#Soldier killed by mercenary; கள்ளக்காதலை தட்டி கேட்ட ராணுவ வீரரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி.

February 26, 2025

By இரா. தேவேந்திரன்.

தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை மூலம் கணவரை (ராணுவ வீரரை) கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ளது முத்து கொண்டாபுரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் முன்னாள் ராணுவ வீரர் இவர் கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்ததாக திருவலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.ராணுவ வீரர் கொலை வழக்கு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல் நிலையம் முற்றுகைஇந்தக் கொலையில் வெங்கடேசனின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கணவரின் மரணம் குறித்து மனைவி சந்தியா எதுவும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியது. வெங்கடேசன் கொலையில் மர்மம் இருப்பதாக திருவலாங்காடு காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இந்த நிலையில் சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன், ஸ்ரீராம் சதீஷ், பிரசாந்த் ஆகியோர் முன் விரோதம் காரணமாக ராணுவ வீரர் வெங்கடேசனை கார் ஏற்றி கொல்ல முயன்று அது முடியாமல் போனதால் இரும்பு கம்பியால் அவரை அடித்து உதைத்து கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இதை அடுத்து விபத்து வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்த தொடங்கினர்.முன்னாள் ராணுவ வீரர் கொலை- கட்டிலில் தூங்கிய கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி | Tamil News Wife arrested for Husband murder caseபோலீசார் நடத்திய விசாரணையில் சந்தியாவின் கள்ளக்காதலன் ராமஞ்சேரி அடுத்த தோமூர் கிராமத்தைச் சேர்ந்த லோகு என்கிற லோகேஸ்வரனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது கள்ளக்காதலுக்கு தன் கணவர் ராணுவ வீரர் வெங்கடேசன் இடையூறாக இருந்ததால் தனது கள்ளக்காதலன் லோகேஸ்வரன் மூலம் சென்னையில் உள்ள கூலிப்படையினரை ஏவி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் சந்தியா. ராணுவ வீரரை கொலை செய்ய 5 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டு முன்பணமாக 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் சம்பவத்தன்று வெங்கடேசன் திருவள்ளூர் செல்ல ராமலிங்கபுரம் வழியாக சென்றுள்ளார். அப்போது காரில் வந்த கூலிப்படையினர் வெங்கடேசன் மோட்டார் பைக் மீது மோதி கொலை செய்ய முயற்சித்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வெங்கடேசன் உயிர் தப்பினார். வெங்கடேசனை இனிமேல் விடக்கூடாது என்று அவர்கள் காரில் தயாராக வைத்திருந்த கத்தி இரும்பு பைப்புகள் மூலம் வெங்கடேசனை ராமலிங்கபுரம் காட்டுப்பகுதியில் ஓட ஓட விரட்டி அடித்து கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் இறந்த ராணுவ வீரர் வெங்கடேசனை சாலையின் ஓரமாக போட்டுவிட்டு கொலையாளிகள் தப்பி ஓடினார்கள்.

கொலை சம்பவம் போல் தெரியாமல் இருக்க கார் மோதி தலையில் அடிபட்டதை போல  செட்டிங் செய்து சாலையோரம் வெங்கடேசன் உடலை தூக்கிப் போட்டுவிட்டு இவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் வெங்கடேசன்.

பின்னர் போலீசார் அதை சாதாரண விபத்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தனர். வெங்கடேசனின் மனைவி சந்தியாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் திருவலாங்காடு காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது சந்தியாவின் மீது எங்களுக்கு சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சந்தியாவை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.  அப்போது போலீஸ் விசாரணையில் சந்தியா தனக்கும் தோமூரை சேர்ந்த லோகேஸ்வரனுக்கும் கள்ளக்காதல் இருப்பதை ஒத்துக் கொண்டார். பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கூலிப்படையினரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படை மூலம் மனைவி கொலை செய்த சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சந்தியாவின் கள்ளக்காதலன் அதிமுகவை சேர்ந்த தோமூர் லோகேஷ்.

போலீசார் ஆரம்ப கட்டத்திலேயே தீவிர விசாரணை நடத்தி இருந்தால் உண்மை சம்பவத்தை உடனே கண்டுபிடித்து இருக்கலாம் ஆனால் போலீசாரின் மெத்தெனத்தால் இந்த கொலை வழக்கு தாமதமாக விசாரணை செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரரை கொலை செய்த கள்ளக்காதலன் லோகேஸ்வரன் அதிமுகவை சேர்ந்தவர். அவர் முன்னாள் அமைச்சர் ரமணாவின் தீவிர ஆதரவாளராகவும் பணியாற்றி வருகிறார் என்கிறார்கள் போலீசார்.

Share:

இரா. தேவேந்திரன்.

February 26, 2025

Leave a Comment