#rtos are trapped; டுபாக்கூர்களின் கையில் சிக்கித் தவிக்கும் (RTO)ஆர்டிஓக்கள்.

February 18, 2026

By சை. சையத் ரிஸ்வான்

சிறப்பு செய்தி ; தலை குனியும் தமிழகம். தலைவிரித்தாடும் லஞ்சம்.

தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் உள்ளனர். அதாவது (RTO) ஆர்டிஓ மற்றும் அதேபோல பிரேக் இன்ஸ்பெக்டர்கள் அலுவலக கண்காணிப்பாளர்கள் தனி அலுவலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.CM Stalin launches fresh attack on Governor withholding assent on Bills

லஞ்சத்தை எந்தத் துறையில் ”களை”  எடுத்தாலும் போக்குவரத்து துறையில் அது முடியாத காரியம். கமல் நடித்து வெளியான இந்தியன் படத்தில் அது தொடர்பாக பல காட்சிகளை அவர் சுட்டிக் காட்டி இருப்பார்.லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் | Giving bribe and taking bribe is  a crime| #shorts

அது நிஜத்திலும் நிஜம் மறுக்க முடியாத உண்மை.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பெரும்பாலும் பெண் சித்தர்கள் ஆகவும் குடிகாரர்களாகவும் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதைத் தவிர தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் நடத்துபவர்கள் தமிழக முழுவதிலும் உள்ள அந்தந்த பகுதி உரிமையாளர்கள் ஆர்டிஓ மற்றும் அதிகாரிகளை தங்களது கையில் வைத்துக்கொண்டு எல்லா தில்லுமுல்லு வேலைகளையும் செய்து பணம் கொடுத்து சாதிப்பார்கள். ஓட்டத் தெரியாதவனுக்கு லைசன்ஸ், செத்துப்போன வண்டிகளுக்கு புதிய ஆர்சி புக். செத்துப் போனவர்களுக்கு லைசென்ஸ் இப்படி எல்லாவிதமான மோசடி வேலைகளையும் பணம் கொடுத்தால் தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அதிகாரிகள் செய்து கொடுப்பார்கள்.

இதிலும் மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் புதிய மோட்டார் பைக் மற்றும் கார் லாரி வேன் போன்றவைகளை பதிவு செய்வதற்கும் பெயர் மாற்றம் செய்வதற்கும் ஒவ்வொரு தனி புரோக்கர்களை வைத்திருப்பார்கள். அந்த தனி புரோக்கர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளுக்கு குட்டி, புட்டி, பிரியாணி என அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பார்கள்.

போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர்.

ஒரு சில புரோக்கர்கள் அதிகாரிகளின் வீட்டு வேலைக்காரர்களாகவே மாறி விடுவார்கள் அவர்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது அவருடைய மனைவிகளை கடை மற்றும் ஷாப்பிங் மாலுக்கு அழைத்து செல்வது இப்படி எல்லா வேலைகளையும் செய்து தருவார்கள்.

கஜலட்சுமி ஐ ஏ எஸ் போக்குவரத்து துறை ஆணையர்.

இதில் எழுதப் படிக்கத் தெரியாத புரோக்கர்கள் தாங்கள் பெரிய ரிப்போர்ட்டர்கள் என்றும் சில அரைவேக்காட்டு நபர்கள் தாங்கள் மூத்த பத்திரிகையாளர்கள் என்றும் பல்வேறு அதிகாரிகளை மிரட்டி பணம் கேட்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கேட்டு வைத்து கொண்டு பணம் கேட்பது அந்த அலுவலகத்தில் என்னென்ன ஊழல் நடக்கிறது என்பதை புரோக்கர்கள் மூலம் தெரிந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டி பணம் கேட்பது அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் எந்த பெண் அதிகாரிகளுடன் தொடர்பு மற்றும் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறார்கள் அல்லது யாரிடம்  (chalan) செலான் வாங்கி எந்த புரோக்கர்களிடம் அந்த (chalan) செலான் கொடுக்கப்பட்டு அந்தச் செலான் எப்படி அவர்களது வீட்டுக்கு செல்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டி பணம் கேட்பது என எல்லா மிரட்டல் வழிகளையும் இந்த டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் தமிழ்நாடு முழுக்க அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து கொண்டு வருகின்றனர்.

