தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பாக கால வரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதும் தமிழக குடிமக்கள் பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கில் பதிவு செய்து வருகின்றனர்.
அதாவது தமிழக முழுவதும் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஏரியா மேனேஜர்கள் , மாவட்ட மேலாளர்கள், (DM )முதுநிலை ரீஜினல் மேலாளர் ( SRM )ஆகியோர் குறித்தும் டாஸ்மார்க் நிர்வாக பணிகள் எப்படி நடைபெறுகிறது. ஊழியர்கள் , அதிகாரிகள் எப்படி மக்களின் பணத்தை, ரத்தத்தை உறிஞ்சும் அட்டையைப் போல உறிஞ்சி குடிக்கிறார்கள் என்று பல தரவுகளுடன் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் விற்பனையாளர்கள் தினசரி பணிக்கு வருவதில்லை. அவர்களுக்கு பதிலாக தினக்கூலி அடிப்படையில் கூலிக்கு ஒவ்வொரு கடையிலும் தங்களது சார்பில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் சம்பளமும் 500 ரூபாய் டிப்சும், இரண்டு குவாட்டர், ஒரு பீரும் இலவசமாக வழங்கப்படுகிறது. அது இல்லாமல் ஊழியர்களுக்கு தெரியாமல் பணத்தையும் திருடி செல்கின்றனர்.
ஆனால் விற்பனையாளர்கள் போலியாக தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை அரசு ஊழியர்களாக கணக்கு காட்டி வேலையில் அமர்த்தியுள்ளது அனைத்து அதிகாரிகளுக்கு தெரிந்தும் கூட அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதிகாரிகளுக்கு ஊழியர்கள் எச்சில் எலும்பு துண்டை போடுவதால் அதிகாரிகள் அமைதியாகி விடுகின்றனர். ஒரு படி மேலே போய் போலியான அடையாள அட்டையை டாஸ்மாக்கில் பணியாற்றும் விற்பனையாளர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு ஜெராக்ஸ் கடையில் போலியாக ஒரு அடையாள அட்டையை தயாரித்து கொடுத்து விடுகின்றனர்.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு கடையிலும் தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு பல்வேறு பிரச்சனைகள், தகராறுகள் ஏற்பட்டு வருகிறது. அரசும், நீதிமன்றமும் கடுமையான நடவடிக்கை எடுத்தும் கூட ஒவ்வொரு பாட்டிலுக்கும் குறைந்தபட்சம் 5 லிருந்து 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலித்து வருகின்றனர்.
ஏழை மக்கள், தினக்கூலிகள், உழைக்கும் மக்கள் வாங்குகின்ற சாதாரண சரக்கு பாட்டில்களின் விலைகளை காட்டிலும் அதிகபட்சமாக 10 ரூபாய் வசூலிக்கின்றனர். சிலர் கேள்வி கேட்டால் அவர்களிடம் ஐந்து ரூபாய் மட்டும் வசூலித்து கொள்கின்றனர். ஆனால் ஒரு சிலர் பீர் குடிப்பவர்கள் பீர் வாங்கினால் 20 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். சாதாரணமாக உள்ள கடைகள் மற்றும் எலைட் பார்களில் இந்த வசூல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மது பிரியர்கள் விரும்பும் பீர் வகைகள் கடையில் கிடைக்காது. அது பாரில் தான் கிடைக்கும்.

இது சம்பந்தமாக டாஸ்மாக் டோல் ஃப்ரீ எண்ணில் புகார் அளித்தும் கூட இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தாலும் வரும் மார்ச் மாதத்துக்குள் கணிப்பொறி ஆகிவிடும் அப்போது இது போன்ற கூடுதல் விலை வசூலிக்க மாட்டார்கள் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை செய்கிற போது சாதாரணமாக ஒரு சாராய பாட்டிலின் விலை 140 ரூபாயாக இருந்தால் 150 ரூபாய் பணம் போட வேண்டும் என்று அவர்கள் பதிவு செய்து தருகிறார்கள். அதை இவர்கள் கியூ ஆர் கோடில் ஸ்கேன் செய்யும் போது 150 ரூபாயாக பணம் போடுகின்றனர். ஆனால் ஒரு பாட்டிலின் விலை 140ரூபாயாக தான் விலை பட்டியலில் இருக்கிறது.
ஆனால் படிக்கத் தெரியாத மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர், கூலி தொழிலாளிகள் இந்த சாராயத்தின் விலை 150 ரூபாய் என்று பணம் கொடுத்து விட்டு செல்கின்ற அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதுபோல ஒவ்வொரு கடைக்கும் ஒரு நாள் ஒன்றுக்கு இருபது ஆயிரத்திலிருந்து 35 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக பணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த பணத்தை விற்பனையாளர்கள், தினக்கூலி ஊழியர்கள். சூப்பர்வைசர்கள், ஏரியா மேனேஜர்கள் என கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை லஞ்சமாக தரப்படுகிறது.
இப்படி லஞ்சமாக தரப்பட்ட பணத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய குடும்ப சொத்தை, வருமானத்தை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஒரு டாஸ்மாக்கில் பணியாற்றும் ஒரு விற்பனையாளர் குறைந்தபட்சம் ஐந்து ஏக்கர், ஒரு டாக்டர், ஒரு கார், இரண்டு வீடு, ஒரு சின்ன வீடு, ஒரு புல்லட் என தங்களது வருமானத்தை பெருக்கியுள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் கூடுதலான தகவல் என்னவென்றால் டாஸ்மாக் கடையில் உள்ள குடிமக்கள் விரும்பி குடிக்கும் பிராந்தி, ரம் போன்ற மது வகைகளில் மூடியை திறந்து தண்ணீர் கலந்து கலப்படமாக விற்பனை செய்து வருகின்றனர். அதில் பல லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து வருகின்றனர்.
எனவே, இது போன்ற கொள்ளையடிக்கும் திருட்டு கும்பல் ஊழியர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த அரசியல் அமைப்புகளும் குறிப்பாக உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கிற கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்ற இதர சாதி அமைப்புகள் யாரும் ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று சமூக வலைதளத்தில் பொதுமக்கள் குடிமகன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அது மட்டுமல்ல டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் ஊரார் தாலியை அறுத்து தன் தாலி மீது போட்டுக் கொள்ளுகின்றனர் என்றெல்லாம் கடும் சொற்களால் குடி மகன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.