#Vikatan website; விகடன் இணையதளம் முடக்கம். புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்.

February 19, 2025

By சிவனேஷ். சிவா

இதுகுறித்து புதுச்சேரி செய்தியாளர்கள் சங்க தலைவர் டி சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-BJP's cartoon complaint sparks outrage: Vikatan website blocked, DMK slams 'fascist' censorship-Telangana Today

பிரதமர் மோடி குறித்து கார்ட்டூன் வெளியிட்டதற்காக விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி மத்திய அரசால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது உண்மை என்றால் இது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது.

புதுச்சேரி செய்தியாளர்கள் சங்க தலைவர் டி.சிவக்குமார்.

இது அப்பட்டமான கருத்து உரிமைக்கு எதிரான செயலாகும். இதனை புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் விகடனுடன் ஒன்றிணைந்து கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம். விகடனுடன் களத்தில் நிற்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.Union government allegedly blocks access to Tamil Magazine Vikatan over cartoon criticising PM Modi - The South Firstவிகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை பிரஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பத்திரிகை அமைப்புகள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகிறது. இன்னும் கூட விகடன் இணையதளம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

ஆனால் தற்போது விகடன் இணையதளத்தின் செய்திகள் அனைத்தும் ஆனந்த விகடன் இணையதளத்தில் இடம்பெறும் என்றும் ஆனந்த விகடன் இணையதளத்தில் அந்த செய்திகளை வாசகர்கள் படிக்கலாம் என்றும் விகடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share:

சிவனேஷ். சிவா

February 19, 2025

Leave a Comment