Special story : Chief secretary muruganandam. Thiruvallur collector Pratap. RMK college.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்கா அமைத்ததில் 2 கோடி 70 லட்சம் ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்று புகார் எழுந்துள்ளது. இந்த புகார் குறித்து அதிகாரிகள் அடக்கி வாசிப்பது யாரை காப்பற்ற என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தப் புகார் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்களை தொடர்பு கொள்ள நாம் பலமுறை முயற்சி செய்தோம். அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. அதன் பிறகு அலுவலக எண்ணில் பலமுறை தொடர்பு கொண்டோம் அந்த எண்ணிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு அவரது கேம்ப் அலுவலக எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம் அந்த எண் செயல்பாட்டில் இல்லை என்ன தெரிந்தது.



அதன் பிறகு அவரது whatsapp எண்ணிற்கு இது தொடர்பான தகவல்களை நாம் கேள்வியாக முன்வைத்து தகவல் அனுப்பினோம் அதற்கும் இவர் இதுவரை பதில் அளிக்கவில்லை.
இது தொடர்பாக ஆர்எம்கே இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். அவர்கள் தரப்பில் முறையாக இமெயில் அனுப்புங்கள் அதன் பிறகு நாங்கள் பதில் அளிக்கிறோம் என்று தகவல் சொன்னார்கள்.
அதன் பிறகு நாம் முறையாக கல்லூரி நிர்வாகத்திற்கு இமெயில் அனுப்பினோம். ஒரு வாரம் கழித்து கல்லூரி முதல்வர் நம்மிடம் பேசினார்.



ஏன் எதற்காக இந்த தகவல்களை கேட்கிறீர்கள் என்று கேட்டார். அந்த பூங்கா அமைத்ததில் இரண்டரை கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. உங்கள் கல்லூரி நிர்வாகம் டெண்டர் எடுத்ததாக சொல்லப்படுகிறது நீங்கள் தான் வடிவமைத்து கொடுத்ததாக சொல்கிறார்கள் அதற்காகத்தான் கேட்கிறோம் என்று நாம் கேட்டதற்கு.
எங்கள் கல்லூரி நிர்வாகமும் எங்கள் நிர்வாகமும் டெண்டர் எடுக்கவில்லை. நாங்கள் சில பொருட்களை அதாவது பூங்கா அமைப்பதற்கு கலெக்டர் கேட்டுக் கொண்டதின் பேரில் தேவையான பொருட்களை இலவசமாக வழங்கினோம் என்று தெரிவித்தார். மேலும் தகவல்கள் வேண்டும் என்றால் நேரில் வந்து முறைப்படி கேளுங்கள் நாங்கள் சொல்லுகிறோம் என்று முடித்துக்கொண்டார். கல்லூரி முதல்வர் நம்மிடம் பேசிய ஆடியோ.



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 3 கோடியே 1 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்காவினை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.
இந்தப் பூங்காவை அமைப்பதற்கு டெண்டர் எடுத்தது யார் எந்த நிறுவனம் என்ற எந்த தகவலும் அந்தப் பூங்காவில் இடம் பெறவில்லை. அந்தப் பூங்கா அமைக்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
கார் டயர் மற்றும் ஆட்டோ டயர்களை பயன்படுத்தி ஊஞ்சல், பொம்மைகள், சேர்கள், விளையாட்டுப் பொருட்கள் அமைத்துள்ளனர். அது எல்லாம் நான்கு மாதத்திலேயே சேதமடைந்து அங்குள்ள குட்டையில் வீசப்பட்டுள்ளது. உருப்படியாக இருப்பது காம்பவுன்டு சுவர் மட்டும் தான் அது கூட தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கொள்ளலாம். மேலும் தரம் இல்லாத பொருட்களை கொண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை சுற்றியுள்ள தடுப்புச் சுவர்களும் தரமானதாக அமைக்கப்படவில்லை.


இதுகுறித்து முன்னாள் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் மோகன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அளித்துள்ளார்.


அதில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள்.
சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்கா திருவள்ளூர் திட்ட மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு விவரம் தர கோருதல்.
சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்கா திருவள்ளூர் இவற்றிற்கான அரசாணை நகல் தர கோருதல்.
ஒப்பந்ததாரர் முழு விவரம் தர கோருதல்.
திருவள்ளூர் மாவட்டத்தில் எஸ்சி, எஸ்.டி மக்கள் அதிகம் வாழும் நிலையில் அவர்களுக்கான நிதி தவறாக செயல்படுத்தக் கூடாது என்று கேள்விகளை எழுப்பி மனு அளித்துள்ளார். இந்த மனுவிற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அவர் மேல் முறையீடும் செய்துள்ளார்
இது தொடர்பாக நாம் சில அதிகாரிகளை நேரில் தொடர்பு கொண்டும் தொலைபேசி வாயிலாகவும் விசாரித்தோம். அதற்கு சில அதிகாரிகள் குறை சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நல்ல முறையில் தான் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார்.
நாம் விசாரித்த முழு விவரத்தையும் தொலைபேசி வாயிலாக அவரிடம் சொல்லியும் சில ஆதாரங்களை அனுப்பியும் கேட்டதற்கு அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. மற்ற சில அதிகாரிகள் ஊழல் நடந்துள்ளது ஊருக்கே தெரிந்துள்ளது நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்றனர்.
இந்தப் பூங்கா அமைப்பதற்கு எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டது. எந்த நிதி என்பது குறித்து எந்தவித தகவல்களும் அந்த பூங்காவில் தகவல் பலகையோ கல்வெட்டோ அமைக்கப்படவில்லை.
நேரடியாக நாம் அந்த பூங்காவிற்குள் சென்று மேற்பார்வையிட்டோம். அப்போது பொதுமக்கள் பணம் அதிகாரிகள் எப்படி வீணடித்திருக்கிறார்கள் தனது நண்பர்கள் உறவினர்கள் ஒப்பந்ததாரர்களுக்கு எப்படி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள் என்பதை வெளிப்படையாகவே தெரிந்தது.



மக்கள் பணத்தின் மதிப்பு தெரியாமல் சில ஃபிராடு ஒப்பந்ததாரருக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆதரவாக செயல்பட்டது தெளிவாகவே அந்த பூங்கா அமைத்ததில் தெரிந்தது.
பொது மக்களின் வரிப்பணத்தில் தான் நாம் சம்பளம் வாங்குகிறோம் என்பதை உணராத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பலமுறை நாம் தொடர்பு கொண்டதும் யார் எதற்காக பேசுகிறார்கள் என்ன காரணம் என்பதை கூட அவர் கேட்டு தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
தமிழ்நாட்டில் இவர் தான் தலைமைச்செயலாளர் போலவும் உதயநிதியும் மு.க. ஸ்டாலினும் தன் பாக்கெட்டில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டு ஆணவப்போக்குடன் செயல்படுவதை எதிர்க்கட்சிகளும் நாமும் கடுமையாக நமது கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
ஆர்எம்கே பொறியியல் கல்லூரி நிறுவனம் வழங்கிய பொருட்களை அரசு நிதியில் செய்ததாக ஃபிராடு செய்து, மோசடி செய்து, அரசு நிதியை தவறாக பயன்படுத்தி கொள்ளையடிப்பதற்கு காரணமாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் உடந்தையாக இருந்தாரா அல்லது இவரது பினாமி தான் அந்த பூங்காவை அமைக்க ஒப்பந்தம் எடுத்தாரா? எந்தெந்த நிறுவனங்களில் எந்தெந்த பொருட்களை வாங்கினார்கள் என்பது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பாரா?
மேலும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.