டெல்லி முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி படுகொலை.

July 7, 2021

By இரா. தேவேந்திரன்.

முன்னாள் மத்திய அமைச்சர் பி.ஆர். குமாரமங்கலம் மனைவி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்  ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் வசித்து வந்தார்.

இவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் நேற்று இரவு அவரது வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கிட்டி குமாரமங்கலத்திற்கும் கொள்ளையர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது இதில் கிட்டி குமாரமங்கலம் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

டெல்லியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க பத்து தனிப்படைகள் அமைத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

Share:

இரா. தேவேந்திரன்.

July 7, 2021

Leave a Comment