இதில் கோடிகள் சம்பாதித்த டுபாக்கூர்களும் இருக்கிறார்கள், மாதம் மாதம் பிச்சை எடுக்கும் டுபாக்கூர்களும் இருக்கிறார்கள், அன்றாடம் 500க்கும் ஆயிரத்திற்கும் கையேந்தும் டுபாக்கூர்களும் இருக்கிறார்கள் ஏன் இந்த டுபாக்கூர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து அதிகாரிகள் பயப்படுவதற்கான காரணம் என்ன என்று நாம் சிறப்பு புலனாய்வு செய்ய தொடங்கினோம்.

அதில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. அதாவது ஒரு அலுவலகத்தில் அதாவது ஒரு மாவட்டத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஆர் டி ஓ, பிரேக் இன்ஸ்பெக்டர், தனி அலுவலர், கண்காணிப்பாளர் என எல்லா அதிகாரிகளும் பெரும்பாலும் பெண் பித்தர்கலாகவும் தண்ணி வண்டிகளாகவும் இருக்கின்றனர்.

லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட பேக் இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வரி.

இல்லை என்றால் அந்த அலுவலகத்தில் எந்த அழகான ஊழியர்கள் இருக்கிறார்களோ அந்த பெண் ஊழியர்களுக்கு இந்த புரோக்கர்கள் மாமா வேலை செய்து அவர்களை கூட்டி கொடுப்பதையே தொழிலாக வைத்துக் கொண்டுள்ளனர் இப்படி பலர் தங்களது சொத்து இழந்தவர்கள் அதிகம்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆர்டிஓ பிரேக் இன்ஸ்பெக்டர் கண்காணிப்பாளர் பி ஏ என ஒவ்வொருவருக்கும் சராசரியாக 25 கோடி முதல் 50 கோடி வரை சொத்துக்கள் உள்ளன சில அதிகாரிகளுக்கு நூற்றிலிருந்து 150 கோடி ரூபாய் வரை கூட சொத்துக்கள் உள்ளன ‌.

சில அதிகாரிகள் இரண்டு வீடுகள் வைத்திருப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள் சிலர் சிலர் உதவி கேட்டு வரும் கணவனால் கைவிடப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்களை இரண்டாவது காரமாக வைத்துக் கொண்டுள்ள அதிகாரிகளும் அதிகமாக இருக்கிறார்கள். அது தொடர்பாக நிறைய புகார்களும் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது என்பது நமது விசாரணையில் தெரிய வந்தது.

சில அதிகாரிகள் உதவி கேட்டு வரும் தொழிலதிபர்களை வாரிசு இல்லாத தொழிலதிபர்களை குடிக்க அடிமையாக்கி அவர்களுடைய நிலம் மற்றும் லாரி பஸ் ஆகியவற்றை தனது உறவினர் மற்றும் சொந்தங்களுக்கு பெயரில் மாற்றிக் கொள்கின்றனர்.

இப்படி ஊரான் சொத்தை கொள்ளை அடித்து கோடிக்கணக்கில் சேர்த்து அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு நாமக்கல்லில் தனது குடும்பத்துடன் இறந்து போன ஒரு அதிகாரி ஒரு டுபாக்கூர் பத்திரிகையாளருக்கு 25 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாக சொல்கிறார்கள். செத்தவன் திருப்பி வந்து கேட்கவா போகிறான் என்று கடன் வாங்கியவர் சந்தோஷமாக இருக்கிறாராம்.

mukkannan RTO retired.

திரும்பிய பக்கமெல்லாம் ஊழல் திரும்பிய பக்கமெல்லாம் லஞ்சம் திரும்பிய பக்கமெல்லாம் சலாம் தமிழ்நாட்டில் ஒரே ஒரு போக்குவரத்து துறையில் நேர்மையான அதிகாரியோ அல்லது கடை நிலை ஊழியரோ ஒருவரும் இல்லை என்கின்றனர் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றும் சில நேர்மையான அதிகாரிகள்.

