#Sexual assault on a girl; சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த இளைஞரை கைது செய்ய 3 சிறப்பு படை​கள் அமைத்து டிஜிபி உத்தரவு.

July 19, 2025

By இரா. தேவேந்திரன்.

கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், கும்​மிடிப்​பூண்டி அடுத்த ஆரம்​பாக்​கத்​தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த இளைஞரை கைது செய்ய 3 சிறப்பு படை​களை அமைக்க தமிழக காவல்​துறை தலைமை இயக்​குநர் (டிஜிபி) சங்​கர் ஜிவால் உத்​தர​விட்டுள்ளார்.

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - குற்றவாளி புகைப்படம் வெளியீடு.., தேடும்  பணி தீவிரம்.!

திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே ஆரம்​பாக்​கம் பகு​தியை சேர்ந்​த 10 வயது சிறுமி, ஆரம்​பாக்​கத்​தில் உள்ள பள்ளி ஒன்​றில் 4-ம் வகுப்பு படித்து வரு​கிறார். இந்​நிலை​யில், கடந்த 12-ம் தேதி வழக்​கம் போல் பள்​ளிக்​குச் சென்ற சிறுமி, அன்று சனிக்​கிழமை என்ப​தால் மதி​யமே பள்ளி முடிந்து, ஆரம்​பாக்​கத்​தில் உள்ள தன் பாட்டி வீட்​டுக்கு செல்வதற்​காக, ரயில் நிலை​யத்தை கடந்து சென்​றுள்​ளார். அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர், சிறுமியை மாந்​தோப்பு பகு​திக்கு தூக்​கிச் சென்​று, பாலியல் வன்​கொடுமை செய்துவிட்டு, தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து அழுத​வாறு பாட்டி வீட்​டுக்கு வந்த சிறுமி, நடந்த சம்​பவம் குறித்​து, பாட்​டி​யிடம் தெரி​வித்​துள்​ளார். தொடர்ந்​து, சிறுமி கும்​மிடிப்​பூண்டி கோட்​டக்​கரை​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் முதலுதவி சிகிச்சை பெற்​று, பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வந்​தார். பிறகு, அவர், சென்னை ஆர்​.எஸ்​.ஆர்​.எம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு​கிறார். இச்​சம்​பவம் குறித்​து, ஆரம்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, சம்பவ இடம் அருகே இருந்த கண்​காணிப்பு கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​தனர்.கும்மிடிப்பூண்டியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்.., சிறுமிக்கு பாலியல் தொல்லை  அளித்த மாணவன் கைது.!அந்த ஆய்​வில், சிறுமியை இளைஞர் பின் தொடர்ந்து செல்​வது தெரிய​வந்​துள்​ளது. இதையடுத்​து, 3 தனிப்​படை போலீ​ஸார், ஆரம்பாக்​கம் பகு​தி​களில் பதி​வான கண்காணிப்பு கேம​ராக்​களில் பதி​வான காட்​சிகள் உள்​ளிட்​ட​வற்​றின் அடிப்​படை​யில் இளைஞரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். இதற்​கிடையே, சிறுமிக்கு நடந்த பாலியல் வன்​கொடுமைக்கு அரசி​யல் கட்சி தலைவர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், சம்​பவம் நடந்து 6 நாட்​கள் கடந்​தும் சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த நபர் கைது செய்​யப்​ப​டாத​தால், ஆத்​திரம் அடைந்த சிறுமி​யின் உறவினர்​கள் நேற்று ஆரம்​பாக்​கம் காவல் நிலை​யத்தை முற்​றுகை​யிட்​டனர். அவர்​கள் சம்​பந்தப்பட்ட இளைஞரை கைது செய்​யக் கோரி முழக்​கமிட்​டனர். அவர்​களை சமா​தானப்​படுத்​திய போலீ​ஸார், ‘மிக விரை​வில் குற்ற​வாளி கைது செய்​யப்​படு​வார்’ என, உறு​தி​யளித்​தனர். ஆகவே, சிறுமி​யின் உறவினர்​கள் அங்​கிருந்து கலைந்து சென்​றனர்.

சுட்டுக் கொல்லணும் - பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய் கண்ணீர் -  தமிழ்நாடு

இச்​சூழலில், டிஜிபி சங்​கர் ஜிவால் நேற்று சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த இளைஞரை கைது செய்ய சிறப்பு குழுக்களை அமைக்க உத்​தர​விட்​டார். அதன் பேரில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், திரு​வள்​ளூர் எஸ்பி விவே​கானந்த சுக்லா மேற்பார்வையில், திரு​வள்​ளூர், ஊத்​துக்​கோட்​டை, கும்​மிடிப்​பூண்டி ஆகிய 3 காவல் உட்​கோட்​டங்​களின் டிஎஸ்​பிக்​கள் தலைமையில் 3 சிறப்பு படை​கள் அமைக்கப்பட்டுள்ளன.

Who is IPS Shankar Jiwal, New Police Chief of Tamil Nadu? -  https://indianmasterminds.com

டிஜிபி சங்​கர் ஜிவால்

தனிப்​படை​யினரும், பாலியல் வன்​கொடுமை​யில் ஈடு​பட்ட இளைஞரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். மேலும், சம்​பந்​தப்​பட்ட இளைஞர் வடமாநில இளைஞ​ராக இருக்​கலாம் என்ற கோணத்​தில் 50-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸாருடன், தமிழக பகுதி​கள் மட்​டுமல்​லாமல், கும்மிடிப்​பூண்​டியை ஒட்​டி​யுள்ள தடா, சூளூர்​பேட்டை உள்​ளிட்ட ஆந்​திர பகுதி​களி​லும் சிறப்பு குழுக்கள், தனிப்​படை​யினர் தேடு​தல் வேட்​டை​யில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலியல் குற்றவாளிகள் மீது அரசு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மகளிர் அமைப்பைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். பாலியல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான தண்டனை வழங்க சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உறுதிப்படுத்த வேண்டும். குற்ற சம்பவங்களை செய்யும் நபர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களை தடுக்க வேண்டும் என்றால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி என்கவுண்டர் செய்தால் மட்டுமே பாலியல் குற்றவாளிகள் பயப்படுவார்கள்  அப்போது தான் குற்றங்களும் குறையும் என்கின்றனர் மகளிர் அமைப்பினர்.

Share:

இரா. தேவேந்திரன்.

July 19, 2025

Leave a Comment