#cbse exams began across the country today; நாடு முழுவதும் சிபிஎஸ் தேர்வு இன்று தொடங்கியது. 45 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

February 17, 2026

By ரா. ஹேமதர்சினி

இந்தியா முழுவதும் இன்று பிப்ரவரி 17ம் தேதி சிபிஎஸ்இ தேர்வுகள் இன்று தொடங்கியது .  நாடு முழுவதும் 45 லட்சம் மாணவர்கள்  எழுதினார்கள்.

சிபிஎஸ் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ- மாணவியருக்கான பொது தேர்வுகள் நடு முழுவதும் இன்று தொடங்கியது. இத்தேர்வில் 45 லட்சம் பேர் பங்கேற்பதாக சிபிஎஸ்இ  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ – மாணவியருக்கான ஆண்டு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியன.

இந்த தேர்வுகளில் நாடு முழுவதும் மற்றும் பிற 26 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 45 லட்சம் மாணவ- மாணவியர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 204 பாட தலைப்புகளில் இத்தேர்வுகள் நடக்கின்றன.

பத்தாம் வகுப்பு மாணவ -மாணவியர் இன்று கணக்கு பாட தேர்வையும், 12ம் வகுப்பு மாணவ- மாணவியர் பயோ டெக்னாலஜி, தொழில் முனைவோர் மற்றும் சுருக்கெழுத்து உள்ளிட்ட பாடத் தேர்வையும் எழுதுகின்றனர்.

முதல் நாள் தேர்வில் 20 லட்சம் பேர் 8074 தேர்வு மையங்களில்  தேர்வு எழுதுகிறார்கள்.  இந்த தேர்வு காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1:30 மணி வரை நடக்கும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மேற்கண்ட கல்வி வாரியம் மாணவர்களுக்கான தேர்வில் மதிப்பீடுகள் மற்றும் விடைத்தாள் திருத்துவது ஆகியவற்றில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது.

 

பத்தாம் வகுப்பு தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளது.  முதல் கட்டமாக தேர்வு பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மே 5 தேதி தொடங்கி 20ம் தேதி வரையும் நடக்கும்.

12 ம் வகுப்பு தேர்வு  அதாவது பிப்ரவரி 18 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கும். மேற்கண்ட தேர்வுகளுக்கான அட்டவணைகளை சிபிஎஸ்இ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை பெற்றோர்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்றைய சமூக சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இணைய தளத்தின் பிடியில் இருந்து  மீட்டு தேர்வில் எப்படி வெற்றி பெற  வேண்டும் என்று  குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும். 

தங்களது  வாழ்க்கையில் குழந்தைகள் எப்படி முன்னேற கல்வி, பொது அறிவு அவசியம் என்பதை விளக்கி தேர்வில் எப்படி வெற்றி பெற  வேண்டும்  என்று பெற்றோர்கள் சொல்லி தரவேண்டும். என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  

Share:

ரா. ஹேமதர்சினி

February 17, 2026

Leave a Comment