனத்திற்கு முன்பாக 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.இந்த வழக்கு தொடர்பாக பொருளாதாரா குற்றப்பிரிவு போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் திருச்சியில் இருந்த தேவநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தேவநாதன் கைது செய்யப்பட்ட தேவநாதன் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இதில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 677 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வெற்றி பெற்றார். 2 லட்சத்து 22 ஆயிரத்து 13 வாக்குகளை பெற்ற அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் இரண்டாம் இடமும், ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 788 வாக்குகள் பெற்ற தேவநாதன் யாதவ் மூன்றாம் இடமும் பிடித்து இருந்தனர்.

தேர்தல் பரப்புரை காலத்தில் நிதி மோசடி புகார் எழுந்த நிலையில் சிவகங்கை தொகுதியில் பரப்புரை செய்ய இருந்த அமித் ஷாவின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதுபோன்ற பிராடுகளுக்கு சீட் கொடுத்துவிட்டோமோ என்று பாஜக கடைசிநேரத்தில் கவலைப்பட்டுதான் இவரது பிரச்சாரத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட யாருமே பிரசாரத்திற்கு போகவில்லை என்று கூறப்பட்டது.

தேவநாதன் பொறுத்தவரை பல மோசடிகளில் இருந்துதன்னை காப்பாற்றிக்கொள்ள பல ஆண்டுகளாக வின்டிவியை நடத்தி மோசடிகள் பல செய்து வருகிறார். மேலும் மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் இருந்து ஆட்டையப்போட்ட பணத்தில் இருந்து தி.நகரில் விலை உயர்ந்த பங்களா டைப் வீட்டை கட்டி உள்ளார். மேலும் 33 தொழில்களை பினாமி பெயரில் நடத்தி வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியது மட்டுமல்லாமல் புறம்போக்கு நிலங்களையும் கணக்கில்லாமல் வளைத்துப் போட்டுள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வின் டிவி தேவநாதன் பணக்காரராக ஆனதற்கு பல கதைகள் உள்ளன. இவர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். ஓசி பஸ் ஏறி சென்னைக்கு ஓடிவந்தவர். அதிமுகவில் சேர முயற்சி செய்து இவரை அந்தக்காலத்தில் அம்மா ஜெயலலிதா சீண்டவேயில்லை. பிறகு பகுஜன் சமாஜ் கட்சியில்சேர்ந்து ரூ. 5 கோடியை ஆட்டையப்போட்டார். இது தெரிந்து ஆத்திரமடைந்த இவரை தில்லிக்கு அழைத்து மேடம் மாயாவதி, பலமாக கவனித்து அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து தான் திருடிய ரூ. 5 கோடியில் சிறிய நிறுவனத்தை தொடங்கினார். பிறகு தான் நடத்தி வந்த நிறுவனத்திற்கு நஷ்ட கணக்கை காட்டி திவால் நோட்டீஸ் வழங்கி, பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார்.

மெல்ல சாதியை கையில் எடுத்து யாதவ் கட்சியை தொடங்கினார். கட்சியும் போணியாகவில்லை. தற்போது பாஜக ஆதரவாளராக மாறி, பல கோடி சுருட்டலில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளார், தற்போது நிதி நிறுவனத்தில் ஏமார்ந்த பல ஓய்வூதியர்கள், இவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தன்னை சிறந்த ஆன்மிகவாதியாக காட்டிக் கொண்டு மோசடிகள் பல செய்து வரும் இவர், போலி ஆன்மிகவாதி மட்டுமல்ல, சரக்கு கலையில் கைதேர்ந்தவர் என்றும், பலே கில்லாடி என்றும் நிதி நிறுவன பணியாளர்கள் கூறுகிறார்கள்.

தேவநாதன் தனது சாதி பின்புறமாகக் கொண்டவர்களுக்கு பக்க பலமாக நின்று அவர்கள் பத்திரிகையின் மற்றும் பல நிறுவனங்கள் தொடங்க உதவியாக இருந்தவர் இவருக்கு பல பிராடு பத்திரிகையாளர்களும் ஒரு சில டுபாக்கூர் பத்திரிகைகளும் இவருக்கு ஆதரவாக நின்று வருவதாக கூறப்படுகிறது எனவே அரசும் போலீசாரும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

Share:

இரா. தேவேந்திரன்.

August 14, 2024

Leave a Comment