#Women are more oppressed than Dalits; தலித்துகளை விடவும் ஒடுக்கு முறைக்கு ஆளாகிறவர்கள் பெண்கள்.

March 8, 2025

By இரா. தேவேந்திரன்.

பெண் விடுதலை இல்லையேல்; மண் விடுதலை இல்லை! போராட்ட வாழ்க்கை என்பது பெண்களுக்கு இயல்பாகவே அமைந்த ஒன்று. அக்காலம் தொட்டு இக்காலம் வரை ஒவ்வொரு பெண்ணும் ஒரு போராட்டத்தை தன்னுள் விருப்பப்பட்டோ, படாமலோ நடத்திக்கொண்டே இருக்கிறார்.1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி முதலாளித்துவத்தை எதிர்த்து அதிகாரத்தை எதிர்த்து, சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் கேட்டு பாரிஸ் பெண்கள் நிகழ்த்திய மாபெரும் எழுச்சிமிகு போராட்டங்களுக்கு அடிபணிந்து,Louis Blanc - Wikipedia

லூயிஸ் பிளாங்க்

லூயிஸ் பிளாங்க் எனும் அரசர் பெண்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட ஆண்களுக்கு நிகரான உரிமைகளை வழங்கிட ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 தேதியை நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என,1910 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய ஜெர்மனி நாட்டின் பொதுவுடைமைக் கட்சி தலைவர் கிளாரா செர்கினே வலியுறுத்தினார்.

அதன்பின் 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டு மார்ச் 8- உலக மகளிர் தினம் என்று பிரகடனம் செய்தார். அது முதல் ஆண்டுதோறும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

வெறுமனே…பெண்கள் நம் கண்கள், பெண்கள் தெய்வத்துக்கு சமம், பெண்களை போற்றுவோம், சிங்கப்பெண்களே என்றெல்லாம் ஒப்புக்கு புகழாரம் சூட்டி கேக் வெட்டி கொண்டாடும் கேளிக்கை நாள் அல்ல இது.Ambedkar Jayanti - UPSC Current Affairs- IAS GYANமுதலாளித்துவத்தை எதிர்த்து, அதிகாரத்தை எதிர்த்து, தங்கள் மீது நிகழ்த்தப்பட்டு வருகின்ற சுரண்டல்களை எதிர்த்து, பெண்கள் நிகழ்த்திய மாபெரும் போராட்டத்தை நினைவு கூறும் நாளே மார்ச் 8 உலக மகளிர் தினம்.

இன்றும்…தலித்களை விடவும் மேலான ஒடுக்குமுறைக்கு ஆளாகிறவர்கள் பெண்கள். ஒவ்வொரு வீடுகளிலும் பெண்கள் வாழ்வியல் என்பது ஒடுக்குமுறைக்கு ஆளாகின்ற தலித்கள் வாழ்வியலை போன்றே இருக்கின்றது. பெண்கள் தலித்களாக இருக்கின்றனர்.

சமரன் நாகன்.

பெண்கள் சுதந்திரமாகவும், சம வாய்ப்புகளுடனும், உரிமைகளுடனும், தமக்குப் பாதுகாப்பான கலாசாரத்துடனும் வாழ்வதற்கு இங்கே சாதிகளும் மதங்களும் தடையாக இருக்கின்றன. இந்ததடைகள் அடித்து நொறுக்கி பெண் விடுதலையை முன்னெடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

பெண் விடுதலை இல்லையேல்; மண் விடுதலை இல்லை! யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த; இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துகள் !

Share:

இரா. தேவேந்திரன்.

March 8, 2025

Leave a Comment