நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட ஏ நூர்தின் அவர்களின் மகன் வாசித் கிர்மானி என்ற இளைஞருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு உண்மையாக உழைக்கின்ற இந்த மாதிரி நபர்களை வளர்த்து விட்டால் காங்கிரஸ் உருப்படும் ராகுல் காந்தி, கார்கே செல்வப் பெருந்தகை கவனத்திற்கு அவர்கள் இதுவரை காங்கிரஸ் கட்சியை வைத்து அவருடைய தந்தை எந்த பயனும் பெறவில்லை கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி தலைமை அவருக்கு சீட்டு வழங்கப்பட வேண்டும் இது ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கின்ற உண்மையான மூத்த காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வு.

குட்டம் சிவாஜி முத்துக்குமார்.
இவர் போன்ற இளைஞர் ஜெயித்தால் ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்னும் காங்கிரஸ் வலுப்பெறும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இவருக்காக பிரார்த்தனை செய்வோம் வருங்கால சட்டமன்ற உறுப்பினர் கிர்மானி அவர்கள்வாழ்க வாழ்க வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் என்று குட்டம் சிவாஜி முத்துக்குமார் என்பவர் தனது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவு ஈரோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சசிகாந்த் செந்தில் எம் பி யுடன் வாசித் கிர்மானி.
யார் அந்த வாசித் கிர்மானி என்று விசாரிக்கதொடங்கினோம் . அந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள். கொரோனா காலகட்டத்தில் இருந்து தற்போது வரை வாட்ஸ் அப் குழு ஒன்று ஆரம்பித்து குருதி கொடையாளர்களை இணைத்து ரத்தம் தானத்தை தமிழ்நாடு முழுவதும் தன்னால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

ஈரோடு மே 5 அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் செயல் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். வியாபாரிகளுக்கு பொதுமக்களுக்கும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து பணியாற்றும் எளிமையான நபர்.
ஈரோடு வாசித் கிர்மானி.
21 வருடங்களாக பொது சேவைகளை மிகச் சிறப்பாக செய்து வரும் நபர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற்று மிகச் சிறப்பாக செயல்படுவார்.

வாசித் கிர்மானி தன்னுடைய 17 ஆவது வயதில் இருந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார். மாணவர் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு உட்கட்சியில் பல பிரிவுகளில் அவர் பதவி வகித்து வந்திருக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ரத்த சேவை பிரிவை தொடங்கி இதுவரை 500 யூனிட் ரத்தத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்குவதற்கு தீவிரமாக பணியாற்றியவர். ஏறக்குறைய 300 பேர் வரை இதனால் பயன் அடைந்து இருக்கின்றனர். சேவாதளம், மனித உரிமை பிரிவு தொழிலாளர் அணி, வியாபாரிகள் சங்கம் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

கட்சியில் அர்ப்பணிப்புத் தன்மையோடு தன்னை இணைத்துக் கொண்டு நீண்ட காலம் கட்சி பணியாற்றி வரும் நபர்களுக்கு தேர்தலில் நிற்க சீட்டு வழங்க வேண்டியது கட்சியின் கடமை என்றும் கட்சிப் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அவர்களுடைய கட்சி அர்ப்பணிப்பு தன்மையை உணர்ந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை ஈரோடு கிழக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் எழுந்துள்ளது.
இந்திய அரசியலில் தனக்கென ஒரு முத்திரை பதித்த ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்களை யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது என்று ஈவிகேஎஸ் குடும்பத்தினர் முடிவெடுத்து இருப்பதாக சொல்கிறார்கள் அந்த பகுதி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்.
தங்களது குடும்பத்திற்கு தேர்தலில் நிற்பது பெரும் பின்னடிவை ஏற்படுத்துவதாகவும், அது தங்கள் குடும்பத்திற்கு பெரும் இழப்பீடை அளிப்பதாகவே கருதுவதால் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் திறமையாக எல்லோரும் எளிதாய் அணுகும் வாசித் கிர்மானிக்கு கட்சி தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கட்சி தொண்டர்களின் உணர்வுக்கு கட்சி தலைமை மதிப்பு கொடுக்கும் என்று கருதிகிறோம் என்கின்றனர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியினர்.