இவர்கள் செய்யாத தொழில் இரண்டு மட்டும்தான் ஒன்று கொலை என்று ஒன்று விபச்சாரம் இதை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்து வருகின்றனர் என்கிறார்கள் அதிகாரிகள் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள ஆர்டிஓ ஆபீஸ் அதிகாரிகள் அல்லது அந்த அலுவலகம் விபச்சாரிகளின் அலுவலகமாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம் என்கிறார்கள். எனவே மேலைநாடுகளில் லைசென்ஸ் வழங்குவதற்கு என்ன நடைமுறைகள் பயன்படுத்தப்படுகிறதோ அதே நடைமுறைகளை கடை பிடிக்க வேண்டும். அதே போன்ற வழிமுறைகளை இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கடைபிடிக்க வேண்டும் அதிகாரிகளை நேரில் சந்திக்கும் நடைமுறையோ அல்லது புரோக்கர்களை நேரில் சந்திக்கும் நடைமுறையோ இருக்கவே கூடாது என்கின்றனர்.

அதிகாரிகள் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் நேரில் ஆஜராகி தாங்கள் யார் என்பதை உறுதி செய்வதற்கு நேரில் சென்று விளக்கம் அளித்து ஆவணங்களைப் பெற வேண்டும் அதற்கு மட்டும்தான் பொதுமக்கள் அதிகாரிகளை சந்திக்க வேண்டுமே தவிர மற்றபடி எந்த வகையிலும் அதிகாரிகளை பொதுமக்கள் சந்திக்கக்கூடிய நிலையும் வாய்ப்பும் வழங்கவே கூடாது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக இந்த லஞ்சத்தை ஊக்குவிப்பதற்கு  வழிகாட்டுவது மோட்டார் பைக் நிறுவனத்தினரும் கார் லாரி ஷோரூம் நிறுவனத்தின் உரிமையாளர்களும் நிர்வாகிகளுமே இதை  ஊக்குவிக்குகிறார்கள் என்கின்றனர் அதிகாரிகள்.

ஏறக்குறைய எழுதப் படிக்கத் தெரியாத டுபாக்கூர்களின் கையில் சிக்கித் தவிக்கிறார்கள் சாலை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் என்றால் மிகையல்ல.Officials taking bribes; லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தங்களை திருத்தி கொள்ள  வேண்டும். - chennireporters.comஇந்த டுபாக்கூர்கள் மூத்த பத்திரிகையாளர்கள் எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுகள் எல்லாம் சென்னை புறநகர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி என எல்லா மாவட்டத்திலும் இருக்கிறார்கள்.

சில மூத்த பத்திரிகையாளர்கள் சீனியர் புரோக்கர்கள் சிலர் நான் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என் கையில் எல்லா அதிகாரிகளும் இருக்கிறார் என்று மார்தட்டிக்கொண்டு கல்லா கட்டி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் சாலை மற்றும் போக்குவரத்து துறையில் ஒரே ஒரு நேர்மையான அதிகாரிகள் யாருமே இல்லை என்பது அவமானத்தின் உச்சம். லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு நடைபெற்று தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. இவர்கள் செய்கிற தவறுகள் எல்லாம் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இல்லை என்று நாம் சொல்லி விட முடியாது.

இங்கு மட்டும் தான் உயர் அதிகாரிகளில் இருந்து கடைநிலை ஊழியர் வரை லஞ்சம் வாங்கும் துறையாக இருந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் அதிகாரிகளின் ஸ்டெப்னி, வப்பாட்டி, சின்ன வீடு, புரோக்கர்கள், டிரைவர்கள் என எல்லோரும் கல்லாகட்டி சந்தோஷமாக மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் துறையாக இருந்து வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Share:

சை. சையத் ரிஸ்வான்

February 18, 2026

Leave a Comment