#hologram stickers; பூந்தமல்லி RTO அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹாலோகிராம் ஸ்டிக்கர் மாயம்.

March 14, 2026

By இரா. தேவேந்திரன்.

பூந்தமல்லி  RTO அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் திருடுபோய் உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவத்தில் அதிகாரிகள் மற்றும் ஒரு சில ஊழியர்களுக்கும், சில டுபாக்கூர் ரிப்போட்டர்கள் மற்றும் புரோக்கர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். Salem government employee looted crores; கோடிகளை கொள்ளையடித்த சேலம் அரசு ஊழியர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு. - chennireporters.com

பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் இயங்கி வருகிறது.  பூந்தமல்லி, ஆவடி, திருநின்றவூர், திருவேற்காடு, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் புதிய வாகனங்கள் வாங்கும் போது போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். 

அவ்வாறு புதியதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறையால் ஆலோகிராம் ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகிறது.  இப்படி வழங்கப்படும் ஸ்டிக்கர்கள் மூலம் பதிவு எண் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்படும் இதனால் போலியாக பதிவு எண் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்க முடியாது.

இதற்காக பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆலோகிராம் ஸ்டிக்கர்களில் 500 மாயமாகிவிட்டது என்றும் அதுபற்றி கடந்த ஒரு ஆண்டாக போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.  இதனால் தமிழ்நாடு அரசு ஆலோகிராம் ஸ்டிக்கர்கள் மாயமானதை கண்டுபிடிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.  இதனால் விரைவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் தற்காலிக பணியாளர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

இந்த திருட்டு எப்படி நடந்து இருக்க கூடும் என்று அங்கு உள்ள புரோக்கர்கள் சிலரிடம் நாம் நேரடியாக சென்று கேட்டோம். எழுதப் படிக்கத் தெரியாத டுபாக்கூர் ரிப்போர்ட்டர்கள் அதிகாரிகளை மிரட்டி செய்தி போட்டு விடுவேன் என்று மிரட்டும் சில டுபாக்கூர் பேர்வழிகள் அலுவலகத்தில் நாய் நுழைவதைப் போல அங்கும் இங்குமாக நுழைந்து செல்கின்றனர். கேட்டால் ஆர்டிஓ வை பார்க வந்தேன் பிரேக் இன்ஸ்பெக்டர் பூர்ணலதாவை  பார்க்க வந்தேன் என்று சொல்லி செல்கின்றனர்.

அந்த நேரத்தில் அலுவலகத்தில் உள்ள ஸ்டிக்கர்கள், லைசென்ஸ்கள் , ஆர் சி புக்குகள், பைனான்ஸ் ஆர்சிபுக்குகள் என பல விஷயங்கள் திருடு போய் உள்ளது. எனவே தினமும் அலுவலகத்திற்கு வந்து செல்லும் திருட்டு புரோக்கர்கள் டுபாக்கூர் ரிப்போர்டர்கள் ஃபிராடு பேர்வழிகள் அனைத்து திருட்டு நாய்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் சில நேர்மையான புரோக்கர்கள்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்கள் மாயமான நிலையில் அதிகாரிகள் வட்டாரத்தில் வெறும் 50 ஸ்டிக்கர்கள் மட்டுமே திருடுபோய் உள்ளதாக போலீசில் பொய் புகார் அளித்துள்ளனர்.

எனவே அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஆர்டிஓ, பிரேக் இன்ஸ்பெக்டர் ஆர்டிஓவின், பி.ஏ இந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து சினிமா பாணியில் சட்டை பேண்டை கழற்றி கைவிளங்கிட்டு அடி, அடி என அடித்துத் துவைத்தால் உண்மை வெளியே வந்து விடும் என்கின்றனர் சில நேர்மையான புரோக்கர்கள். பூந்தமல்லி RTO ரவிக்குமார் மற்றும் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் ஊழியர்கள்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.

பூந்தமல்லி ஆர்டிஓ ரவிக்குமார் அவர்களை சந்திக்க வரும் ஃபிராடுகள் டுபாக்கூர் புரோக்கர்கள் எழுதப் படிக்கத் தெரியாத ரிப்போர்ட்டர் சீனியர் ரிப்போர்ட்டர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலரும் ஸ்டிக்கர்களை திருடி சென்றிருக்கலாம் என்கின்றனர் அலுவலகத்தில் பணியாற்றும் குறைந்த அளவில் லஞ்சம் வாங்கும் ஒரு அதிகாரி.

எனவே ஆர்டிஓ ரவிக்குமார் ஏற்கனவே பணியாற்றிய ஆர்டிஓ ஸ்ரீதர் பிரேக் இன்ஸ்பெக்டர் காவேரி ஆகியோர் மீது போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து போலீஸ் அடி என்ன என்பதை காட்டினால் ஸ்டிக்கர் எப்படி திருடு போனது என்பதை தெரியவரும்.டேவிட்சன் ஆசீர்வாதம்".. குறி வைக்கும் பாஜக.. காரணமே இதுதான்.. புட்டு புட்டு வைத்த கரு.நாகராஜன் | who is the david asirvatham ips and why did bjp taget Intelligence department ...

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள்.

கோயில் காவலாளி அஜித் குமாரை அடித்து கொலை செய்வதற்கு மட்டும் போலீசாரின் லத்திகள் செயல்படும் என்றால் ஆர்டிஓ ரவிக்குமார், பிரேக் இன்ஸ்பெக்டர் பூர்ணலதா, ஆர்டிஓ ஸ்ரீதர், பிரேக் இன்ஸ்பெக்டர் காவேரி ஆகியோர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினால் ஸ்டிக்கர் எப்படி காணாமல் போனது என்கிற உண்மை பத்தே நிமிடங்களில் தெரிந்து விடும். காக்கிகள் லத்தியை நீட்டுவார்களா அல்லது கட்டிங் வாங்கிக்கொண்டு கட்டு முடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share:

இரா. தேவேந்திரன்.

March 14, 2026

Leave a Comment