#the unflappable pari ; காக்கி சட்டையில் கலங்கமில்லாத பாரி IPS.

March 22, 2026

By இரா. தேவேந்திரன்.

தமிழக காவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர் பாரி IPS.  இவரைப்பற்றி முகநூல் பக்கத்தில் இந்தரஜித் என்பவர் பல தகவல்களை எழுதி இருந்தார். அதை நாம் அப்படியே நமது வாசகர்களுக்கு தருகிறோம்.

நமது சென்னை ரிப்போட்டர்ஸ் இணையதளத்தின் ஆசிரியருக்கும் பல செய்திகளும் , சம்பவங்களும் தெரியும் அதை வேறு ஒரு பதிவில் பார்க்கலாம். இந்த பதிவில்  இந்தரஜித் அவர்கள் பல சம்பவங்களை குறிப்பிட மறந்துள்ளார். பாரி IPS மிகவும் எளிமையானவர் மிக சிறப்பாக பாடும் ஆற்றல் கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.

காவல்துறையில் ” கலியுக கம்பன் ” என்று பெயர் எடுத்தவர்களின் பட்டியலில் பாரி என்ற சீனியர் IPS அதிகாரியின் பெயரும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  இவரது அலமாரியில் IPC , CRPC போன்ற சட்ட புத்தகங்கள் அணிவகுத்து நிற்பதை காட்டிலும் , இலக்கிய , இதிகாச, காவிய, கவிதை புத்தகங்களே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்.

” கணீர் ” என்ற தேன்குரல் அரங்கத்தில் உள்ளவர்களை அப்படியே கட்டி இறுக்கிப்போட்டு விடும் நாற்காலியோடு நற்றமிழ் நாவில் நர்த்தனமாடும்  காவல்துறையில் இப்படி ஒரு கம்பீரக் காக்கியா ? என்று இருக்கையில் இருந்து எழ முடியாமல் மெய்மறந்து ரசிப்பார்கள் பொதுமக்கள். 

” செந்தமிழ் சொல்வேந்தர் ” என்ற ஒரு சிறப்புப் பெயரும் இவருக்கு இருக்கிறது. இந்த சீனியர் ஐபிஎஸ் அதிகாரிக்கு தமிழ் மட்டுமல்ல ஆங்கிலமும் ஆர்ப்பரிக்கும் இந்த இரு மொழி புலவர்பெருமானிடம்  காவல்துறையிலிருந்து பிரியா விடை பெற்றாலும் இன்னும் மேடைகளில் முழங்கிக் கொண்டே தான் இருக்கிறார் பாரி.

” எனது மூச்சு நிற்கும் வரை என் பேச்சு நிற்காது ” என்பவரின் இந்த பேச்சு பல்லாயிரயிரக்கணக்கான பள்ளி மாணவ , மாணவியர்களுக்கும் , கல்லூரி இளைஞர்களுக்கும் ஊக்கத்தையும் , உற்சாகத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.  ( Motivational Speach )

புல்லரிக்க வைக்கும் இவரது பைந்தமிழ் பேச்சு  களம் கண்டஞ்சிடும் பேடிகள் நெஞ்சினில் வீரத்தை தூண்டிவிடு  இங்கு இனம் எனும் வெறியை தூண்டியவன் இரு விழிகளை தோண்டி எடு  பாரியின் பரணி வில்லிலிருந்து வெளிப்படும் அம்புகளைப் போல , உணர்ச்சிப் பிழம்பாய் வெடித்து சிதறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை எந்த மிரட்சியும் இல்லாமல் கட்டியாண்டவர். 

இவரைப் பற்றி எழுதத் தொடங்கினால் பக்கங்கள் போதாது  சட்டம் ஒழுங்கை காட்டிலும் குற்றப் புலனாய்வில் கைதேர்ந்த அதிகாரி  ( CRIME SCENE INVESTIGATION ) குற்றம் நடந்தால் யாருக்கும் காத்திராமல் நேரடியாக களத்தில் இறங்கி கலக்கக் கூடியவர்.

குரூப் 1. அதிகாரி தானே சமாளித்து விடலாம் என்ற நினைப்பே இருக்காது எவரிடமும்  எவராலும் இவரை ஏமாற்ற முடியாது.  வேலை தெரிந்த வித்தகர் என்பதால் பய உணர்வு கீழுள்ள அத்தனை அதிகாரிகளையும் ஆட்டிப்படைக்கும்  இவரது திறமைகளை அருகிலிருந்து பார்த்த அனுபவம் ஒன்று நமக்கு கிடைத்தது.

அன்று அடையாறு மாவட்டத்தில் துணை கமிஷனராய் இருந்தார் பாரி (2006)  லத்திகா சரண் IPS,  மாநகர காவல் துறையின் முதல் பெண் கமிஷனர்  அன்று நடந்த ஒரு தடயமே கிடைக்காத கொலை வழக்கை , தானே களத்தில் இறங்கி இவர் Detection காட்டியதை கீழே உள்ள அதிகாரிகளாலும் சரி , பத்திரிகை நிருபர்களாலும் சரி காலத்திற்கும் மறக்க முடியாது. பாரி இங்கு மிக குறுகிய நாட்களே குடியிருந்த போது அன்று மாவட்டத்தில்
மிரட்ச்சியாய் வந்து விழுந்தது ஒரு கொலை , மற்றும் ஒரு ஆதாய கொலை  இரண்டையும் Detection காட்டிய பின்னரே அந்த குடியிருந்த வீட்டை காலி செய்தார் பாரி. இதில் ஆதாய கொலை மிகவும் சுவாரஸ்யமானது , 5/8/2006 அனிதா “என்ற இளம் பெண்ணை ( வயது 19 ) மிக மலிவான ஆதாயத்திற்காக ( இரண்டு சவரன் நகை, நானூறு ரூபாய் பணம் ) பிரபு என்கிற, ராஜ பிரபு என்கிற குற்றவாளி கொலை செய்து தப்பி ஓடிவிட்டான் ! தகவல் அறிந்த நிருபர்கள் பாரியை செய்தி கேட்டு பாடாய்படுத்தி விட்டனர்.

