#பக்தி ஸ்பெஷல் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் பெருமாள்.
17-2-2026 அன்று தொடங்கும் சிபிஎஸ் பத்தாம் வகுப்பு மற்றும் 18ஆம் தேதி நடக்க இருக்கும் 12ஆம் தேர்வுக்கு மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத வேண்டும் என்று பல பள்ளி நிர்வாகங்களும் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கல்விக்கு சிறப்பு அம்சமாய் விளங்கும் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் பெருமாள் சாமி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த செட்டி புண்ணியம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ யோக ஹயக்ரீவர் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் தங்களது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.


பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட், தேர்வு அட்டை, பேனா, புத்தகம் ஆகியவற்றை சாமியின் சன்னதியில் வைத்து அருள் பெற்றனர்.


சனி, ஞாயிறு, புதன்கிழமை ஆகிய நாட்களில் அதிக அளவில் கூட்டம் வருகிறது. மற்ற வார நாட்களில் குறைந்த அளவே பக்தர்கள் வந்து செல்கின்றனர். என்னதான் கடுமையாக உழைத்து படித்தாலும் இறைவன் அருள் ஆசி வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்த இந்த கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.


ஸ்ரீ யோக ஹயக்ரீவர் பெருமாள் சன்னதியின் சிறப்பு..
யாம் வசிக்கும் இடத்தில் கல்வி, வியாபாரம் மற்றும் தொழில் விருத்தி ஆகும். சுவாமிக்கு உகந்த நாள் திருவோண நட்சத்திரம். கிழமை; புதன்,


தியான ஸ்லோகம்.
ஞானானந்த மயம் தேவம். நிர்மலஸ் படிக்காக் ருதிம்! ஆதாரம் ஸர்வ வித்யாநாம். ஹயக்ரீவர் உபாஸ மஹே!!


இந்தக் கோயிலுக்கு செல்ல விருப்பமுள்ள பெற்றோர் மற்றும் மாணவர்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் கூகுளில் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் பெருமாள் திருக்கோயில் என்று தங்களுக்கு வேண்டிய மொழியில் கூகுளில் தேடினால் கூகுள் மேப் லொகேஷன் போன்ற சங்கதிகள் தெளிவாக தெரியும். அதை பின் பற்றி கோயிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரலாம்.


சாமிக்கு தட்சனை பொருட்களாக ஏலக்காய் மாலை தேங்காய் பூ பழம் துளசி மாலை எடுத்துச் செல்ல வேண்டும் சிறப்பு தரிசன கட்டணம் 25 ரூபாய் வரிசையும் இலவச தரிசனம் வரிசையும் தனியாக உள்ளது.


கோயிலில் புளிசாதம் 30 ரூபாய்க்கும் லட்டு மற்றும் சீடைகள் தலா 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோயிலை சுற்றி பல்வேறு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனா கடைகள் அதிகளவில் உள்ளன.