ஆனால் அடையாறு இன்ஸ்பெக்டராக இருந்தவர் காவல் துறையில் ” சிறப்பு காவல் படை ” ( Catogery. 3 ) என்ற மூன்றாவது பிரிவை சேர்ந்தவர் , என்பதால் IPC செக்க்ஷன்கள் அத்தனையும் அவருக்கு அலர்ஜி  இன்வெஸ்டிகேஷன் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்  அதுவும் GCR ( கொடும் குற்ற வழக்குகள் ) என்றால் அவருக்கு ஜன்னியே கண்டுவிடும்  ஆனால் மற்ற விஷயங்களில் படு சுறுசுறுப்பாக இருப்பார்.

கேள்விகளால் துளைத்து எடுத்தார் இன்ஸ்பெக்டரை பாரி  ” இல்ல சார்  அது ஒரு சாதாரண 174 கேசு ( தற்கொலை ) வயித்து வலியில அந்த பொண்ணே கழுத்த அறுத்துக்கிட்டு செத்துப் போயிடுச்சு  என்றதும் , SOC க்கு போனியா? இங்கோஸ்ட் போட்டு postmortom பண்ணியாச்சா? என்ற துணை கமிஷனரின் தொடர் கேள்விகளால் திக்கு முக்காடி போனார் இன்ஸ்பெக்டர்.அதிரடியில் இன்ஸ்பெக்டருக்கு முன்பே சம்பவ இடத்திற்கு (SOC ) ( ரிவர்வியூ அபார்ட்மெண்ட் , கிரசன்ட் பார்க் ரோடு , காந்திநகர், அடையாறு ) வந்துவிட்டார் பாரி. Inch by inch சம்பவ இடத்தை அலசி ஆராய்ந்தார்  ஆனால் ஆய்வாளரோ , அடையாறு மாவட்டமே ஆடிப் போயிருந்த அந்த டென்ஷனில் கூட , வரும் வழியில் இருந்த ” கேசட் கடையில் ” தன் மாத மாமூலை வசூலித்துக் கொண்டு தான் வேர்த்து, விறுவிறுக்க சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

விளங்காத, வில்லங்கமான அந்த இன்ஸ்பெக்டரை பிடி பிடியென்று பிடித்து விட்டார் பாரி  ஸ்பாட்டுக்கு வராமலேயே அது தற்கொலைன்னு என்கிட்டயே கதை விடுறியா ? அங்க கமிஷ்னர கேள்வி மேல கேள்வி கேட்டு நச்சரிக்கிறாங்க பிரஸ்காரங்க  வேலை தெரியாவிட்டா எதுக்கு உனக்கு Law and Order கேக்குது ?

” பேசாம TSP ல ( Tamil nadu Special Police ) அண்டாவை தூக்கிட்டு அலைய வேண்டியது தானே ? இது ஆதாய கொலை  விடியறதுக்குள்ள வேலையை முடிச்சாவணும்  நான் சொல்ற மாதிரி செய்  ஸ்பாட்டிலேயே ஸ்கெட்ச் போட்டு கொடுத்து விட்டார் அக்யூஸ்ட்ட தூக்கிட்டு எனக்கு தகவல் சொல்லு  இல்ல நாளைக்கு உன்னையே DSR ல 174 ரா ( தற்கொலை ) காட்ட வேண்டி இருக்கும் “என்ற பாரியின் பாய்ச்சலில் பயந்து நடுநடுங்கி போனார் இன்ஸ்பெக்டர்.பாரின் அறிவுறுத்தலால் , ரத்தக்கறை படிந்த குற்றவாளியின் கோட் (coat) சிக்கியது சுற்றி வளைக்கப்பட்டான் குற்றவாளி  மூன்று மாதத்திற்குள் அதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து , கேஸ் கமிட்டல் ஆகும் வரை விடவில்லை பாரி.

ஆனால் அதற்குள் அடுத்த துணை கமிஷனர் அடியெடுத்து வைத்தார் அடையார் மாவட்டத்தில்  பாரி வெளியேறிய பின் 4 வருடங்கள் கழித்து ( 5.3.2010 )அந்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.  இப்படி விரட்டி விரட்டி வேலை வாங்கும் வித்தை மிகச் சிலரிடமே இருக்கிறது காவல்துறையில்.

அந்தப் பட்டியலில் பாரியின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது  2018 ல் மேற்கு மண்டல ஐஜி ஆக இருந்து அங்கும் தன் முத்திரையை பதித்து
போலீஸிலிருந்து பிரியாவிடை பெற்றார் பாரி.

முல்லைக்கு தேர் கொடுத்த இந்த மன்னவன் , காவல்துறையில் பல்லக்கு தூக்குபவர்களை பக்கத்திலேயே சேர்க்க மாட்டார்  இது பாரியின் ஸ்பெஷாலிட்டி. காக்கி சட்டையில் கலங்கமில்லாத பாரி IPS.

Share:

இரா. தேவேந்திரன்.

March 22, 2026

Leave a Comment